காலா: ரஞ்சித்தியவாதிகளின் படையப்பா காமெடி

காலா குறித்த பரபரப்பும், பரவசமும் கூடிய mass hysteria மனநிலையை நாலா திசைகளிலும் காண முடிகிறது. ரஜினிக்காக படம் பார்ப்பவர்களிடம் எந்தக் குழப்பமும் இல்லை. அவர்களது கொண்டாட்டம் … Continue reading காலா: ரஞ்சித்தியவாதிகளின் படையப்பா காமெடி

பார்த்தீனியம்: குருதி பீறிடும் காயங்கள்

ஈழத்தின் இரத்தம் தோய்ந்த போராட்ட வரலாற்றின் பல்வேறு பக்கங்களை, பரிமாணங்களை கதையாக்கியதன் மூலம், இதற்கு முன்னர் வெளிவந்த புனைவு மற்றும் அபுனைவு எழுத்துக்களில் பார்த்தீனியம் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. Continue reading பார்த்தீனியம்: குருதி பீறிடும் காயங்கள்

நக்‌சல்பரி கி ராஸ்தா!

நக்‌சல்பரி கி ராஸ்தா!

இந்திய கம்யூனிச அரசியல் வரலாற்றில் மறுக்கவொண்ணாத முக்கியத்துவம் பெற்ற அத்தகைய நக்சல்பரிக்கு செல்லும் பாதை அருகிலிருக்கும் பொழுது செல்லாமல் விடலாமா? Continue reading நக்‌சல்பரி கி ராஸ்தா!

சாய்ரத்: குறிஞ்சி மலர்

சாய்ரத்: குறிஞ்சி மலர்

சாதி ஆணவப் படுகொலைகள் குறித்து மைய நீரோட்ட சினிமாவில் பதிவு செய்வது, அதுவும் வணிக சினிமாவின் சட்டகத்திற்குள் நின்றவாறே (பிரமிப்பூட்டும் காட்சிகள், கோணங்கள், பாடல்கள்) இயன்ற மட்டும் ஒரு காத்திரமான திரைப்படத்தை உருவாக்குவது என்பது ஒரு சாதனை. அதனை நாகராஜ் சாதித்து காட்டியுள்ளார். Continue reading சாய்ரத்: குறிஞ்சி மலர்

மெத்தப் பெரிய உபகாரம்

ஷோபா சக்தியின் எழுத்திற்கு உள்ள மாபெரும் பலம் என்ன? நீங்கள் ஒரு மோசமான மனச்சோர்வில் இருப்பினும் கூட, ஒரு சில பக்கங்களை கடந்து அவரது கதைக்குள் பயணிக்க … Continue reading மெத்தப் பெரிய உபகாரம்

எனக்கொரு ரோஹித்தைத் தெரியும்.

எனக்கொரு ரோஹித்தைத் தெரியும். அவன் வசிக்கும் உண்டு உறைவிடப் பள்ளிக்கு சென்ற பொழுது இரு முறை அவனுடன் பேசியிருக்கிறேன். அவனுக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கலாம். அவனுடைய … Continue reading எனக்கொரு ரோஹித்தைத் தெரியும்.

ஜல்லிக்கட்டு: சில கேள்விகள்.

ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் நிலவும் குழப்பம் மிகுந்த பல்முனைக் கருத்துப் போராட்டத்தில், சில கேள்விகள் எழும்பிய வண்ணமிருக்கின்றன. 1. சர்வதேச நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சதி குறித்து … Continue reading ஜல்லிக்கட்டு: சில கேள்விகள்.

பார்ப்பன வெறுப்புக் குற்றமும், மேல்சாதி சலிப்பும்!

(ஃபேஸ்புக்கில் பகிர்ந்தவற்றிலிருந்து…) “பார்ப்பன வெறுப்புக் குற்றம்” என்பது எவ்வாறு எல்லையற்று மிகைப்படுத்தப்பட்ட சொல்லாடல் என்பதையும், அதனைக் கட்டியமைக்கும் கருத்துருவாக்கத்தில் முனைந்துள்ள அறிந்தே நடிக்கும் அறிவாளிகளை, கருத்துத்தளத்தில் முறியடிப்பதும் … Continue reading பார்ப்பன வெறுப்புக் குற்றமும், மேல்சாதி சலிப்பும்!

கரை தொடும் அலைகள் #4

(ஃபேஸ்புக்கில் பகிர்ந்தவற்றிலிருந்து…) இந்தப் பாடல் வெளியான நாளிலிருந்து மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். துவக்கத்தில் மெல்ல விரியும் இசைக் கோர்வையும், தொடரும் ஏறத்தாழ ஒரு இதமான கிறிஸ்தவப் … Continue reading கரை தொடும் அலைகள் #4

நந்தவனத்தின் ஆண்டிக்கு…

இந்தநாள் முற்றிலும் எதிர்பாராத நாளல்ல. இப்படி ஒரு நாள் வரும் என்று தெரியத் தான் தெரியும். அவர் சில வருடங்களாகவே உடல்நலக் குறைவுடன்தான் இருந்தார். அவர் எழுதுவதை நிறுத்தி பல்லாண்டுகள் ஆகி விட்டன. ஆயினும், இன்று அவர் இறந்து விட்டார் என்ற செய்தி உருவாக்கும் ஒரு இனம் புரியாத மெல்லிய சோகத்தை எப்படி புரிந்து கொள்வது? Continue reading நந்தவனத்தின் ஆண்டிக்கு…

கருத்துரிமை: பெருமாளுக்கும் வேண்டும், முருகனுக்கும் வேண்டும்!

