என் ஆலை, என் உரிமை – புரட்சிப் போராட்டம்!

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் ஆலையை திறக்க அனுமதிக்குமாறு வழக்கு தொடுத்த நாள்முதல், ஸ்டெர்லைட் நிர்வாகம் தனது ஊழியர்கள், தூத்துக்குடி பகுதி மக்கள் முதல் சென்னை வரை தனது மார்க்கெட்டிங் நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருப்பது நாமறிந்ததே.

தூத்துக்குடி குறித்த அரங்கக் கூட்டங்கள் நடத்துவதற்கு கூட பல அமைப்புகள் போராடும் நிலையில், சேலம் எட்டு வழிச் சாலை குறித்து துண்டுப் பிரசுரம் வினியோகிப்பதே சமூக விரோதச் செயலான நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ‘என் ஆலை, என் உரிமை’ எனும் புரட்சிப் பிரச்சாரம் மாத்திரம் தங்கு தடையின்றி தொடர்வதைக் காணும் பொழுது, நமது அமைதிப் பூங்காவில் ஜனநாயகம் பூத்துக் குலுங்குகிற அழகை நாம் ரசிக்காமலிருக்க முடியாது.

8543eb61P1443566mrjpg

இன்றைய தமிழ் இந்துவில், சென்னையில் சமீபத்தில் நிகழ்ந்த “ஸ்டெர்லைட் போராட்டம்: கற்றுக் கொடுக்கும் பாடம் என்ன?” எனும் கருத்தரங்க உரைகளின் முழுப் பக்க விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடத்திய சென்னை சர்வதேச மையம் (http://www.cic.in/#IDPatrons), சென்னை ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸ் (http://www.mse.ac.in/general-body-members/) ஆகிய நிறுவனங்களின் நிர்வாகிகள், பேட்ரன்கள், போர்டு மெம்பர்கள் யாரென்று பார்த்தால், இது ஒரு இனிதே நடந்தேறிய குடும்ப விழா என்பது தெற்றென விளங்கும்.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கக் கருத்தரங்கத்தில், ஸ்டெர்லைட்டின் சி.இ.ஓ, முன்னாள் ஐஜி ஆகியோர் என்ன பேசினார்கள் என்பதை படிக்கும் பொழுது, இப்படி இனிமையாக பேசிப் பழக நமக்குத் தெரியவில்லையே என ஆழ்ந்த ஆதங்கம் ஏற்பட்டது. நடுநிலைமை வரலாறு முக்கியம் என்பதால் அழைக்கப்பட்டிருக்கிற வழக்கறிஞர் நாகசைலா பேசியதன் சாரத்திலிருந்து, அவர் மய்யமாக பிரச்சினைகளை பேசியிருக்கிறார் என்பது உணர்வூட்டக் கூடியதாக இருந்தது.

முத்தாய்ப்பாக, இக் கூட்டத்தை நெறியாளாராக ஒழுங்கு செய்து நடத்திய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், “யாரையும் குற்றம் சாட்டுவதற்காக இந்த விவாதம் நடத்தப்படவில்லை” என விவாதத்தை துவங்கி வைத்திருக்கிறார் என்பதே அன்னாரின் நன்னெறி நோக்கை புலப்படுத்துகிறது. வசக்கேடாக, ஏறத்தாழ ஒரு மாதம் முன்பு அவர் இந்து ஆங்கில நாளேட்டில் எழுதிய கட்டுரையொன்று (https://bit.ly/2A4KwGb) நினைவுக்கு வந்தது.

“நிகழ்ந்தவற்றை மக்கள் விவரிப்பதற்கும், அரசு விவரிப்பதற்கும் இடையிலான மிகப் பெரிய இடைவெளி, போராட்டக்காரர்களிடையே ‘தூண்டி விடும் சக்திகள்’ (agent provocateurs) இருந்தார்களா, இல்லையா என்பதில் அடங்கியிருக்கிறது. அத்தகைய சக்திகளின் பாத்திரத்தை அதிகாரபூர்வ விவரணை முன்னிலைப்படுத்துகிறது.

அத்தகைய ஒரு சில சக்திகளை நிர்வாகம் அடையாளம் கண்டிருக்கிறது. அவர்கள் போர்க்குணமிக்க அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அறியப்படுகிறது. ஆனால், போராட்டக்காரர்களோ வெளியாட்கள் குறித்த அனைத்து செய்திகளையும் அடியோடு மறுக்கிறார்கள்.

இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிகழும் பெரிய அளவிலான போராட்டங்கள், கலவரத்தை உருவாக்கும் வண்ணம் தயார் செய்யப்பட்ட போர்க்குணமிக்க சக்திகளால் வெளியிலிருந்து தூண்டப்படுபவை என்பதொன்றும் அத்தனை இரகசியமானதல்ல.” என அக்கட்டுரை பேசியிருந்தது.

ஒரு வேளை அக்கட்டுரை அவரது அட்மின் எழுதியதாக இருக்கலாம் என எண்ணிக் கொண்டேன்.

மொத்தத்தில், ஸ்டெர்லைட் தனது ஆலையைத் திறக்க முழுமூச்சுடன் பிரயத்தனங்கள் எடுத்து வருவதை, எதிர்மறைச் சிந்தனையோடு அணுகாமல், யாரையும் குற்றம் சொல்லாமல், வாழ்த்தி வரவேற்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி உள்ள நிலத்தடி நீரில் மாசு இருப்பதாக, நேற்று அறிக்கை அளித்துள்ள மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் யாரேனும் வெளியாட்கள் ஊடுருவியுள்ளார்களா என்பதை விரைந்து கண்டறிய வேண்டும்.

வாழ்க வளமுடன்!

Advertisements

3 thoughts on “என் ஆலை, என் உரிமை – புரட்சிப் போராட்டம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s