சொற்கள் வற்றிய பாத்திரம்

சொற்கள் வற்றிய பாத்திரத்தில் உறக்கம் நிரப்பி மணல் கடிகாரம்  மெல்லக் கரைகையில் பனி சற்று குறைந்தாற் போலிருக்கிறது. பின்னர், பிரக்ஞை கரைந்து தூக்கம் நிறைகிற பொழுதில் சிறு கீற்றென எழும்பி மறையும், காத்திருக்கும் நீண்ட பனிப்படலத்தின் பயம். ஈஸ்ட்மென் கலர் புகைப்படமாக நீ புன்னகைக்கும் காட்சிகள்  காலை வேளைகளில் தோன்றாமல் போனால் துயிலுக்கு எனை சமர்ப்பித்து விட சம்மதமே.

பார்த்தீனியம்: குருதி பீறிடும் காயங்கள்

"துண்டு கொடுத்தாப் போலை இயக்கத்திலை இருந்து வெளியேறியிடலாமெண்டு நினைக்கிறீரா? எழுதி வைத்துக் கொள்ளும். நீரொரு அரசியல் விலங்கு. ஒருக்கா துவக்கு துவக்கினா சாகும் வரைக்கும் ஒருத்தராலை இயக்கத்தை விட்டு மனதளவிலை விலகேலாது. அது விடுதலைப் புலிக்கு மட்டுமெண்டில்லை. எல்லா இயக்கத்துக்கும் பொருந்தும்" (பக்-307) ஒரு கணம் நிமிர்ந்து உட்கார்ந்தேன். என்ன இது? இப்படி சர்வசாதாரணமாக எழுதி விட்டார் என வியப்படைந்தேன். ஒரு கணம் தீபன் திரைப்படம் நினைவுக்கு வந்தது. துவக்கு தூக்காமால் போனாலும், மனதளவில் விலகேலாத நானறிந்த … Continue reading பார்த்தீனியம்: குருதி பீறிடும் காயங்கள்

நக்‌சல்பரி கி ராஸ்தா!

இந்திய கம்யூனிச அரசியல் வரலாற்றில் மறுக்கவொண்ணாத முக்கியத்துவம் பெற்ற அத்தகைய நக்சல்பரிக்கு செல்லும் பாதை அருகிலிருக்கும் பொழுது செல்லாமல் விடலாமா?

சாய்ரத்: குறிஞ்சி மலர்

நாகராஜ் மஞ்சுளேவின் சாய்ரத் திரைப்படம், மராத்தி திரையுலகில் வரலாறு காணாத வெற்றியடைந்திருக்கிறது. 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டிருக்கும் முதல் மராத்தி திரைப்படமாக புகழ் பெற்றிருக்கிறது. அவரது முந்தைய திரைப்படமான 'ஃபன்றி'-யை கண்டவர்களுக்கும், தமிழில் 'காதல்' திரைப்படத்தைக் கண்டவர்களுக்கும் இப்படம் சற்றே ஏமாற்றம் அளிக்கலாம். ஆனால் அது பிரச்சினையில்லை.   ஏனெனில், சாதி ஆணவப் படுகொலைகள் குறித்து மைய நீரோட்ட சினிமாவில் பதிவு செய்வது, அதுவும் வணிக சினிமாவின் சட்டகத்திற்குள் நின்றவாறே (பிரமிப்பூட்டும் காட்சிகள், கோணங்கள், பாடல்கள்) … Continue reading சாய்ரத்: குறிஞ்சி மலர்

ஒரு ‘கம்யூனிஸ்ட்’ கிராமத்தில் நிகழ்ந்த காதல் கதை!

