மூளை வளர்ச்சி

நேற்று ஒரு நண்பரோடு மின்தொடர் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன். நிகழ்ந்து வரும் போராட்டங்கள் குறித்தும், ஏவப்படும் அடக்குமூறைகள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம்.

யாரோ ‘ஊ ஊ’ என குரல் எழுப்பும் சத்தம் கேட்டது. இரு இருக்கைகளுக்கு முன்னால், எனக்கு முதுகைக் காட்டி அமர்ந்திருந்த சிறுவன்தான் அவ்வாறு ஓலிகளை எழுப்பிக் கொண்டிருந்தான்.

அவன் ஒலிகளை எழுப்பிய விதமும், அவனது தாயும், தங்கையும் அவனை ஆற்றுப்படுத்த முயன்ற விதமும், அவன் ஒரு சிறப்புக் குழந்தை (special child) என்பதைப் புரிய வைத்தது. ரயிலில் ஏறியதன் விளைவாக அவன் பயப்படுவதாகவும், அவனை இருக்கை மாற்றி அவனது அம்மாவோடு உட்கார வைக்கா விட்டால் ஓடி விடுவான் என்றும் விசாரித்த ஒருவருக்கு அவனது தங்கை பதிலளித்தாள்.

சற்று நேரம் ஆயாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவன், “ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள்… சிக்கல்கள்” என நண்பரிடம் சொன்னேன். அவர் மெல்லிய புன்னகையோடு, “ஆம். போராடுவதற்கும் ஒரு சலுகை (privilege) தேவைப்படுகிறது இல்லையா?” என்றார். எத்தனை சத்தியமான வார்த்தைகள்?..

ரயில் வேகம் கூட்டி கடகடத்தது.

மூளை வளர்ச்சி அடையாத அவனை ரயில் அச்சுறுத்துகிறது.
அவன் அதற்கு எதிராக குரல் எழுப்புகிறான்.
அவனை ஆற்றுப்படுத்துகிறோம்.

மூளை வளர்ச்சி அடைந்ததாக கருதப்படுபவர்களையும்
பல விசயங்கள் அச்சுறுத்துகின்றன.
அவர்களும் அதற்கு எதிராக குரல் எழுப்புகிறார்கள்.
அவர்களை அடக்கி ஒடுக்கப்படுவதை வேடிக்கை பார்க்கிறோம்.

மூளை ‘வளர்ச்சி’ நல்லதல்ல
என்று சொல்வதும் கூடவா தேச விரோதம்?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s