கடவுளே, கருணை காட்டு!

நேற்று தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலினால் விளைந்த மரணங்கள் குறித்த செய்தியை எல்லோரும் படித்து கொண்டிருக்கிறோம். பார்த்து கொண்டிருக்கிறோம். க​டைசி நிமி​டத்தில்,​​ 2 ரயில்​கள் புறப்​ப​டும் பிளாட்​பார்ம்​கள் மாற்​றப்​பட்​ட​தால்,​​ ரயி​லைப் பிடிப்​ப​தற்​காக பய​ணி​கள் முண்​டி​ய​டித்​துக் கொண்டு ஓடியதில் இந்த துய​ரச் சம்​ப​வம் நிகழ்ந்​துள்​ளது. பொறுப்பற்ற அதிகாரிகளின் கடைசி நிமிட நிர்வாகக் கோளாறின் விலை, இரு அப்பாவி உயிர்கள்! ப​லி​யான பெண் பகல்​பூ​ரைச் சேர்ந்த சோனி ​(35) என்று கண்​ட​றி​யப்​பட்​டுள்​ளது.​ இறந்​து​போன சிறு​வ​னுக்கு சுமார் 10 வயது இருக்​கும்,​​ அவன் யார் என்​பது அடை​யா​ளம் காணப்​ப​ட​வில்லை.

இந்தியாவில் மனித உயிர்தான் எத்துணை மலிவானது? மம்தா பானர்ஜி தொலைக்காட்சியில் உதிர்த்த முத்து அதனை விடவும் அதிர்ச்சி தருவதாக இருந்தது. பொறுப்போடும், குற்றவுணர்வோடும் பதில் சொல்ல வேண்டிய ரயில்வே அமைச்சர் என்ன கூறினார் தெரியுமா? “மக்கள்தான் தங்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்!”

வருந்துகிறேன், எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன் என்றெல்லாம் சொற்களை உதிர்ப்பது பொருளற்றதாகப் படுகிறது. அதே வேளையில், ‘வளர்ந்து இந்திய வல்லரசின் சாதனைகள்’ அதிர்ச்சியையும், சினத்தையும் உண்டாக்குகின்றன. நமது நாடு எப்பொழுதும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கண்ட நாடு. அதனால் தான், ஒரு புறம்,1997-லிருந்து 2005 வரை, கடன் சுமை தாளாமல், விவசாயம் செய்து வாழ முடியாமல், 1.5 இலட்சம் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு  மடிந்திருக்கிறார்கள். புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டு மடிகிறார் என பத்திரிக்கையாளர் சாய்நாத் முதலானோர் செவிடர்களின் காதில் சங்கு ஊதிக் கொண்டிருக்கிறார்கள். மறு புறம், இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு சீனா அஞ்சி நடுங்கிறது, அமெரிக்காவுக்கு பீதியில் பேதி வந்து விட்டது என தொலைக்காட்சியில் ‘பொருளாதார நிபுணர்கள்’ ஆரவாரக் கூச்சல் போடுகிறார்கள். தனது நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகளை, இந்த நாட்டின் முதுகெலும்பு என்று காந்தித் தாத்தாவும், நேரு மாமாவும், படேல் சித்தப்பாவும், போஸ் பெரியப்பாவும் போற்றி மகிழ்ந்தார்களே, அந்த விவசாயிகளை சிறிதும் கணக்கில் கொள்ளாத ‘வளர்ச்சி’ நாட்டின் வளர்ச்சி என்றால், நாடு என்பதன் பொருள் என்ன, வளர்ச்சி என்பதன் பொருள் என்பதுதான் புரியவில்லை.

குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட அற்ற அலட்சியமும், எதற்கும் கவலைப்படாத தடித்த தோலின் பொறுப்பின்மையும்தான் தில்லி சம்பவத்திற்கு காரணம். ஆனால், அது தில்லியில் மட்டுமல்ல, எங்கும் நிறைந்த பரம்பொருளாய் நாடு முழுவதும், அதிகாரிகள், அரசியல்வாதிகள், மக்கள் என வேறுபாடின்றி விரவிக் கிடக்கிறது. எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை. ஆனால், இது போன்ற தருணங்களில் கடவுள் இருக்கக் கூடாதா என ஏங்குகிறேன். பலியான சோனி முதல் அடுத்த அரை மணி நேரத்தில் எங்கோ கண்காணா கிராமத்தில், பூச்சி மருந்தைக் குடிக்கப் போகிற பெயர் தெரியாத விவசாயி வரை, இந்த நாட்டின் சபிக்கப்பட்ட மக்களிடம், கடவுளே, நீ கொஞ்மேனும் கருணை காட்டக் கூடாதா?

புகைப்படம்: தினமணி, 17-05-10

Advertisements

One thought on “கடவுளே, கருணை காட்டு!

  1. தொடர்ந்து கேட்கப்படும் வேண்டுதல்களுக்காக வேண்டாவெறுப்பாகக்கூட வராத செவிட்டுக் கடவுள், வேண்டாத இது போன்ற நிகழ்வுகளுக்காக வேண்டுமாவது வந்து தொலைக்கக் கூடாதா என்றுதான் சில நேரங்களில் நினைக்கத் தோன்றுகிறது. அப்படி வந்தாலும் மமதாபானர்ஜிகளுக்குத்தான் உதவி புரிவான் என்பதுதான் நிதர்சனம்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s