காலா: ரஞ்சித்தியவாதிகளின் படையப்பா காமெடி

காலா குறித்த பரபரப்பும், பரவசமும் கூடிய mass hysteria மனநிலையை நாலா திசைகளிலும் காண முடிகிறது. ரஜினிக்காக படம் பார்ப்பவர்களிடம் எந்தக் குழப்பமும் இல்லை. அவர்களது கொண்டாட்டம் நேரடியானது. அவர்கள் ஐபிஎல் ரசிகர்களை போன்று “யார் எக்கேடு கெட்டா எனக்கென்ன” எனும் வினோதமான ஜென் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

ரஞ்சித்துக்காக படம் பார்ப்பவர்களும், படம் பார்த்து பரபரக்க எழுதி நம்மையும் பார்க்கச் சொல்லும் முற்போக்காளர்களும்தான் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்கள். எங்க அம்மா மேல சத்தியமா இது ரஞ்சித் படம்தான், கார்ல் மார்க்ஸ் ஆணையா இது தலித் விடுதலைக்கான படம்தான் என மீண்டும் மீண்டும் சத்தியம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Padayappa

இவர்கள் பொதுவாக முன்வைக்கும் இரண்டு விசயங்களை பார்ப்போம்.

1. ரஜினிக்காக எதிர்த்தால், அது ரஞ்சித்தையும் தோற்கடிப்பதாகும். ரஞ்சித்துக்கு எதிராக ஏற்கனவே பெரும் சூழ்ச்சிகள் நடக்கின்றன.

தூத்துக்குடியில் ரஜினி உதிர்த்த முத்துக்களுக்கு எதிராக எழுந்த எதிர்ப்புக் குரல், காலா திரைப்படத்தை புறக்கணிக்க விளைந்த கோரிக்கை, முழுக்க முழுக்க ஆதிக்க சாதிகளின் குரலல்ல. மாறாக சமீபத்திய வரலாற்றில் எண்ணிப் பார்க்கவியலாத படுகொலை நிகழ்ந்த மண்ணில் நின்று கொண்டு, பிணங்கள் கூட புதைக்கப்படாத நிலையில், அரசின் குரலை அப்படியே அதிகாரமாக அவர் ஒலித்ததற்கு எதிரான, நியாயமான எதிர்வினையது.

“நான் தொலைபேசியில் கேட்டேன். ரஜினி அப்படிக் கூறவில்லை என விளக்கமளித்தார்” என பி.ஆர்.ஓ வேலையெல்லாம் ரஞ்சித் செய்ய வேண்டிய அவசியமென்ன? ரஜினியின் எந்த அரசியல் செயல்பாடுகள் குறித்தும் எந்தக் கருத்தும் அதுவரை சொல்லாத ரஞ்சித், அன்று மாத்திரம் விளக்கம் கொடுத்து முட்டுக் கொடுக்க வேண்டிய தேவையென்ன? பதில் எளிமையானது. படம் ஓட வேண்டும்.

இப்படம் ஓடாமல் போனால், யாருக்கு நஷ்டம்? ரஞ்சித்துக்கா, ரஜினிக்கா? ரஞ்சித்துக்கான நஷ்டத்தை அவரால் நிச்சயம் ஈடுகட்ட முடியும். அட்டகத்தி, மெட்ராஸ் போன்ற அற்புதமான படங்களை (அவை என்றைக்கும் நினைவு கூறப்படும்) அவரால் மீண்டும் உருவாக்க முடியும். ஆனால், அகண்ட பாரத அரசியல் கனவுகளோடு வலம் வரும் ரஜினிக்கு அது பெரும் இழப்பாக இருக்கும்.

ரஜினிக்காக ரஞ்சித்தும் தோற்கடிக்கப்பட்டால், அதனால் மக்கள் இழக்கப் போவது பெரிதாக எதுவுமில்லை. ஆனால், ரஞ்சித்துக்காக ரஜினிக்கும் சேர்த்து கொடி பிடிப்பது, அதே வேளையில் ரஞ்சித்துக்காக மட்டும் தான் கொடி பிடிக்கிறேன் என வரிக்கு வரி விளக்கமளித்துக் கொண்டிருப்பது ஆகியவை, “மாப்பிள்ளை அவருதான், ஆனா சட்ட என்னோடது” எனும் படையப்பா காமெடியைத்தான் நினைவுபடுத்துகிறது. மார்க்சியம், தலித்தியமெல்லாம் தாண்டி, புதிதாக ரஞ்சித்தியவாதம் எனும் அரசியல் கோட்பாடு உருவாகி விட்டதை எண்ணும் பொழுது, அயர்ச்சியாக இருக்கிறது.

2. ரஜினியின் திருவாயால் தலித் அரசியலை பேசுவது. அதன் மூலம் மைய நீரோட்ட சினிமாவில் தலித் பார்வையையும், வாழ்வியலையும் பதிவு செய்வது

அம்பேத்கரின் புகழ்பெற்ற கூற்றுதான் நினைவுக்கு வருகிறது. “இவர்களுக்கு ராமாயணம் எழுத வால்மீகி தேவைப்பட்டார். அரசியல் சாசனம் எழுத நான் தேவைப்படுகிறேன்.” ரஜினியை புரட்சி வசனம் பேச வைப்பது என்னதான் உலக மகா ராஜதந்திரம் போலத் தோன்றினாலும், இறுதியில் விளைவது இதுதான். அம்பேத்கரின் அரசியல் சட்டத்தின் மேலேறி நின்றுதான் அத்தனை அக்கிரமங்களையும் கூசாமல் செய்து வருகிறார்கள். வால்மீகி எழுதிய ராமாயணத்தை வாசித்து வாசித்து வியந்த வண்ணம்தான் பீமா கோரேகானில் படுகொலைகளை நிகழ்த்துகிறார்கள். சாதியக் குற்றச்சாட்டு வந்தும், ரஞ்சித்துக்கு வாய்ப்பளித்த ரஜினிக்கு நன்றி, நன்றி என புளகாங்கிதமடைகிறீர்களே, “சோழியன் குடுமி சும்மா ஆடாது” பழமொழியெல்லாம் மறந்தே போனதா?

சுருக்கமாக சொன்னால், யார் யாரை ‘பயன்படுத்தி’ ஆதாயம் அடைந்தார்கள், அடைய முடியும் என வரலாறு நெடுக பாடங்கள் உண்டு.

இறுதியாக, ‘புரட்சித் தலைவரை’ பயன்படுத்தி பட்டுக்கோட்டை எழுதிய பாடல்கள், தமிழகத்தில் எவ்வாறு ‘சோசலிச சமூகத்தை’ கட்டமைத்தது என்ற மகத்தான வரலாறு நாமறிந்தது. சமீபத்தின் கச்சநத்தம் படுகொலை குறித்த கண்டனக் கூட்டத்தில், visual impact (காட்சிரீதியான பாதிப்பு) ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அழுத்தம் கொடுத்துப் பேசினார் ரஞ்சித். ரஜினியை ‘பயன்படுத்தி’ அவர் எடுத்திருக்கும் காலா, அம்பேத்கரின் கனவுகளை சாதிக்கப் பயன்படுமா அல்லது துக்ளக் குருமூர்த்தியின் கனவு நிறைவேற கைகொடுக்குமா என்பதை புரிந்து கொள்வது அத்துணை கடினமில்லை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s