மூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்!

bw

அன்பார்ந்த அன்பர்களே!

முதலில் மூளைச்சலவை என்றால் என்னெவென்று பார்ப்போம். ‘மூளையை சலவை செய்தல்’ எனும் செயலையே, சான்றோர் ‘மூளைச்சலவை’ என்று அழைக்கின்றனர்.

சலவை என்றவுடன் கறைகளை நீக்குதல், அழுக்குகளை போக்குதல் எனும் அர்த்தத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. மூளையைச் சலவை செய்தல் அதற்கு நேர் எதிரானது. ஒருவர் தனது கருத்துக்களை இன்னொருவரது மூளையில் ஏற்றுவதன் மூலம், கருத்துக்கள் ஏற்றப்பட்டவர் அதனை தனது சொந்தக் கருத்துக்களாக கருதி அவற்றை அமல்படுத்த முற்படுவதே மூளைச்சலவையாகும்.

இதனை ‘வசியம்’ என நேரடியாக சொல்லி விட்டுப் போகலாமே என நீங்கள் கேட்பது புரிகிறது. அப்படிச் சொல்லுவதில் ஒரு எஃபெக்ட்(தாக்கம்) ஏற்படாது எனும் அடிப்படைக் காரணத்தாலும், மேலும் வசியம் என்பதை நிரூபிப்பதற்கு எலும்பு, மண்டை ஓடு, தாயத்து அல்லது அக்கினிக் குண்டம் ஆகியவற்றை சாட்சிகளாக ஒப்படைக்க வேண்டிய நடைமுறைச் சிக்கல்களாலும், மூளைச்சலவை எனும் சொல்லே, மேற்கூறிய குற்றச்செயலை விளக்குவதற்கு உதவும் சரியான சொல்லாகும்.

மூளைச்சலவை பல வழிகளிலும் நடக்கலாம். திரைப்படம், ஆவணப்படம், செய்தித்தாள், நூல்கள், மீம்கள் என எந்த வடிவத்திலும் அவை உங்களைத் தாக்கலாம். அதனை ஒரு எளிய சோதனையின் மூலம் கண்டறிந்து நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

மூளைச்சலவை சோதனையில் கவனிக்க வேண்டிய இரண்டு அம்சங்கள்

1. உலகப் புகழ்பெற்ற மூளைச்சலவையர்களான கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், காந்தி, பகத்சிங் முதலானோரின் பெயர் ஒரே ஒரு முறை உச்சரிக்கப்பட்டாலோ, குறைந்தபட்சம் அவர்களது புகைப்படம் தென்பட்டாலோ, அது 100% மூளைச்சலவை என்பதில் ஐயத்திற்கிடமில்லை.

2. “போராட்டம்”, “உரிமை”, “ஜனநாயகம்” ஆகிய சொற்களின் சாயல் தென்பட்டால் கூட உடனடியாக சோதனையை முடித்துக் கொண்டு, மூளைச்சலவை என அறிவித்து விடலாம்.

உதாரணம்

சமீபத்தில் வெளிவந்த கீழ்க்காணும் ஒரு திரைப்படப் பாடலைக் கேட்டுப் பாருங்கள்.

முதலில் கேட்கும் பொழுது, இசையின் துள்ளலும், வரிகளின் போர்க்குணமும் உங்களை உற்சாகப்படுத்தலாம். ஆனால், மேற்கூறிய சோதனையின் அம்சம் 2-ன் கீழ் பார்த்தால், இது எத்தகைய அப்பட்டமான மூளைச்சலவை என்பது உங்களுக்கு தெளிவாகும். நாம் எத்தனை எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதை இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

அடுத்ததாக, ஒருவர் உங்களை நேரடியாக மூளைச்சலவை செய்ய வந்தால், எவ்வாறு மூன்று முத்தான வழிகளில் நம்மைப் பாதுகாத்து கொள்வது என்பதை பார்ப்போம்.

