எனக்கொரு ரோஹித்தைத் தெரியும்.

எனக்கொரு ரோஹித்தைத் தெரியும். அவன் வசிக்கும் உண்டு உறைவிடப் பள்ளிக்கு சென்ற பொழுது இரு முறை அவனுடன் பேசியிருக்கிறேன். அவனுக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கலாம். அவனுடைய சூழலுக்கு பொருந்தாத அலாதியான பிரகாசம் அவன் கண்களில் இருந்தது.

எனது மகனை விட நான்கைந்து வருடங்களே மூத்தவனான அந்தச் சிறுவன் ஒரு நாசமாய்ப் போன அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து என்னவாகப் போகிறான், அவனது எதிர்காலம் என்னவாக இருக்கும் என யோசித்துப் பார்த்திருக்கிறேன்.

நேற்றொரு ரோஹித் குறித்து தெரிந்து கொண்டேன். அவனது கடிதத்திலும் சூழலுக்குப் பொருந்தாத அலாதியான பிரகாசமும், கசப்பு மேவிய எள்ளலும் இருந்தது. இதற்கு முன்பும் தற்கொலைக் கடிதங்கள் படித்திருக்கிறேன். ஆனால், இக்கடிதம் எழுதிய ரோஹித் ஒரு சராசரி இளைஞனல்ல என்பதும், அக்கடிதத்தின் இலக்கியத்தன்மை வாய்ந்த அரசியல் வரிகளும் சொல்லொணாத பாரத்தை உண்டாக்கி வைத்திருக்கிறது.

உண்டு உறைவிடப் பள்ளி ரோஹித்தையும், ஹைதராபாத் ரோஹித்தையும் இணைக்கும் புள்ளி எது? அவர்கள் இருவரும் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த பாவத்திற்கு ஆளானவர்கள். ரோஹித் வேமூலா குறிப்பிடும் குழந்தைப் பருவத் தனிமையின் வடிவமும், கொடுமையும், உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கிப் படிக்கும் சின்னஞ்சிறு ரோஹித்துக்கு எவ்வகையில் வேறுபட்டதாக இருக்கும் என்பதை ஊகிப்பது அத்தனை கடினமானதில்லை.

சின்னஞ்சிறு ரோஹித்தை அடுத்த முறை பார்க்கும் பொழுது சொல்ல விரும்புவது இதுதான். முகம் தெரியாத ரோஹித்துகளிடமெல்லாம் வேண்டிக் கொள்வதும் இதுதான்.

மனுஸ்மிருதியை எரித்து சாம்பலாக்கும் அம்பேத்கராக நீ வளர வேண்டும் மகனேதனிமைப்படுத்தப்படுவதும், தூற்றப்படுவதும், இழிவுபடுத்தப்படுவதும், விரக்தியின் எல்லைக்கு தள்ளப்படுவதும் அண்ணலும் அனுபவித்தவையேஅவற்றையெல்லாம் தாண்டி எழுந்த அண்ணலின் கருத்துக்களைப் படித்து அவர் வழி நடப்பது என்பது, தோற்றுக் கொண்டே இருப்பது போலத் தோன்றும் போராட்டத்தில் தொடர்ந்து போராடி சாதியை அழிப்பதே! தன்னையே அழிப்பதல்ல. இதனை மனதில் வைத்து முன்னேறு அன்பு மகனே

இது அறிவுரையல்ல. ஆற்றாமை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s