இதுவரை முடிவுறாத
கருந்துளையின்
நீண்ட பயணத்தில்,
தலை திருப்பிப் பார்க்கும் தருணம்
பற்றி வந்த இழைகளின் வேர்கள்
மங்கலாகக் காட்சியளிக்கின்றன.
எங்கோ தொலைதூரத்தில்
அடிவானத்தில் அவை கிடக்க வேண்டும்.
மருந்தின் கிளை பற்றி
மெல்ல ஊர்ந்து செல்லும் பொழுதுகளில்,
மாயப் புதிரின் பிரக்ஞை
மிச்சமிருக்கும் மொழியையும்
கீறலின்றி கொன்று போடுகிறது.
இருண்மையின்றி
இனியேது சொற்கள்?
…
கலைத்துப் போடு.
கைதொடும் வண்ணம் கொண்டு
வேண்டிய மட்டும் தீட்டு.
ஆங்காங்கே காகிதத்தை கிழித்து விடு.
மொத்தத்தில் மாயப் புதிராக்கு.
வேறெப்படிதான்…
Advertisements
Your painting is just awesome!
LikeLike