கரை தொடும் அலைகள் #3

நேற்று இரவு ஹேக்கர்களால் வெளியிடப்பட்ட ‘The Interview’ திரைப்படம் பார்த்தேன். சோனி நிறுவனம் தயாரித்து வெளியிடவிருந்த இத்திரைப்படம், ஹேக்கர்களால் ‘திருடப்பட்டு’ இணையத்தில் வெளியிடப்பட்டதையும், அதனையொட்டி அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் இடையில் காரசாரமான அறிக்கைப் போர்கள் நிகழ்ந்ததையும் பலரும் அறிந்திருக்கக் கூடும். திரைப்படம் வடகொரியாவின் அதிபர் kim jong-un-ஐ, ஒரு அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் பேட்டி காண்பதையும், அதன் மூலம் அவரை ‘அம்பலப்படுத்துவதையும்’, ‘நகைச்சுவையாக’ விவரிக்கிறது.

வடகொரிய அரசியல் வரலாற்றை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. கிம்-ன் வாரிசு அரசியல், சர்வாதிகாரத் தன்மை பற்றி ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறேன். அதே வேளையில், நான் ஹாலிவுட் படங்களும் அதிகம் பார்ப்பதில்லை. ஆனால், ஒரு விசயம் மட்டும் தெளிவாகத் தோன்றுகிறது. இத்திரைப்படத்தை ஒரு அமெரிக்கப் பிரச்சாரப் படம் எனக் கூறுமளவிற்குக் கூட தகுதியற்றது. ஒரு கீழ்த்தரமான குப்பை என்றுதான் கூற வேண்டும். அரசியல் நையாண்டி திரைப்படங்கள் வரிசையில் முதலில் நினைவிற்கு வருவது ‘Great Dictator’ தான். அந்த வரிசையில் எண்ணற்ற திரைப்படங்கள் உண்டு. ஏன், மார்க்சியத்தை, சோசலிச அரசுகளை, தலைவர்களை கிண்டல் செய்த படங்கள், குறிப்பாக அமெரிக்கப் படங்களே உண்டு. ஆனால், அவை எவற்றோடும் இந்தக் குப்பையை ஒருக்காலும் ஒப்பிட முடியாது.

அனேகமாக, சோனி நிறுவனம் சி.ஐ.ஏ-வின் கைக்கூலி நிறுவனங்களில் ஒன்றாகத் தான் இருக்க வேண்டும். வடகொரியா அரசு சோனி நிறுவன ஹேக்கிங்கில் தனக்கு பங்கில்லையெனத் தெரிவித்து விட்டது. ஆனால், இத்திரைப்படத்தை காணும் எந்தவொரு குறைந்தபட்ச சர்வதேச அரசியல் புரிதல் உடைய எவருக்கும், ஒரு வேளை வடகொரியா அவ்வாறு ஹேக் செய்திருந்தால், அது ஒரு சரியான நடவடிக்கை, அவசியமான நடவடிக்கை என மட்டுமே எண்ணத் தோன்றும்.

புத்தகக் கண்காட்சியில் கிழக்கும், காலச்சுவடும் மிகப் பெரிய ஸ்டால்களை அமைத்திருந்தனர். வருங்காலங்களில் இவ்விரண்டு பதிப்பகங்களும் ஆங்கிலப் பதிப்பகங்களுக்கு இணையாக வளர்ந்து விடுமெனத் தோன்றுகிறது. அலைகள் வெளியீட்டகத்தின் ‘அவர்கள் அபாயத்தில் வாழ்ந்தார்கள்’ (They lived dangerously) நூலை வாங்கினேன். நூலாசிரியர் மன்மத்நாத் குப்தா, சந்திரசேகர ஆசாத், ராம் பிரசாத் பிஸ்மில் ஆகிய புரட்சியாளர்களுடன் இணைந்து, ஆங்கில அரசுக்கு எதிரான 1925 காக்கோரி கொள்ளை வழக்கில் ஈடுபட்டவர். பல்லாண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். அவரது ‘பகத்சிங்கும், அவரது காலங்களும்’, ‘காந்தியும், அவரது காலங்களும்’ ஆகிய நூல்கள் அவற்றின் செறிவான நடைக்காகவும், விரிவான வரலாற்றுக் கண்ணோட்டத்திற்காகவும் நாம் விரும்பிப் படித்தவை. அவர் மீதான நேசத்தின் காரணமாக, அவரது நூலை மொழிபெயர்த்து வெளியிட்ட சிவத்திற்கு நன்றி கூற விரும்பினேன். அவரைக் காண இயலவில்லை.

அரங்கின் வெளியே பெருமாள் முருகனைக் காண முடிந்தது. யாருடனோ அலைபேசிக் கொண்டிருந்தார். கைகுலுக்கி ஆதரவு தெரிவித்தேன். நேற்று மதியம் நாடு தழுவிய அறிவுஜீவிகள், எழுத்தாளர்களின் கண்டன அறிக்கையை வாசித்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. ‘மாதொருபாகன்’ நாவலை இதுவரை படிக்கவில்லை. இப்பொழுது வாங்கிய நூல்களில் முதல் நூலாக அதனைத் தான் படிக்கவிருக்கிறேன். இத்தகைய உந்துதலை ஏற்படுத்தும் சாதிய, கலாச்சாரப் பாதுகாவலர்களுக்கு நன்றி.

உள்வாங்கிய கடல்
ஆழிப்பேரலைகளாக எழுந்த பின்னால்,
தொடர்ந்ததொரு நீண்ட நெடிய இருண்ட இரவில்
கடலுக்கு வெளியில் வாழும் மீனவர்கள் மாத்திரமல்ல…
கடலுமே அலைகளைக் கண்டு அஞ்சியது.
காலம் மறந்த மோனம் கழிந்து
அலைகள் மீண்டும் பரவிய பொழுது,
மெல்ல மெல்ல அவை கரை தொட்ட பொழுது,
யுகம் மாறியிருந்தது.

(அலைகள் வரும்)

Advertisements

One thought on “கரை தொடும் அலைகள் #3

  1. அலைகள் ஓய்வதில்லை…இந்த பதிவை எழுதியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s