சத்தீஸ்கரில் நிகழ்ந்த பழங்குடிகள் படுகொலை: வெறுமனே போர் விபத்தல்ல!

கடந்த ஜூன் 28, 2012 அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசுப் படைகள் நிகழ்த்திய படுகொலையை கண்டித்து, புது தில்லியைச் சேர்ந்த ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் நடுவம் (PUDR) வெளியிட்ட அறிக்கையின் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சர்கேல்குடா கிராமத்தில் பாதுகாப்புப் படைகள் நிகழ்த்திய, கோழைத்தனமான 19 கிராமவாசிகளின் பச்சைப் படுகொலையை ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் நடுவம் (PUDR) வன்மையாக கண்டிக்கிறது. கொல்லப்பட்டவர்களில் 12-15 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளும் அடங்குவர். மேலும், கத்தி, அரிவாள் மற்றும்... Continue Reading →

லுமும்பா: இரத்தம் தோய்ந்த வரலாறு!

குறிப்பு: கடந்த ஜனவரி 17-ஆம் தேதியுடன், ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள காங்கோவின் தேச விடுதலை நாயகன் பத்ரீஸ் லுமும்பா படுகொலை செய்யப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து விட்டன. அவர் காங்கோவிலுள்ள கடாங்கா மாகாணத்தில், கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரைப் படுகொலை செய்த புனிதக் கூட்டணி, அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, பெல்ஜிய அரசு, காங்கோவை சூறையாடிய சுரங்க நிறுவனங்கள் மற்றும் மக்களை கட்டுப்பாட்டில் வைக்க முயன்ற கூலிப்படைகள் என நீள்கிறது. ஐம்பதாண்டுகள் கழிந்தும் மாறாத வடுக்களினால்,... Continue Reading →

1984 சீக்கியர் படுகொலைகள்: சர்தார்ஜி மட்டும் உயிரோடிருந்தால்…

"இந்திராஜி கொலை செய்யப்பட்டதையொட்டி, நமது நாட்டில் சில கலவரங்கள் நடைபெற்றன. எல்லோரும் அப்பொழுது மிகவும் ஆத்திரத்தில் இருந்தனர் என்பதை நாம் அறிவோம். மொத்தத்தில் இந்தியாவே குலுங்கியது போல் இருந்தது. ஆனால், ஒரு பெரும்மரம் விழும் பொழுது பூமி அதிர்வது இயற்கையானதே!" - ராஜீவ் காந்தி, நவம்பர் 19, 1984, தனது முதல் பொதுக்கூட்ட உரையில்... "காங்கிரசைப் பொருத்தவரை இதனை நாம் மறந்து விட வேண்டும், ஒரு விபத்தாக கருத வேண்டும். 'இப்பொழுதாவது மறந்து விடுங்கள். குறைந்தபட்சம் நாங்கள்... Continue Reading →

ஒரிசா: கொந்தளிக்கும் மறுகாலனியாக்கப் போர்க்களம்!

கடந்த சில மாதங்களாக, ம.க.இ.க முதலான புரட்சிகர அமைப்புகளும், நாடு முழுவதுமுள்ள அறிவுஜீவிகளும், மறுகாலனியாக்கத்தின் கீழ், வரை முறையற்ற நிலப்பறிப்பு நாடு முழுவதும் நடந்து வருவதை தீவிரமாக அம்பலப்படுத்தி இயக்கங்களை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக, மத்திய, மாநில அரசுகள் இணைந்து கொண்டு, இந்தியாவின் மத்தியப் பகுதியில் வாழும், நமது நாட்டின் பூர்வகுடிகளான பழங்குடி மக்களை, கூண்டோடு நிலங்களிலிருந்து அடித்து விரட்டியும், திமிறுபவர்களை இரக்கமின்றி கொலை செய்தும், பெண்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியும் வருகின்றன. மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தி... Continue Reading →

