சந்திரமுகி…

நேற்று சந்திரமுகி திரைப்படம் பார்த்தேன்.ரஜினி படம் என்ற காரணத்திற்காக இத்துணை நாள் அப்படத்தை தவிர்த்து வந்தேன்.பிறகு கதையைக் கேள்விப்பட்டு, நேற்று பார்த்தேன்.
ரஜினியும்,பிறரும் வழக்கம் போல் எரிச்சலூட்டினார்கள். ஆனால், கதவுக்குள்ளிருந்து கொச்சைத் தெலுங்கில் கரகரத்த குரல் வருமே..அதற்குப் பிறகு படம் எனக்குப் பிடித்துப் போயிற்று. சந்திரமுகியின் கதை எனக்கு சில விஷயங்களை மனதில் எழுப்பியது. பெரும்பாலும் பெண்களுக்குத்தான் பேய் பிடிக்கிறது.கொடூரமான தனிமை, சுயேச்சையான முடிவுகள் எடுக்க வாய்ப்பற்று ஒடுக்கப்படுவது…இவையனைத்தும் மனநிலைப் பிறழ்வுகளுக்கு இட்டுச் செல்கிறது. புதுவையில் வாழ்ந்த ஆனந்தரங்கப் பிள்ளையின் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு பிரபஞ்சன் எழுதிய வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் நாவலில்,வெகு காலம் முன்பு அரசர்களின் அந்தப்புரங்களில் வாழ்ந்த தாசிகளின் வாழ்க்கை குறித்து ஒரு பகுதி வரும். மாதக்கணக்கில் அரசனின் வருகையை எதிர்நோக்கி அன்றாடம் சிங்காரித்துக் காத்திருக்க நேர்ந்த பெண்களின் அவலநிலை குறித்து துயரார்ந்த சொற்களால் சித்தரிப்பார் பிரபஞ்சன்.

மீரா நாயரின் ‘காம சூத்ரா’ சந்திரமுகியின் கதை போன்றதே. அரசர்களின் காமவெறி பிடித்த இழிவான, அருவெறுக்கத்தக்க வாழ்க்கையை மீரா நாயர் வெளிக்கொணர்வார். சந்திரமுகி … வெகு காலமாய் குகைகள், பழைய கோயில்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சென்று பார்க்க வேண்டும்..அவை குறித்து படிக்க வேண்டுமென்ற எண்ணத்தை மீண்டும் கிளறி விடுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s