எப்பொழுதும் போல்…

watching
அதிகாரத்தின் துவக்குகள்
கொலைவெறித் தாண்டவமாடும்
நிம்மதி குலைந்த இருண்ட காலத்தில்,
காட்சிகளாகவும்
கதறல்களாகவும்
கொலையுண்டவர்களின் குருதி
முகங்களில் தெறிக்க,
மீண்டும் மீண்டும்
கைகளால் கன்னங்களில்
அழுந்தத் தேய்த்த வண்ணமிருக்கிறோம்.
தேய்க்க தேய்க்க
அழுந்தப் படர்கிறது காயம்.

உடைந்து விடாத கேவல்களினூடாக
மெல்ல மிடறுகளாக
நடுக்கும் கசப்பை பருகிக் கடக்கிறோம்.

வழக்கமான துரோகிகளின்
வழக்கமான வருத்தங்களுடன் கூடிய
வழக்கமான கண்டனங்களை
வழக்கத்திற்கு மாறாக மெளனமாகக் கடக்கிறோம்.

குழப்பங்கள், கூச்சல்கள், கண்டனங்களுக்கு ஊடாக
குறுக்கும் மறுக்குமாக அதிகாரம் எழுப்பும் புகைமூட்டத்தினூடாக
யார் பேசுகிறார்கள், ஏன் பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள்
யார் பேசவில்லை, ஏன் பேசவில்லை, என்ன பேசவில்லை
யார் கைதாகிறார்கள், ஏன் கைதாகிறார்கள்
யார் கைதாகவில்லை, ஏன் கைதாகவில்லை
என்பனவற்றை உணர்ச்சிகளற்று வெறித்துப் பார்க்கிறோம்.

வரலாற்றின் பக்கங்களைத் திருப்பி
வாதாடுவதன் அர்த்தமின்மை இயல்பாகப் புரிவதால்
நாளிதழ்களையும், தொலைக்காட்சிகளையும்
எப்பொழுதும் போல் கடந்து செல்கிறோம்.

எனினும்
எப்பொழுதும் போல் காற்று விடுவதில்லை என்பதையும்
எப்பொழுதும் போல் வெந்துதான் தணியும் காடு என்பதையும்
இப்பொழுதும் எண்ணிக் கொள்வது
நிச்சயமாக வழக்கமான ஆறுதலல்ல.

Advertisements

One thought on “எப்பொழுதும் போல்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s