வழி #1

நீங்கள் ஆணாக இருக்கும் பட்சத்தில், ஒருவர் உங்களை “டேய்”, “நாயே”, “ஜி”, என்று அழைத்தாலோ, பெண்ணாக இருக்கும் பட்சத்தில் உங்களைப் பார்த்து விசிலடித்தாலோ, கண்ணடித்தாலோ கூட, எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால், ஒருவர் உங்களை “தோழர்” அல்லது “சகா” என்று அழைத்தால், அக்கணமே நீங்கள் ஃபுல் அலர்ட்டாகி விட வேண்டும். அவர் ஒரு மூளைச்சலவையராக இருக்கக் கூடும். உடனடியாக, நீங்கள் பிறவி காது கேளாதவரைப் போல வேறு திசையில் மணிக்கணக்கில் பார்க்க வேண்டும்.

வழி #2

அதற்குப் பிறகும், அவர் அங்கிருந்து அகலவில்லையானால், அவர் அறியாத வண்ணம் அவரை நீங்கள் உற்றுக் கவனிக்க வேண்டும். அவர் கையில் பான், குட்காவைப் போல தடை செய்யப்பட்ட பொருளான, ‘துண்டறிக்கை’ அல்லது ‘பிட் நோட்டீஸ்’ அல்லது ‘நோட்டீஸ்’ என பல பெயர்களில் அழைக்கப்படும் போதை வஸ்து தென்பட்டால், இரண்டாம் அபாயச் சங்கு ஊதி விட்டதாக பொருள். மனதை தைரியப்படுத்திக் கொண்டு, உங்களது இஷ்ட தெய்வத்தை மனதில் வேண்டியவாறு 108 முறை நின்ற இடத்திலேயே சுற்றி வரவோ வேண்டும். அது எந்த இடமாக இருந்தாலும் கூச்சப்பட வேண்டியதில்லை.

வழி #3

முந்தைய இரண்டு வழிகளைப் பிரயோகித்தும் அந்த நபர் அங்கிருந்து அகலாவிட்டால் என்ன செய்வது? அதற்கும் வழி உண்டு.

அவர்கள் எப்பொழுதும் போல் சுற்றுச்சூழல் கேடு, மக்கள் உரிமைகள், கார்ப்பரேட் கொள்ளை என ஏதாவது பேச ஆரம்பித்தால், இறுதி அபாயச்சங்கு ஊதி விட்டதாக பொருள் கொள்ள வேண்டும். அவர்களோடு பேசத் துவங்கினாலோ, அவர்களது ஓரிரு சொற்களை கேட்டாலோ கூட, உங்களது மூளை சிறிதளவேனும் சலவை செய்யப்பட்டு விட வாய்ப்பிருக்கிறது. எனவே அந்த நேரத்தில் நீங்கள் பரிணாம வளர்ச்சியில் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிப் பயணிக்க வேண்டும்.

ஆம். மரமோ, கிளையோ, கொடியோ, எது கிடைக்கிறதோ அதை தவ்விப் பிடித்து, எப்படியாவது வீடு போய் சேர்ந்து விட வேண்டும். இதனைத் தவிர வேறு வழிகள் இல்லை.

முக்கிய குறிப்பு: ஃபார்வர்ட் செய்வது, அட்மின்களால் எழுதப்படுவது ஆகியவை மூளைச்சலவையின் கீழ் வராது. ஏனெனில் அவை யாருடைய மூளையையும் பாதிப்பதில்லை. வேண்டுமானால், அத்தகையவற்றை படித்த பிறகு உங்கள் மூளையை நீங்களே தொட்டுப் பாருங்கள். அது முன்பு போலவே ஃப்ரெஷ்ஷாக இருப்பதை அறியலாம்.

ஒரு வேளை இதையெல்லாம் மீறி, நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் உத்தமர்கள் மீதோ அல்லது துக்ளக், விஜயபாரதம், ஸ்வராஜ்மேக் போன்ற கோலப் போட்டிகள் நடத்தும் இதழ்கள் மீதோ உங்களுக்கு கடுகளவு சந்தேகம் தோன்றினால் கூட, நீங்கள் ஏற்கெனவே கொஞ்சம் மூளைச் சலவைக்கு ஆட்பட்டிருக்கிறீர்கள் எனும் உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அத்தகைய சூழலில் நிர்மா, ஏரியல் போன்ற துணி துவைக்கும் பொடிகளால் உங்களது மூளையை சலவை செய்வதைத் தவிர நீங்கள் மீள்வதற்கு வேறு வழியில்லை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s