பிறகொரு நாளில்
உனது தொலைநோக்கியின் வழியே
உலகம் பார்க்கும் பொழுதில்
என் இதயத்தில்
வழியும் இரத்தத்தில்
உனது வார்த்தைகள் கசிந்திருந்தன…
கசிந்த வார்த்தைகள்
கவிதையாய் மறுபிறவி எடுக்கையில்
அதன் பெயர் காதல் என்றானது…
அதன் பெயர் தாண்டி
உருவம் தெளிவாக தெரிகையில்
தொட்டுணர முடிகையில்…
எனது வார்த்தைகள்
வழக்கிழந்தன…
Advertisements