கரை தொடும் அலைகள் #5

பரியேறும் பெருமாள் தமிழின் முதல் தங்கு தடையற்ற, கலை நேர்த்தியுடைய தலித் சினிமா என உறுதியாகச் சொல்லலாம். நீலம் தரித்த கருப்பி சிலிர்க்க வைத்தது. தண்டவாளக் காட்சியில் அவனுக்கும் ஒரு கருப்பி வாய்த்திருக்கக் கூடாதா என கண்ணீர் விட்டேன். கண்களைத் திறந்து காதலைச் சொல்லுங்கள் ஜோ-க்களே. காலம் மாறிக் கொண்டிருக்கிறது. வழியில் நிற்கும் கசடுகளை நொறுக்கி வீசிய வண்ணம் விரைந்து கொண்டிருக்கிறது சமூகம்.

இதனூடாக, “தலித் சினிமா என சொல்லாதீர்கள். அது மற்ற சாதியினர் படம் பார்ப்பதைத் தடுத்து விடும்…” என்பது முதல் மற்ற சாதியினருக்கு நெருடலைத் தரலாம், இதனை எல்லோருக்குமான படைப்பாக அணுகுவோம் என்பது வரை பல குரல்களை பார்க்க முடிகிறது.

பிறப்பு முதல் இறப்பு வரை, எல்லோருக்குமான பொதுப் பாதைகள் இன்னும் இங்கே இல்லாத நிலையில், எல்லோருக்குமான சினிமாவும், இலக்கியமும் மாத்திரம் தனியே உருவாக முடியாது.

தத்தமது அடையாளங்களை உறுதி செய்யும் நிகழ்ச்சிப் போக்கு (assertion) நிலை பெறும் போக்கிலேயே, அடையாளங்கள் கரைதல் எனும் நிகழ்ச்சிப்போக்கும் துவங்கும்.

அதுவரை ‘எல்லோருக்கும்’ என வழக்கம் போல மூடி மறைப்பது, இத்தகைய ஒரு குறிஞ்சி மலருக்கு கூட அதன் அடையாளத்தை மறுப்பதேயாகும்.

தேவர் மகனையும், சுந்தர பாண்டியனையும், நாட்டாமையையும் ‘எல்லோருக்குமான’ சினிமாவாக பார்த்த மக்கள், பரியேறும் பெருமாளை தலித் சினிமாவாக அங்கீகரித்து பார்க்க மாட்டார்கள் என்றால், இங்கே ‘எல்லோரும்’ என்பது எப்பொழுதும் ‘எல்லோருமாக’ இல்லை என்றுதான் பொருள்.

pettai“பேட்டை” படித்து கொண்டிருக்கிறேன். இரு அத்தியாயங்கள்தான் கடந்திருக்கின்றன. அதற்குள்ளாகவே, ரகளை கட்டி அடித்திருக்கிறார் தமிழ்ப்பிரபா. முத்தமாயாக் கிழவிக்கும், போதகர் பால் மோசஸுக்குமான உரையாடலிலிருந்து ஒரு சாம்பிள்… இயேசு கிறிஸ்து எனும் சாமியைத் தெரியுமா என பால் மோசஸ் கேட்க, “எப்பா தெபேர் நானே ஒரு சாமிதாங். எங்கிட்டே மாங்காளியம்மாகிறா” என்று முத்தமாயா நாக்கை நீட்டியது.

96 திரைப்படம், ஒரு சில நல்ல சீன்களை, ஐடியாக்களை ‘பிடிப்பதால்’ மட்டுமே ஒரு முழுமையான சினிமா அனுபவத்தை தரவும், கனெக்ட்டை ஏற்படுத்தவும் முடியாது என்பதற்கு சிறந்த உதாரணம். ஆனால், இதற்கு கூட பலர் கரைந்து போகிறார்கள் என்பது நமது பாலியல் வறட்சியின் வெளிப்பாடு.

பத்தாம் வகுப்பு காதலை 22 ஆண்டுகளாக மனதில் புதைத்து வைத்திருப்பதன் தர்க்கம் மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை கூட விட்டு விடுவோம். அப்படிப் பிரிந்து தவித்து சந்திக்கும் காதலர்கள் கேவலம் ஒரு கிஸ்ஸடித்தால் கூடவா தமிழ்க் கல்சர் நாசமாய்ப் போய் விடும்?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s