பனித்துளிகள்…

குளிர் காற்று வீசும்
ஒரு இரவில்,
நீயும், நானும்,
பனித்துளிகள் உருகும்
இலைகளைத் தேடிப் போனோம்.
உருகி வழிந்தோடிய
பனி மழையில்,
சொற்களற்ற பரவசத்தோடு,
காலம் மறந்து
விளையாடினோம்.

விடிகாலைப் பொழுதில்
திசைகள் தெரிந்த பொழுது,
தொலைதூரத்தில்
வாகனங்களின் பேரிரைச்சல்
கேட்டது.
கடந்த சில நிமிடங்களில்
நிலம் நடுங்கியது.
காடு நிசப்தித்தது.

காட்டின் எல்லை வரை
மீண்டும் மீண்டும்
திரும்பிப் பார்த்தவாறே,
நாம் விலகி நடந்த பொழுது,
முட்கள் பட்டு
பாதங்களில் ரத்தம் கசிந்தது.
விகசிப்பின் ரணங்களில்
வந்த பாதை மறந்து,
கால்கள் பின்னோக்க,
மனதால்
கடந்து சென்ற கணங்களில்…
பெரும் மழை பொழியத் துவங்கியது.

ஒரு வேளை
விலகி நடக்காமலிருந்தால்,
இப்பேய் மழையில்
பனித்துளி உருகிய சத்தம்
கரைந்து போயிருக்கும்.
இனி
நிலம் நனைக்கும்
ஒவ்வொரு மழை நாளிலும்,
பால் நிலவு
பெருகி வழியும்
ஒவ்வொரு பொழுதிலும்,
தூறல்களோடு
துளிர்க்கும்
பனி படர்ந்த இரவின்
அழகான நினைவுகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s