வெம்மையில் அமிழ்ந்து
மெல்லப் பழகி
யுகங்கள் தாண்டி
பாலைவனம் கடக்கும் பொழுதில்
மீண்டும் எங்கிருந்தோ
படர்கிறது தென்றல்.
நாளொரு வண்ணம்
நுணுக்கமான இழைகளில்
இழையும் காதலும்,
இறுக்கும் விகசிப்பும்
சதுரங்கக் கட்டங்களாய்
மாறிக் கொண்டேயிருக்கின்றன.
வழிப்போக்கனாய்
வேடிக்கை பார்க்கையில்
அச்சமாயிருக்கிறது,
இறுதியாய்
காதல் வயப்படும் காலம்
கடந்து விட்டதோ?
Advertisements