கதவு தட்டப்படும் ஓசை தொலைதூரத்தில் கேட்டது. திடுக்கிட்டு விழித்து எழுந்தவன், கதவைத் திறந்தேன். ஹவுஸ் ஓனர் தனது வழக்கமான அரை டிரவுசர், டீசர்ட்டுடன் நின்று கொண்டிருந்தார். கடுப்பை மறைத்து கொண்டு, “என்ன சார்?” என்றேன். “ஒனக்கு ஃபோன்பா” “யாரு?” “அந்தப் பையன் பிரேம் இல்ல, அவந்தான்” அது மொபைல்கள் இல்லாத காலம். அதாவது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு. ஹவுஸ் ஓனரின் போர்ஷனிலிருந்த கிணுகிணுக்கும் தொலைபேசிதான் மற்றொரு போர்ஷனில் வாடகைக்கு தங்கியிருந்த எங்கள் நால்வரின் ஒரே தகவல் தொடர்பு … Continue reading ஒரு ‘கம்யூனிஸ்ட்’ கிராமத்தில் நிகழ்ந்த காதல் கதை!

மெத்தப் பெரிய உபகாரம்

ஷோபா சக்தியின் எழுத்திற்கு உள்ள மாபெரும் பலம் என்ன? நீங்கள் ஒரு மோசமான மனச்சோர்வில் இருப்பினும் கூட, ஒரு சில பக்கங்களை கடந்து அவரது கதைக்குள் பயணிக்க தொடங்கி விட்டால், பின்னர் அக்கதை தானாக முடியும் வரை, நீங்கள் உங்களை விடுவித்துக் கொள்ள முடியாது. அவரது கதையும், கதை சொல்லும் முறையும் ஒரு பிசாசைப் போல உங்களை ஆட்கொண்டு விடும். அவரது சொற்கள் கொண்டிருக்கும் கவர்ந்திழுக்கும் வாதைக்கு நீங்கள் தன்னையே ஒப்புக் கொடுத்து விடுவீர்கள். 'கொரில்லா'-வை எதிர்கொண்ட பொழுதும், … Continue reading மெத்தப் பெரிய உபகாரம்

எனக்கொரு ரோஹித்தைத் தெரியும்.

எனக்கொரு ரோஹித்தைத் தெரியும். அவன் வசிக்கும் உண்டு உறைவிடப் பள்ளிக்கு சென்ற பொழுது இரு முறை அவனுடன் பேசியிருக்கிறேன். அவனுக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கலாம். அவனுடைய சூழலுக்கு பொருந்தாத அலாதியான பிரகாசம் அவன் கண்களில் இருந்தது. எனது மகனை விட நான்கைந்து வருடங்களே மூத்தவனான அந்தச் சிறுவன் ஒரு நாசமாய்ப் போன அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து என்னவாகப் போகிறான், அவனது எதிர்காலம் என்னவாக இருக்கும் என யோசித்துப் பார்த்திருக்கிறேன். நேற்றொரு ரோஹித் குறித்து … Continue reading எனக்கொரு ரோஹித்தைத் தெரியும்.

ஜல்லிக்கட்டு: சில கேள்விகள்.

ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் நிலவும் குழப்பம் மிகுந்த பல்முனைக் கருத்துப் போராட்டத்தில், சில கேள்விகள் எழும்பிய வண்ணமிருக்கின்றன. 1. சர்வதேச நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சதி குறித்து பேசும் காவிப்படை, கறிக்காக வெட்டப்படும் மாடுகளைப் பற்றிப் பேசுகிறது. அதனை ஏன் தடை செய்யவில்லை எனக் கேட்கிறது. தமிழின உணர்வாளர்கள் பலரும் அதே கேள்வியை அப்படியே எழுப்புகிறார்கள். மாட்டுக்கறி தமிழர் உணவில்லையா? இந்த வாதத்தை முன்னெடுப்பது குறித்து தமிழின உணர்வாளர்கள் தமது கண்டனங்களை எங்காவது பதிவு செய்திருக்கிறார்களா? 2. … Continue reading ஜல்லிக்கட்டு: சில கேள்விகள்.