களி துள்ளிய உனது கண்கள்…

“In vain have I struggled.
It will not do.
My feelings will not be repressed.
You must allow me
to tell you
how ardently I admire and love you..”*

“For the liveliness of your mind, I did,”**

அந்த
வசந்தகால மாலைப் பொழுதில்
நிலம் நனைத்த மழை நீரில்
நான்
கவிதைத் தாள்களில்
வல்லம் விட்டுக் கொண்டிருந்தேன்.

எதேச்சையாய்
அவற்றைப் பிரித்துப் பார்த்து
களி துள்ளிய உனது கண்களில்தான்
என் கவிதைகளின் உயிர் அறிந்தேன்.

அற்பம் கடந்த
நமது
உரையாடல்களின் பொழுதுகளில்,
சுற்றிலும் உதிர்ந்த இலைகளில்
உயிர்த் துடிப்புள்ள உனதுள்ளம்
எழுதிய கவிதைகள்…
இன்னமும்
காற்றில் மிதந்து கொண்டிருக்கின்றன.

பின்னர்
கெடுவிற்கான தூரம்
மெல்ல உதிர
பரஸ்பர தயக்கம்
புன்னகைகளுக்குள் ஒளிந்து கொண்டது.

இறுதியாய்
நீ கையசைத்து பிரிந்த பொழுது
டார்சியின் சொற்கள்
காலங்களையும்
காகிதங்களையும் தாண்டி
எனக்குள் விம்மிக் கொண்டிருந்தன.

வெறிதான இந்நாட்களில்
அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்…
பிறகொருபோதும்
காணக் கிடைக்கவில்லை
கண்ணீர் உகுக்காத வல்லங்களும்,
நீ கவிதை எழுதிய இலைகளும்,
களி துள்ளிய உனது கண்களும்.

*When Darcy proposes to Lizzie(Elizabeth)
**When Lizzie(Elizabeth) asks Darcy whether he admired her for her impertinence, and he replies,

quotes are from
Pride and Prejudice by Jane Austen
Oxford World’s Classics Edition,
ed. James Kinsley and Frank W. Bradbrook
(Oxford and New York: Oxford University Press, 1980).

Advertisements

One thought on “களி துள்ளிய உனது கண்கள்…

  1. This scene in the movie was truly a beautiful one…Lizzie’s helpless anger and passion at Darcy’s admission; and Darcy’s helplessness before his feelings…creates a beautiful fantasy about true love…
    You have created a poetic scenery, which is truly exceptional and beautiful…
    Hope the person for whom you wrote this will come across this timeless piece…
    Just one word: Poignant!

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s