நெருப்பு – II

என்ன சொல்வது?
என்ன வெளிப்படுத்துவது?
என்ன செய்வது?

உன்னை கண்டிப்பதா?
அதற்கான தகுதி எனக்கு உண்டா?
உனக்காகக் கதறி அழுவதா?
தன்னை நொந்து கொள்வதா?
நம்மை நொந்து கொள்வதா?
ஆவேசம் கொள்வதா?
அடங்கி விடுவதா?

என்ன செய்வது?

சொற்கள்…
சொற்கள் மட்டுமே போதுமா?

மூலக்கொத்தளத்தில் உறங்குபவன்
அன்று எரிய விட்ட தீயின் ரணமே
இன்றளவும்
அவ்வப்பொழுது
நினைவில் எழும்பி
இதயம் கிழித்துக் கடக்கும் பொழுதில்…
நீ…
நீ ஏன் இப்படிச் செய்தாய்…?

மொத்தமாய் மரத்து விட்ட சமூகம்
உன் உடல் தின்ற
நெருப்பினால் உணர்வு பெறும் என்றா?
உணர்வு…
உணர்வு பெறுமா சமூகம்?
உணர்வு பெறுவார்களா மக்கள்?
அது நடக்குமா?
என்றேனும் நடக்குமா?

நான் நம்ப விரும்புகிறேன் செங்கொடி…
நடக்கும் என நம்ப விரும்புகிறேன்.
உனக்காக நம்ப விரும்புகிறேன்…

விசும்பல்கள் மாத்திரமே ஒலித்தாலும்,
வீர வசனங்கள் மாத்திரமே ஒலிக்கும்
என இரண்டாண்டுக்கு முந்தைய நிகழ்வுகள்
மூளையில் அறைந்து சொன்னாலும்,

உனக்காக…
அருமை செங்கொடி…
அன்பு மகளே…
உனக்காக நான் நம்ப விரும்புகிறேன்…
உணர்வு பற்றும்…
உனதுடல் தின்ற தீயின் ஆவேசத்தோடு
நாடு முழுதும் பற்றியெறியும்
என நம்ப விரும்புகிறேன்.
நம்புவேன்.

Advertisements

2 thoughts on “நெருப்பு – II

  1. நேற்று வினவில் வெளிட்ட கட்டுரையில் செங்கொடி பற்றி படித்து, கண்கலங்கினேன். அரசியலற்ற மொக்கைத்தனத்தால், இன்னும் எத்தனை உயிரை இப்படி இழக்க போகிறோமோ!

    அழுத்தமான பதிவு தோழர். என் தளத்திலும் பகிர்ந்துள்ளேன்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s