பார்ப்பன வெறுப்புக் குற்றமும், மேல்சாதி சலிப்பும்!

(ஃபேஸ்புக்கில் பகிர்ந்தவற்றிலிருந்து…)

“பார்ப்பன வெறுப்புக் குற்றம்” என்பது எவ்வாறு எல்லையற்று மிகைப்படுத்தப்பட்ட சொல்லாடல் என்பதையும், அதனைக் கட்டியமைக்கும் கருத்துருவாக்கத்தில் முனைந்துள்ள அறிந்தே நடிக்கும் அறிவாளிகளை, கருத்துத்தளத்தில் முறியடிப்பதும் காலத்தின் தேவை. அத்தகைய எதிர்வினைகளை ஆங்கிலத்தில் கொண்டு செல்வதன் அவசியத்தையும் வினையின் மொழி சேர்த்தே உண்டாக்கியுள்ளது.

தமிழகத்தில் பார்ப்பன வெறுப்புக் குற்றம் நிச்சயமாக இல்லாத போதிலும், பார்ப்பன வெறுப்பு இல்லையா? ஆம். நிச்சயம் இருக்கிறது. அது ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான ஒடுக்கப்படுபவர்களின் நியாயமான வெறுப்பு. ஒடுக்குமுறையாளன் தன்னை மாற்றிக் கொள்ளும் வரை, ஒடுக்குமுறையும், மேலாதிக்கமும் ஒழியும் வரை, அது நீடிக்கவே செய்யும். அதுவே இயல்பானது. யதார்த்தமானது.

ஆனால், தமிழகத்தில் வெறுப்புக் குற்றம் நிறையவே உண்டு. நேற்று கொலையுண்ட கோகுல்ராஜ் முதற்கொண்டு எண்ணிலடங்கா தாழ்த்தப்பட்ட மக்கள் அத்தகைய குற்றங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதனை பார்ப்பனர்களா செய்தார்கள் என்பதுதான் அவர்களின் அடுத்த கேள்வி.

இளவரசனுக்காக இந்து முண்ணணியும், கோகுல்ராஜுக்காக ஆர்.எஸ்.எஸ்-சும் நடத்திய போராட்டங்கள் எத்தனை என்பதை அவர்களும், அவர்களது அறிவுச் சேகரமாக (think tank) விளங்கும் பத்ரியும், ஜெமோவும் விளக்கினால், பதிலளிக்க ஏதுவாக இருக்கும்.

ஒரு பூணூல் அறுக்கப்பட்டால் மட்டும் அலறித் துடிப்பவர்கள், இத்தகைய தருணங்களில் மட்டும் அடக்கி வாசிக்கிறார்களே? தேர்ந்தெடுத்த மெளனத்துடன், பேச வேண்டிய தருணங்களில் பேசாமலிருப்பதும் வெறுப்புக் குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதன்றி வேறென்ன?
தனது சொந்த சாதி அடையாளங்கள், திமிர், ஆதிக்கவெறிக்கு எதிராக குரல் கொடுக்க முன்வராத எவரும், தனது சாதி வெறுப்பை சந்திக்கிறது எனப் புலம்பினால், அவரும் ஒரு முழுமுற்றான சாதிவெறியர் மாத்திரமே.

வேடிக்கை என்னவென்றால், சாதி ஒழிப்பு இலட்சியத்துடன் போராடும் இயக்கங்ளின் மீதே மேற்கூறிய கருத்தை எடுத்துப் போட்டு அவதூறாக்குகிறார்கள். தாழ்த்தப்பட்டோர் ஒடுக்கப்பட்டால் பெரியாரியவாதிகள் பேசுவதில்லையாம். இடதுசாரிகள் மெளனம் காக்கிறார்களாம். இதனைக் காலாட்டியவாறே சொல்லி விட்டு, பாலில்லாத் தேநீர் குடிக்கப் போய் விடுகிறார்கள்.

இறுதியாக, தாழ்த்தப்பட்டோரின் நிரந்தரமான விடுதலை, இந்தச் சாதியுடனோ அல்லது அந்தச் சாதியுடனோ கூட்டணி வைப்பதனால் ஒருக்காலும் சாத்தியமாகாது. மாறாக, முழுமுற்றான சாதி ஒழிப்புக்கான போராட்டத்தின் மூலமே சாத்தியப்படும். அதற்கான திட்டமும், அதனை செயலாக்கும் போர்க்குணமும் கொண்ட தலைவர்களை, இளைஞர்களை, அமைப்புகளை, காலம் நிச்சயம் உண்டாக்கும்.

நாளை மறுநாள் இளவரசனின் நினைவு நாள். நேற்று கோகுல்ராஜின் மரணம் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, காவல்துறையால் கொலையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோகுல்ராஜ் வழக்கிலேனும் நீதி கிடைக்குமா? கவனமாகக் காத்திருப்போம்.

சாதிய ஒடுக்குமுறைகளை, கொலைபாதகச் செயல்களை, மீசை கூட சரியாக அரும்பாத கொங்கு ஶ்ரீராம் போன்ற விடலைகளின் சாதி வெறியைக் குறித்து நாம் பேசினால் சிலர் சலித்துக் கொள்கிறார்கள். “ஒரு பக்கம் சாதி ஒழிய வேண்டும் என்பார்கள். மறுபக்கமோ எப்பொழுதும் சாதியைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். பேசிப் பேசி இவர்களே சாதி உணர்வை வளர்த்து விடுகிறார்கள்” என அலுத்துக் கொள்கிறார்கள்.

இவர்களுடைய சங்கடமும், சலிப்பும் வெளிப்படுத்தும் கருத்து எளிமையானது. தாழ்த்தப்பட்டோர் மீது நிகழ்த்தப்படும் எண்ணிலடங்கா வன்முறைகள் இவர்களை சற்றும் தொடுவதில்லை. இவர்கள் சிறிதும் அதிர்வதில்லை. அவ்வாறு தாம் இருப்பது தமது மேல்சாதித் திமிரின் மென்மையான வடிவம் என்பதை அறிந்தும், அறியாமலும் இவர்கள் தமது சாதி ஒழிப்பு தத்துவத்தை பேசிய வண்ணமிருப்பார்கள்.

ஆனால் என்ன, வெள்ளைக்காரன் சற்றே ஏளனம் செய்தால் கூடப் போதும். உலகம் இரண்டானது போல கூக்குரல் போடுவார்கள். உங்கள் மீது ஒடுக்குமுறையின் வாசம் தெரிந்தாலே ஓலமிடும் மேன்மக்களே, எங்களது கூச்சல் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். பொறுத்தருள்வீராக!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s