கூதிர்காலக் குறிப்புகள் #2

Indra_prevents_Trisanku_from_ascending_to_Heaven_in_physical_form
நன்றி: விக்கிபீடியா

துருவங்களின் முனைகளில்
நிலத்தின் அடியாழம் துளைத்து
அழுந்தி நிற்கும் மாயத் தூண்களில்
இழுத்துக் கட்டிய
இறுகிய முள்கம்பிகளின் இடையே,
பூமிப்பந்தின் நடுவினில்
பிணைக்கப்பட்டு கிடக்கிறான் சத்திய விரதன்.

பின்னர் ஒரு நாள்
ஐராவதத்தில் ஏறி நின்ற வண்ணம் தேவேந்திரனே,
நீ அவனது நரம்புகள் பொடிபட இழுக்கிறாய்…

இடது கரத்தில் இரத்தம் கசியும் பொழுதில்
இல்லாத சொர்க்கத்தின் பித்து
பிரக்ஞையை சுவைத்து தின்கிறது.
வலது கரம் சரிந்து விழும் பொழுதுகளிலோ
வசிட்டரின் கனல் கக்கும் விழிகள்
உதிரம் மொத்தமும் குடித்து தீர்க்கிறது.

இடையில் தாகம் தீர்க்க மட்டும்
விசுவாமித்திரனின்
சிறு குழந்தை மொண்டு தரும்
குவளைத் தண்ணீரை
கைகள் நடுநடுங்க குடித்திட
ஏனோ பெருந்தன்மையோடு அனுமதிக்கிறாய்…

இறந்த பின்னால்தான் சொர்க்கம், நரகம் எல்லாம் என
இன்னும் எத்தனை காலம்தான் ஊரை ஏமாற்றுவாய் ஆதி பகவனே?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s