ஷேர் ஆட்டோ டைரீஸ்!

share-auto

ஷேர் ஆட்டோவில் செல்வதில் பல அனுகூலங்கள் உள்ளன.

1. ஓட்டுனரோடு இருக்கையில் அமர்ந்து வரும் பொழுது, பரஸ்பரம் விட்டுக் கொடுக்காத diplomatic negotiation-ல் ஈடுபடுவது எப்படி எனக் கற்றுக் கொள்ளலாம்.

2. நம்மைப் போல tag செய்து கஷ்டப்படாமல், மக்களிடம் நேரடியாக வானிலை, அரசியல், பண்பாடு என அனைத்து விசயங்கள் குறித்தும் ஓட்டுனர் தனது கருத்துக்களை சுடச்சுட ஒளிபரப்பு செய்வதை கேட்டு ரசிக்கலாம்.

3. “பூக்கடை எதுத்தாப்ல நிறுத்து” என பெண்கள் தாங்களாக உருவாக்கும் மாய-யதார்த்த நிறுத்தங்களை ஓட்டுனர் புரிந்து உள்வாங்கிக் கொள்ளும் போக்கில் உருவாகும் செல்லச் சண்டைகள், நமக்குள் ஆண் சகோதரத்துவ உணர்வை வளர்க்கப் பயன்படும்.

4. இதையெல்லாம் விட, அதிர்ஷ்டம் இருந்தால், ஏதேனும் ஒரு டிராபிக் ஜாமில், ஒரு ஸ்கூட்டி நமதருகே வந்து ஒட்டி நிற்கும். இதெல்லாம் நமக்கு வேறு எப்பொழுது வாய்க்கிறது?

வெயிலற்ற மதியப் பொழுது.

இதமான காற்று வீசிக் கொண்டிருந்தது.

ஷேர் ஆட்டோவில் ஏறும் பொழுதே, “எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று…” இசைக்கத் துவங்கியது.

எந்தப் பெண்ணை நினைத்துக் கொண்டாரோ, ஓட்டுனரும் உடன் பாடத் துவங்கினார். முழுப் பாடலையும் ஒரு வரி விடாமல் உடன் பாடினார்.

அடுத்து வந்தது, “எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி…”. முதல் பாடலை எத்தனை காதலுடன் பாடினாரோ, இந்தப் பாடலை அத்தனை சோகத்துடன் ஓட்டுனர் உடன் பாட, எல்லோரும் அமைதியாக ரசித்துக் கொண்டே வந்தோம்.

” கண்ணைப் படைத்து, பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே!” வரியில் நானும் கோரஸாக இணைந்து கொண்டேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s