துயர் சூழ்ந்த மும்பை

மும்பையின் நாலாபுறத்திலும் மழைநீர் சூழ்ந்த காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கிறோம். உயிரிழப்புகளும், தொடரும் மக்களின் துயரமும், அரசின் கையாலாகாத்தனமும், அலட்சியமும்… செய்திகளாய் தொடர்கின்றன.இக்கொடூர மழையைக் காணும் வேளையில், மும்பையின் செம்பூர் குடியிருப்பை நினைத்துக் கொள்கிறேன்.

செம்பூர் சேரிகளிலிருந்து சற்று முன்னேறிய ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியாகும்.நான் சில மாதங்கள் முன்பு அங்கே ஒரு வாரம் தங்கியிருந்தேன். செம்பூர் பகுதியின் 99% வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது. அங்கிருக்கும் இட நெருக்கடியில், கழிப்பறைக்கு இடம் விட்டு யாரும் வீடு கட்டுவதில்லை. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் தனியார் பொதுக் கழிப்பறைகளையே பயன்படுத்துகிறார்கள்.அரசுக் கழிப்பறைகள் வழக்கம் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. பாழடைந்த பழைய ஓட்டு வீடுகள், வறுமையில் வெந்த மக்கள்…அவர்கள் அனைவரும் இந்த மழையில் என்னவாகியிருப்பார்கள்..? தெரியவில்லை.

மும்பையிலிருந்து கிளம்புவதற்கு முதல் நாள் இரவு வெகு நேரம் உறக்கம் வரவில்லை. இரவு 2 மணியிருக்கும். சிகரெட் பிடிக்க வீட்டை விட்டு வெளியே வந்தேன். ஒரு குப்பைமேட்டுக்கருகே வெட்ட வெளியில் இளம்பெண்ணொருத்தி, அவள் தாய் காவலிருக்க மலம் கழித்துக் கொண்டிருந்தாள். அதிர்ச்சியில் உறைந்த நான் சட்டென முகம் திருப்பி வீட்டிற்கு திரும்பினேன். இயற்கை உபாதைகளை தீர்க்கவே வழியற்று புறந்தள்ளப்பட்ட அம்மக்கள், இயற்கையின் இந்த கோர தாண்டவத்தில் தப்பியோட திசைகள் ஏதும் மிஞ்சியிருக்காது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s