ஓஷோ – ஒரு ஓவியப் பிரார்த்தனை

ஓஷோ குறித்து எனக்கு பெரிய அறிமுகமில்லை. சில ஆண்டுகள் முன்பு, புதிய கலாச்சாரம் வாசகர் வட்டக் கூட்டமொன்றில், ஒரு தோழர் (பெயரைச் சொன்னால் கட்சி விரோத நடவடிக்கையாக கருத வாய்ப்பிருக்கிறது) ஓஷோவின் கருத்துக்கள் குறித்து காட்டமாக விமர்சித்த நினைவிருக்கிறது. கடந்த சில தினங்கள் முன்பு எதேச்சையாக ஓஷோவின் ‘வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்’  (கண்ணதாசன் பதிப்பகம்) எனும் நூல் கண்ணில் பட்டது. சரி, படித்துதான் பார்ப்போமே என படிக்க துவங்கினேன். ஒரு சில பக்கங்களுக்குள், அவர் எளிமையாக முன்வைக்கும் ஆழமான கருத்துக்களிலும், குறுங்கதைகளிலும் ஈர்க்கப்பட்டேன்.

osho-sr-making

புத்த மதத்தையும், பிற மதங்களையும் வகைதொகையின்றி அவர் கிண்டலடித்த வண்ணமிருந்தாலும், புத்தரின் மத்திம பாதையை புத்துணர்ச்சியோடு எடுத்து வைப்பதில் ஓஷோ வெற்றி பெறுகிறார். குறிப்பாக இயங்கியலோடு ஒட்டி, “உண்மையான ஆன்மீகம் எந்த நிலையான கொள்கையும் கொண்டதல்ல. அது மாறும் தன்மை கொண்டது. இதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்” எனச் சொல்லும் பொழுது, நெருக்கமாக உணர வைக்கிறார்.

“நீங்கள் செய்யும் உணர்வற்ற சடங்கால், எந்த பிரயோஜனமும் இல்லை… அதே சமயம் புகைப்பதை முழு ஈடுபாட்டுடன், உணர்வோடு செய்யலாம். அதில் தவறில்லை. அப்பொழுது அது பிரார்த்தனையாக மாறுகிறது.” எனும் கூற்று சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால் அதனை நடைமுறைப்படுத்திப் பார்க்கும் பொழுது அதன் முழு அர்த்தத்தையும் உணர முடியும்.

உதாரணமாக, அன்றாடம் ஒரே சமயத்தில் பற்பல வேலைகளை செய்யும் (multi-tasking) பல இளைஞர்களைப் பார்க்கிறேன். அதனை பெருமையாக கருதுபவர்களும் உண்டு. அவ்வாறு கைபேசியில் விரல்களால் நிரவிய வண்ணம் உண்ணுவது, நடப்பது, கணிப்பொறியில் வேலை செய்வது என கவனச் சிதறல்களுடனேயே வாழும் தலைமுறை, வாழப் போகும் தலைமுறைகளுக்கு கிளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்குமான வேறுபாடு புரிய வேண்டுமானால், இத்தகைய ஒரு சமயம்-ஒரு வேலை முறையிலான கவனக்குவிப்பை நடைமுறைப்படுத்தாமல் சாத்தியமில்லை.இன்னும் எழுதலாம். ஆனால் இந்நூலை இன்னொரு முறை ஆங்கிலத்தில் வாசிக்க விரும்புகிறேன். அதன் பிறகு ஒரு வேளை எழுதத் தோன்றினால், மதிப்புரையாக எழுதுகிறேன். வாசித்து முடித்த பின்னால், ஓஷோவை வரைந்து பார்த்தேன். ஓஷோ குறித்த அறிமுகம் இல்லாமலிருந்த போதிலும், ஓஷோவின் வசீகரமான, சிறிய, ஒளிரும் கண்கள் மீது எனக்கு எப்பொழுதும் ஈர்ப்பு உண்டு. ஓவியம் சரியாக வந்திருக்கிறதா, இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். இந்த ஓவியத்தை எனது சக பயணி ஹா-விற்கு சமர்ப்பிக்கிறேன்.osho-sr

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s