பிரக்ஞை

ஆர்க்டிக் பனிக்காலத்தின் கனத்த இருள் வெளியெங்கும் போர்த்திக் கிடந்தது. தீராத உறக்கத்தின் இடையே ஏதோ ஒரு கனவால் தூக்கம் கலைந்த துருவக்கரடியொன்று தலையசைத்து மெல்ல எழுந்தது. சுற்றும் முற்றும் எங்கும் பரவி நின்ற உறைபனியை இருளினூடாக நோட்டமிட்டது.

பெருமூச்சு விட்ட வண்ணம் மீண்டும் படுத்துக் கொண்டது. தொலைதூரத்தில் தெரிந்த விண்மீணொன்று கண்சிமிட்ட, துருவக் கரடி சோம்பல் மேவ புன்னகைத்தது.

polar-bear-stars

“எப்படி இருக்கிறாய்?” எனக் கேட்டது விண்மீன்.

“நீதான் பார்க்கிறாயே.. ஆர்க்டிக் பனியில் உடல் நடுங்க தனித்து கிடக்கிறேன்.”

“ஒரு கேள்வி கேட்கட்டுமா?”

“கேள்”

“நீ ஒரு துருவக் கரடியா?”

“ஏன், பார்த்தால் எப்படித் தெரிகிறது?”

“எனக்கு எப்படித் தெரிகிறது என்பது முக்கியமில்லை. நீ சொல்.”

“ஆம். நான் ஒரு துருவக் கரடிதான்.”

“அது எப்படி உறுதியாகச் சொல்கிறாய்?”

“இதென்ன வம்பாக இருக்கிறது? நானே தண்ணீரில் பார்த்திருக்கிறேன். நான் ஒரு துருவக் கரடிதான்.”

“தண்ணீரில் பார்ப்பதெல்லாம் உண்மையா?”

“வேறு எப்படி என்னையே நான் பார்ப்பது? மேலும் அது உண்மையில்லை என்றால் வேறு எதுதான் உண்மை? இப்படியே போனால், நான், நான் என்ற பிரக்ஞை எல்லாமே பொய்யாகி விடுமே!”

“சரி. பிரக்ஞை என்றால் என்ன?” எனக் கேட்டது விண்மீன்.

“ம்..இருத்தல்”

“நீ உண்மையில் இருக்கிறாயா?”

“இருக்கிறேன். குறைந்தபட்சம் இருப்பதாக நம்புகிறேன்”

“நம்பிக்கைதான் பிரக்ஞையா?”

“இருக்கலாம். இல்லை. என்னால் பார்க்கவும், கேட்கவும், பேசவும் முடிகிறதே. அது பிரக்ஞை இருப்பதால்தானே சாத்தியமாகிறது.”

“நீ பார்ப்பதும், கேட்பதும் உண்மைதானா?”

“ஆம். அது உண்மைதான். உதாரணமாக, எனக்கு மாத்திரமல்ல, எல்லோருக்கும் நீ விண்மீனாகத்தானேத் தெரிகிறாய்.”

“எல்லோருக்கும் ஒன்றாகத் தென்படும் ஒரு விசயம் தான் உண்மையா?”

“இப்படியே கேள்வி கேட்டால் அதற்கு எந்தப் பொருளுமில்லை. எல்லாவற்றையும் சந்தேகிக்க ஆரம்பித்தால் எல்லாமே சிக்கலாகி விடும்.”

“அப்படியானால் பிரக்ஞை என்பது ஒரு நம்பிக்கை. அதுவும் சற்று சந்தேகிக்க துவங்கினாலே சிக்கலாகி விடக் கூடிய எளிய நம்பிக்கை. சரிதானா?”

“சரிதான். ஆனால்..”

“ஆனால் என்ன..?”

மூக்கை சொறிந்து கொண்ட துருவக் கரடி மெல்ல சரிந்து படுத்தது. “என்னைத் தூங்க விடு.”

விண்மீன் ஒருமுறை கண்சிமிட்டி தனது தேகம் ஒளிரப் புன்னகைத்தது.

Advertisements

2 thoughts on “பிரக்ஞை

  1. Excellent saravana…You can release books…So nice and the thoughts like vinnukkum mannukum thodarbhupaduthi ezhudhuvadhu pondra thiramai migavum abhoorvamanadhu.. recently a song…Kurumbha….Idhellam nenjai thulaikindrana…Migavum azhagu un varigalum yadharthangalum…

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s