மலைகள்

பூமியின் அசைவிலும், இயக்கத்திலும் தோன்றி நிற்கும், விரிந்து பரவிய நெடிதுயர்ந்த மலைகளைக் கண்கொண்டு காணும் பொழுதில் மனம் அமைதியுற்று விடுகிறது.

மணியன்

கடந்த இரு நாட்களாக, அன்றாடக் கடமைகளை முடித்துக் கடக்கும் சலிப்பின் பாலைவனப் பயணத்தில், இரவில் மணியம் பிள்ளையை சந்திக்கும் எண்ணம் கோடை காலக் காற்றாக படர்கிறது. ஒரு கள்ளத்தனமான புன்னகையோடு இரவை எதிர்நோக்கத் துவங்குகிறேன்.

பார்த்தீனியம்: குருதி பீறிடும் காயங்கள்

ஈழத்தின் இரத்தம் தோய்ந்த போராட்ட வரலாற்றின் பல்வேறு பக்கங்களை, பரிமாணங்களை கதையாக்கியதன் மூலம், இதற்கு முன்னர் வெளிவந்த புனைவு மற்றும் அபுனைவு எழுத்துக்களில் பார்த்தீனியம் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

நக்‌சல்பரி கி ராஸ்தா!

இந்திய கம்யூனிச அரசியல் வரலாற்றில் மறுக்கவொண்ணாத முக்கியத்துவம் பெற்ற அத்தகைய நக்சல்பரிக்கு செல்லும் பாதை அருகிலிருக்கும் பொழுது செல்லாமல் விடலாமா?

சாய்ரத்: குறிஞ்சி மலர்

சாதி ஆணவப் படுகொலைகள் குறித்து மைய நீரோட்ட சினிமாவில் பதிவு செய்வது, அதுவும் வணிக சினிமாவின் சட்டகத்திற்குள் நின்றவாறே (பிரமிப்பூட்டும் காட்சிகள், கோணங்கள், பாடல்கள்) இயன்ற மட்டும் ஒரு காத்திரமான திரைப்படத்தை உருவாக்குவது என்பது ஒரு சாதனை. அதனை நாகராஜ் சாதித்து காட்டியுள்ளார்.

ஒரு ‘கம்யூனிஸ்ட்’ கிராமத்தில் நிகழ்ந்த காதல் கதை!

கதவு தட்டப்படும் ஓசை தொலைதூரத்தில் கேட்டது. திடுக்கிட்டு விழித்து எழுந்தவன், கதவைத் திறந்தேன். ஹவுஸ் ஓனர் தனது வழக்கமான அரை டிரவுசர், டீசர்ட்டுடன் நின்று கொண்டிருந்தார். கடுப்பை மறைத்து கொண்டு, “என்ன சார்?” என்றேன். “ஒனக்கு ஃபோன்பா” “யாரு?” “அந்தப் பையன் பிரேம் இல்ல, அவந்தான்” அது மொபைல்கள் இல்லாத காலம். அதாவது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு. ஹவுஸ் ஓனரின் போர்ஷனிலிருந்த கிணுகிணுக்கும் தொலைபேசிதான் மற்றொரு போர்ஷனில் வாடகைக்கு தங்கியிருந்த எங்கள் நால்வரின் ஒரே தகவல் தொடர்பு... Continue Reading →

மெத்தப் பெரிய உபகாரம்

ஷோபா சக்தியின் எழுத்திற்கு உள்ள மாபெரும் பலம் என்ன? நீங்கள் ஒரு மோசமான மனச்சோர்வில் இருப்பினும் கூட, ஒரு சில பக்கங்களை கடந்து அவரது கதைக்குள் பயணிக்க தொடங்கி விட்டால், பின்னர் அக்கதை தானாக முடியும் வரை, நீங்கள் உங்களை விடுவித்துக் கொள்ள முடியாது. அவரது கதையும், கதை சொல்லும் முறையும் ஒரு பிசாசைப் போல உங்களை ஆட்கொண்டு விடும். அவரது சொற்கள் கொண்டிருக்கும் கவர்ந்திழுக்கும் வாதைக்கு நீங்கள் தன்னையே ஒப்புக் கொடுத்து விடுவீர்கள். 'கொரில்லா'-வை எதிர்கொண்ட பொழுதும்,... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