நரகம்…

இந்திய ராணுவத்தில் பணியாற்றி, காயத்துடன் சொந்த மண்ணுக்குத் திரும்பி, மலைப்பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவரான ரவீந்திர பிரஹான், போரில் காயம் உண்டானபோது ஏற்பட்ட அதிர்வைக் காட்டிலும் கூடுதல் அதிர்வுடன் சொல்கிறார். “நாங்கள் எங்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு திரும்பினால் மட்டுமே போக முடியுமாம். We can never go back!”…

…தீக் காயங்களுடன் உயிர் பிழைத்த 8 வயது சிறுமி நம்ரதா, 8 ஆயிரம் பேர் தங்கியிருக்கும் ராய்கா மாவட்ட முகாமில், சொந்த மண்ணிலேயே அகதிபோல தங்கியிருக்கிறாள். “இந்துக்கள் எனது வீட்டை தீ வைத்துக் கொளுத்தினார்கள். என் முகம் தீயில் வெந்து விட்டது. என்னால் தூங்க முடியவில்லை. கெட்ட கனவுகளாக வருகிறது. யாரோ என்னைத் துரத்துகிறார்கள். வீட்டுக்குப் போக பயமாக இருக்கிறது” என்று நடுங்குகிறாள்.

கீற்று

சுமார் 45 நிமிடம் அந்தக் கும்பல் அவரை அடித்து நொறுக்குகிறது. தோளிலும், கையிலும் , மண்டையிலும் அடிபட்ட பாதிரியார் சுயநினைவற்று வீழ்கிறார். அவரை குளியலறையில் அடைத்த கும்பல், இல்லத்தில் இருக்கும் ரஜ்னி மஜ்கி எனும் 19 வயதுப் பெண்ணை உயிரோடு கொளுத்துகிறது. “ஃபாதர், என்னைக் கொளுத்துகிறார்கள்; எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்று அந்தப் பெண் கத்துவது அரை நினைவோடு மயக்கத்திலிருக்கும் பாதிரியாரின் காதில் மெல்லக் கேட்கிறது. இறுதியில் அந்தப் பெண்ணைக் கொன்ற கும்பல் சேவை மையத்தை தீ வைத்துக் கொளுத்துகிறது. தற்போது உடலில் பல எலும்பு முறிவுகளுக்காக மும்பையில் சிகிச்சை பெறும் இந்தப் பாதிரியார், உதவி கேட்டு அந்த இளம் பெண் கதறியது தன் வாழ்நாள் முழுவதும் துரத்திக் கொண்டே இருக்கும் என்று வருந்துகிறார்.

புதிய ஜனநாயகம்

This is not new. Neither the feeling of impotent rage nor the happening that hurts is new. But every time such a thing happens, it hurts. It puts me to shame. (இது புதிதல்ல. இத்தகைய கையாலாகாத ஆவேசம் ஏற்படுவதான உணர்வும், காயப்படுத்துகிற சம்பவங்களும் புதிதல்ல. ஆனால், எப்பொழுது இவ்வாறு நிகழ்ந்தாலும், அது ஒரு ரணமாகி, என்னை அவமானத்தில் தள்ளுகிறது. )

மருத்துவர் ருத்ரன்

Maza aata hai na, saheb [I enjoy it]… I came back after I killed them them, called up the home minister and went to sleep… I felt like Rana Pratap, that I had done something like Maharana Pratap… I’d heard stories about him, but that day I did what he did myself.(அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது… அவர்களை கொன்ற பின்னால் நான் திரும்பி வந்தேன். உள்துறை அமைச்சருக்கு போன் செய்து விட்டு தூங்கப் போய் விட்டேன். நான் ராணா பிரதாப் எனும் மகா சக்கரவர்த்தியைப் போல உணர்ந்தேன்… நான் அவரைப் பற்றிய கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன்… ஆனால் அன்றைக்கு நான் அவராகவே உணர்ந்தேன்)

பாபு பஜ்ரங்கி

நிர்க்கதியாய்...
நிர்க்கதியாய்...

சொற்களிலிருந்தும்
பிம்பங்களிலிருந்தும்
வழிந்து கொண்டிருக்கிறது,
நூற்றாண்டுகளின் நிணம்.
நாலாத் திசைகளிலிருந்தும்
செவிப்பறைகள் கிழியும் வண்ணமாய்
கோரப் பற்களில்
சிக்கிய சதைத்துண்டுகள்
அறுபடும் பேரிரைச்சலோடு,
பாபு பஜ்ரங்கி
வெறி கொண்டு குரைக்கிறான்.
தூணிலும், துரும்பிலும்
எங்கும்
வரம்பின்றி
முளைத்து கிடக்கிறது திரிசூலம்.
இலக்கற்று பாயும் தோட்டாக்கள்
எரிகின்ற வீட்டில் எண்ணெயாய்
மடிந்து வீழ்கின்றன.
சவங்கள்
மின்னல்களாய்
மின்னி மறைகின்றன.
சுழன்றடிக்கும் நச்சுக் காற்றில்
சிக்கிய சருகுகள்
சிறைக் கம்பிகளில்
மோதி விழுகின்றன.
காணும் திசையெல்லாம்
பெருகிப் பல்கும்
கண்ணீரின் தடாகத்தில்
சுயம்சேவக்குகள்
சிறுநீர் கழிக்கிறார்கள்.
அசைவின்றி
தடித்துக் கிடக்கிறது தேசம்.
நரகம்
ஆகாயத்திலா இருக்கிறது?

Advertisements

7 thoughts on “நரகம்…

 1. //நரகம்
  ஆகாயத்திலா இருக்கிறது?//

  நல்லவர்கள், செத்த பின்பு சொர்கத்திற்கு போவார்கள் என்று இந்து மதம் சொல்கிறது… அதன் அர்த்தம், சாகும்வரை நரகத்தில் இருக்க வேண்டுமென்பதே! அர்த்தமுள்ள இந்து மதம்?!!!!!

  Like

 2. hindutuva,parpaneeya bayangaravatham nattai azhikkum nachu ayudham. idanai edhirthu porada periyariya ,abbetkariya porayudhame thevai.

  Like

 3. சொர்க்கத்தின்
  சாவிகள் பாவிகளின்
  கைகளில்

  கலகம்

  Like

 4. How much has this world sunk to! We need such voices to restore something at least remotely sane. Your words invoke strong images, which are scary…to say the least. Keep writing.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s