உதிர்ந்த
பூக்கள்
என்னவாகின்றன?
காலத்தின்
இரக்கமற்ற வெம்மையில்
நாட்கள்
மறந்து
சன்னம் சன்னமாய்
கதறல்கள்
விகசிப்பாய்
அடங்கி,
பின்னர்
தவிப்புகளும் தூர்ந்து
உணர்ச்சிகள்
மடிந்து
அர்த்தமின்றி வெறித்து…
மொத்தமாய் உலர்ந்து
மக்கி
மடிகின்றன.
பூக்களை கூர்ந்து பார்,
அவற்றில்
சில வரிகள்
இலக்கணம்
மீறி
எழுதப்பட்டிருக்கின்றன.
Advertisements