கருத்துரிமை: பெருமாளுக்கும் வேண்டும், முருகனுக்கும் வேண்டும்!

யானைகளின் காலம் முடிந்து பூனைகளின் காலம் வந்து விட்டது. இன்று நாம் கருத்துரிமை என்கிறோம். அவர்கள் “முற்போக்கு” என்பதற்காக தடை கோருகிறார்கள். இது ஒரு தீராத விளையாட்டாக மாறி விட்டது. Continue reading கருத்துரிமை: பெருமாளுக்கும் வேண்டும், முருகனுக்கும் வேண்டும்!

கரை தொடும் அலைகள் #3

‘மாதொருபாகன்’ நாவலை இதுவரை படிக்கவில்லை. இப்பொழுது வாங்கிய நூல்களில் முதல் நூலாக அதனைத் தான் படிக்கவிருக்கிறேன். இத்தகைய உந்துதலை ஏற்படுத்தும் சாதிய, கலாச்சாரப் பாதுகாவலர்களுக்கு நன்றி. Continue reading கரை தொடும் அலைகள் #3

நக்சலைட் பூச்சாண்டி!

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையின் புறநகர்ப் பகுதியான குன்றத்தூரில், மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சியின் 13 உறுப்பினர்கள் தமிழகக் கியூ பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டதை … Continue reading நக்சலைட் பூச்சாண்டி!

நாளி: வரலாற்றின் தெளிந்த நீரோடை!

பாலு மகேந்திராவின் திரைப்படங்களில் தவறாமல் இடம் பெறும் முக்கியமான கதாபாத்திரம் ஊட்டி. அவரது ஓளிப்பதிவின் வண்ணங்களில் ஊட்டியின் எழில்மிகு அழகு, அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. எண்பதுகள் … Continue reading நாளி: வரலாற்றின் தெளிந்த நீரோடை!

கூடங்குளம் போராட்டம்: மகஇகவின் அருள்வாக்கு!

மகஇக, தனது அரசியல் ஏடான புதிய ஜனநாயகத்தில், கடந்த மே 2012 இதழில் ‘அனுபவங்களும், படிப்பினைகளும்’ என கூடங்குளம் போராட்டம் குறித்ததொரு அருள்வாக்கை வெளியிட்டிருக்கிறது. நம் காலத்தில் நடைபெற்ற ஒரு உணர்வுபூர்வமான மக்கள் போராட்டத்தை, தன்னெழுச்சியாக உதித்ததும், சலியாததுமான ஒரு போராட்டத்தை, விமர்சனம் என்ற பெயரில் மகஇக-வினர் எவ்வாறு கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதை, அரசியல் செயற்பாட்டாளர்கள் அனைவரது கவனத்திற்கும் கொண்டு வருவது அவசியமானதாகப் படுகிறது.

புதிய ஜனநாயகம் முன்வைக்கும் ‘படிப்பினைகளில்’ முதன்மையாதைப் பரிசீலிப்போம். “போராட்டங்களுக்கு அணிதிரண்ட மக்கள் மீது, அவர்களை வழிநடத்திய தலைமை மற்றும் முன்னணியாளர்கள் முழு நம்பிக்கை வைக்கவில்லை. அம்மக்களைப் பற்றிய குறை மதிப்பீடு கொண்டிருந்தார்கள். இது மத்திய தர அறிவுஜீவி வர்க்கத்தினர் உழைக்கும் மக்கள் மீது வழக்கமாகக் கொண்டிருக்கும் கீழானதொரு கண்ணோட்டம்தான். “என்னதான் எடுத்துச் சொன்னாலும் மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். மேலும், எல்லா உண்மைகளையும் மக்களிடம் சொல்லக் கூடாது; சொல்லவேண்டிய அவசியம் இல்லை; சொன்னால் பயந்து விடுவார்கள்; போராடத் துணியமாட்டார்கள்; போராட முன் வரமாட்டார்கள்; பின்வாங்கி விடுவார்கள்” என்று அறிவுஜீவிகள் கருதுகிறார்கள். உண்மையில் இது அறிவுஜீவிகளிடமே உள்ள குறைபாடு; இருப்பதையும் இழந்துவிடுவோம் என்ற அச்சம் தான் இதற்குக் காரணம். உண்மையில் உழைக்கும் மக்கள் பாட்டாளிகள் மட்டுமல்ல; வரலாற்றுப் படைப்பாளிகள்.” வேடிக்கை என்னவென்றால், தமது ‘அரிய கண்டுபிடிப்பிற்கு’ மகஇக மேதாவிகள் எவ்வித ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள், அதாவது அணு உலை எதிர்ப்புக் கூட்டமைப்பினர், போராடிய மக்களைக் குறித்து இவ்வாறு கருத்து கொண்டிருந்ததற்கான பேச்சு அல்லது நடைமுறை என எந்த ஆதாரங்களும் முன்வைக்கப்படவில்லை. மாறாக, கிசுகிசு பாணியில் ஒரு கருத்தை சொல்லி விட்டு, அதிலிருந்து உழைக்கும் மக்கள் பற்றி நமக்கு வகுப்பெடுக்கிறார்கள். இதன் மூலம் போராட்டத் தலைமையை கொச்சைப்படுத்தவும், ஒட்டுமொத்த போராட்டத்தை திரிக்கவும் முயல்கிறார்கள்.

Continue reading “கூடங்குளம் போராட்டம்: மகஇகவின் அருள்வாக்கு!”