கரை தொடும் அலைகள் #4

(ஃபேஸ்புக்கில் பகிர்ந்தவற்றிலிருந்து…)

இந்தப் பாடல் வெளியான நாளிலிருந்து மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். துவக்கத்தில் மெல்ல விரியும் இசைக் கோர்வையும், தொடரும் ஏறத்தாழ ஒரு இதமான கிறிஸ்தவப் பாடலுக்கு இணையான எளிமையுடன் கூடிய வரிகளும், பாடகர்களின் வித்தியாசமான அதே வேளையில் இனிமையான குரல்களும், அவர்கள் இயல்பாக, மிகையின்றி பாடும் விதமும், பரவிய வண்ணமிருக்கும் இரைச்சலற்ற பின்ணணி இசையும்…. ஆகாசத்தில் ஒரு எளிய பறவையாய், சுதந்திரமாய் பறக்கிற உணர்வை ஒவ்வொரு முறையும் தருகின்றன.

கடந்த வாரம், பெரியவர் Arun Giridhari-யின் பரிந்துரையின் பேரில், மேஜிக் லேண்ட்டர்ன் குழுவின் ‘பொன்னியின் செல்வன்’ நாடகம் பார்க்க சென்றிருந்தோம்.

நான் பொன்னியின் செல்வன் நாவல் படித்ததில்லை. நண்பர்கள் பலரும் அது குறித்து சிலாகித்த பொழுதும் எனக்குப் படிக்கத் தோன்றியதில்லை. புனைவு தரும் சுதந்திரத்தில் வரலாற்றை வெறுமனே வெட்டிப் பெருமையாக்கி, உண்மைகளைத் திரிக்கும் நாவல்கள் மீது எனக்குள்ள ஒவ்வாமையே காரணம். நான் நினைத்தது தவறில்லை என்பதை நாடகம் நிரூபித்தது.

மற்றபடி, மூன்றரை மணி நேர நாடகம் என்ற அளவிலும், அவர்களது கடுமையான உழைப்பிலும் குறையில்லை. ஆனால், பலருக்கு தமிழ் உச்சரிப்பே தடுமாற்றமாக இருந்தது. ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்த தமிழ்ப் பிள்ளைகளாக(சிங்கத் தமிழன் நினைவு வருகிறதா?) இருக்கக் கூடும். எதிர்வரும் காலங்களில் தமிழ் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி மனனம் செய்து நடித்தாலும் ஆச்சரியமில்லை.

ஆதித்ய கரிகாலனாக நடித்தவரும், பார்த்திப ராஜாவாக நடித்தவருடையதுமான நடிப்பாற்றலும், அவர்களது உடற்கட்டும், உடல் மொழியும் அருமையாக இருந்தது. மற்றபடி, மீசை கூட இல்லாத சுத்தத் தமிழ் வீரன் வந்தியத் தேவன், தூக்கலான மயிலாப்பூர் வாசனை, இத்யாதி, இத்யாதி எனப் பிரம்மாண்டமான, அதே வேளையில், டிபிக்கல் ஆழ்வார்ப்பேட்டை சபா நாடகமாகவே இருந்தது.

பழுவேட்டரையராக மு.ராமசாமி நடித்திருந்தார். அவரது ‘துர்க்கிர அவலம்’, ‘ஸ்பார்ட்டகஸ்’ போன்ற நிஜ நாடக இயக்க நாடகங்களின் காலம் முடிந்து, இன்று மீண்டும் தோன்றும் ஆர்.எஸ்.மனோகர் வகை பிரம்மாண்டங்களின் காலத்தில், அவரைப் அத்தகைய பாத்திரத்தில் பார்ப்பது, சிங்கம் தயிர்சாதம் சாப்பிட்டதைப் பார்ப்பது போலிருந்தது. (உபயம்: சாம்)

மியூசிக் அகாடமியில் காசு கொடுத்தால் கூட, ஶ்ரீஜித் சுந்தரத்தின் ‘மொளகாப் பொடி’ நாடகத்தை அரங்கேற்ற அனுமதிப்பார்களா என யோசித்துக் கொண்டிருந்தேன். பொன்னியின் செல்வன் நடனக் காட்சிகளில், லிவிங் ஸ்மைல் வித்யா குழுவினர் பறந்து சுழன்றாடிய காட்சிகள் நினைவுக்கு வந்தன.

பிரம்மாண்டம் எனும் சொல்லின் உண்மையான அர்த்தம் என்னவென்பதை யோசிக்கத் துவங்கினேன்.

ஒரு சொல் கூடப் புரியவில்லை. எனினும், குரலில் கசியும் காதலும், இசைந்து மிதந்த வண்ணம் தொடரும் தபலா இசையும் உருவாக்கும் மயக்குகிற போதையிலிருந்து(nasha) எழ மனதின்றி, மீண்டும் மீண்டும் கேட்ட வண்ணமிருக்கிறேன். ஜக்ஜித் சிங்கின் ஒரு கஜலில் மனதைப் பறிகொடுத்த உணர்வு…

http://www.saavn.com/p/song/malayalam/Bangalore-Days/Aethu-Kari-Raavilum/JR4HVyVaGmo

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s