லுமும்பா: இரத்தம் தோய்ந்த வரலாறு!

குறிப்பு: கடந்த ஜனவரி 17-ஆம் தேதியுடன், ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள காங்கோவின் தேச விடுதலை நாயகன் பத்ரீஸ் லுமும்பா படுகொலை செய்யப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து விட்டன. அவர் காங்கோவிலுள்ள கடாங்கா மாகாணத்தில், கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரைப் படுகொலை செய்த புனிதக் கூட்டணி, அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, பெல்ஜிய அரசு, காங்கோவை சூறையாடிய சுரங்க நிறுவனங்கள் மற்றும் மக்களை கட்டுப்பாட்டில் வைக்க முயன்ற கூலிப்படைகள் என நீள்கிறது. ஐம்பதாண்டுகள் கழிந்தும் மாறாத வடுக்களினால், … லுமும்பா: இரத்தம் தோய்ந்த வரலாறு!-ஐ படிப்பதைத் தொடரவும்.

மை நேம் இஸ் கான்: உலகமய மசாலா!

இது "Feel Good Movie"-க்களின் யுகம்.  தமிழில் சொன்னால், 'மனதுக்கு இனிமை தரும் படங்களின்' காலம். உலகம் கிராமமாகச் சுருங்கும் உலகமய, தகவல் தொழில்நுட்ப யுகத்தின் பொற்காலத்தில் வாழும் உலகமயக் குடிமக்கள் Feel Good Movie-க்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறார்கள். பரவசமடைகிறார்கள். கண்ணீர் விடுகிறார்கள். யதார்த்த உண்மை மனதுக்கும், சிந்தனைக்கும் இனிமையாக இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்கு அங்கு இடமில்லை. உண்மை போல தோற்றமளித்தால் போதும். மனதுக்கு இனிமையளிப்பதுதான் முக்கியம். பிறகு, ஸ்லம்டாக் மில்லியனரைக் கொண்டாடியதைப் போல, … மை நேம் இஸ் கான்: உலகமய மசாலா!-ஐ படிப்பதைத் தொடரவும்.

நான் ஏன் செருப்பை வீசியெறிந்தேன்?

குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த 'குற்றத்திற்காக' ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. ... நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான … நான் ஏன் செருப்பை வீசியெறிந்தேன்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அமெரிக்க சிந்துபாத்களும், பின்லேடன் வேட்டையும்!

காலகாலமாய் கன்னித்தீவைத் தேடும் சிந்துபாத் கதை, நாம் அறிந்தது. ஏறத்தாழ ஆறாண்டுகளுக்கு முன்பு, செப் 11, 2001–க்கு பிறகு தொடங்கிய ஒசாமா வேட்டை, சிந்துபாத் கதைக்கு சற்றும் குறைந்ததல்ல. "அதெப்படி, எந்நேரமும் ரோந்து செல்லும் எண்ணிலடங்கா ஆளில்லா விமானங்கள், அலசி ஆராயும் உளவு செயற்கைக்கோள்கள், அதி நவீனப் பயிற்சி பெற்ற கமாண்டோப் படைகள், மில்லியன் கணக்கிலான பரிசுத் தொகை... இத்தனை இருந்தும், மத்திய காலத்து மனப்போக்கு கொண்ட, உடல் நலிந்துள்ளதாகக் கூறப்படும் ஒரு நடுத்தர வயது மதவெறியனை, … அமெரிக்க சிந்துபாத்களும், பின்லேடன் வேட்டையும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.