காய சண்டிகை பசியாறும் போழ்தில்…

fasting-buddha

“வெட்டி எறியுங்கள் இவன் தலையை”
என நீ வெறி கொண்டு கத்திய பொழுது,
உனது தேக்கு கிரீடத்தில் சூட்டப்பட்டிருந்த
அரளிப் பூக்கள் உதிர்ந்து வீழ்வதை
நான் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

எங்கிருந்தோ காய சண்டிகை
நாமனைவரும் அறிந்த காரணத்தால்
செவிப்பறைகள் அதிர்ந்து
இரத்தம் கசியும் வண்ணம் பெருங்குரலெடுத்து அழுதாள்.

எனைக் கைவிட்ட ஏலீ
அனுப்பிய அப்பங்கள் அடங்கிய பாத்திரத்தை
அவள் முன்னே நகர்த்திய உயிரின்
மனிதப் பெயர் நினைவில்லை.

வெட்டி எறிந்த எனது தலையை
ஒரு காலால் உதைத்து தள்ளி விட்டு
மாபெரும் சைனியத்துடன் நீ திரும்பிச் செல்கையில்,
பசி தீர்ந்த சண்டிகை உறங்கும் காட்சி கண்ணில் நிறைய…
நான் கசந்த சிரிப்பொன்றை உதிர்த்தேன்.

உனக்கு
மாத்திரமில்லை.
கடவுள் தெரியும் வரை
எனக்கும் கல்லடி தெரியாது.

பயம் கொள்ளாதே,
திருப்பி நிறுத்தியிருக்கும் எழுதுகோல்தானே தவிர
கையில் ஏந்தி நிற்பது ஆயுதம் அல்ல.
எமக்கு தொழில் மருத்துவம்.
எமது தேவை அமைதி நிரம்பிய நிர்வாணம்.

வாழ்க வளமுடன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s