இரங்கல் – II

கடந்த மாதம், வங்காளத்தில் ஒரு முதுபெரும் 'கம்யூனிஸ்ட்' தலைவர் மறைந்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இடதுசாரிகள், கூட்டணி அரசில் பங்கேற்ற பொழுது, பங்குச் சந்தைகள் சரிந்தன.  உலகமயமத்தின் 'ஒளிமயமான' பாதைக்கு ஊறு நேர்ந்து விடுமே என ஆங்கிலத் தொலைக்காட்சிகள் பதைபதைத்தன.. ஆனால், ''வங்கத்துச் சிங்கத்தின்' வாழ்வு முடிவுக்கு வந்த போதோ, அதே தொலைக்காட்சிகள் ஒப்பாரி வைப்பதில் போட்டி போட்டன.  'இடதுசாரிகள்' எனப் பொதுவாக அழைக்கப்படும் போலிக் கம்யூனிஸ்டுகள் 'தேசிய நீரோட்டத்தில்' கலந்து யுகங்கள் கழிந்த பின்னால், அவை... Continue Reading →

பத்து வருடங்களாகப் போராடும் ஐரோம் சர்மிளா!

வரும் நவம்பர் 2, 2009 அன்று, மணிப்பூரைச் சேர்ந்த கவிஞரும், செயல் வீரருமான ஐரோம் சர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டத்தின் பத்தாவது ஆண்டு துவங்குகிறது. இந்திய அரசின் ஆயுத படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் (AFSPA) திரும்பப் பெறக் கோரி, அவர் கடந்த பத்தாண்டுகளாக போராடி வருகிறார். 1958-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சட்டத்தின்படி, வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும், எவரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், அவர்களது வீடுகளில் புகவும், சந்தேகத்தின் பேரிலேயே கூட சுட்டுக் கொலை செய்யவும் இந்திய இராணுவத்திற்கு... Continue Reading →

தார்மீகத் திசைகாட்டி!

குறிப்பு: மனித உரிமைப் போராளி முனைவர் கே.பாலகோபாலின் நினைவாக இப்பதிவு எழுதப்பட்டுள்ளது. திரு.கோ.சுகுமாரன் எழுதிய இரங்கலிலிருந்து சில மேற்கோள்களும், எழுத்தாளர் வ.கீதா எழுதிய இரங்கலின் மொழியாக்கமும் தரப்பட்டுள்ளது. கீழ்க்காணும் கட்டுரைகளின் சில கருத்துக்களிலும், பாலகோபால் அவர்களின் சில கருத்துக்களிலும், எனக்கு கருத்து மாறுபாடு உண்டென்றாலும், மனித உரிமைச் செயல்பாடுகளில் முன்னுதாரணமாக விளங்கிய பாலகோபால் அவர்களைக் குறித்து தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடனேயே இப்பதிவு வெளியிடப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மனித உரிமைப்... Continue Reading →

நான் ஏன் செருப்பை வீசியெறிந்தேன்?

குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த 'குற்றத்திற்காக' ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. ... நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான... Continue Reading →

என்.ராமாயணம் – வீதி நாடகம்!

புகைப்பட ஆக்கம்: தோழர் கலகம் சூத்திரதாரி: பெரியோர்களே,தாய்மார்களே! கூடி நிற்கும் பொதுமக்களே! வரலாற்றுச்சிறப்புமிக்க நாடகத்தை காண வந்திருக்கும் மகாஜனங்களே! இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற காவியம் இதோ ஆரம்பமாகவிருக்கிறது! என்.ராமாயணம்! என் ஃபார் நாரதர்! அதாவது நாரதர் ராமாயணம்! அதாகப்பட்டது என்னவெனில், பன்னெடுங்காலாமாய் பரந்து விரிந்த ஆரியப் பண்பாட்டை சீரும் சிறப்புமாய் விந்திய மலைக்கு அப்பால் வளர்த்தெடுத்த பெருமகனாரும், சாட்சாத் மகா விஷ்ணுவின் மவுண்ட்ரோடு கொ.ப.செ-வாக கொடி நாட்டிய கோமானும், நல்லதை தீயதாகவும், தீயதை நல்லதாகவும் மாற்றும் மகா... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