பார்த்தீனியம்: குருதி பீறிடும் காயங்கள்

ஈழத்தின் இரத்தம் தோய்ந்த போராட்ட வரலாற்றின் பல்வேறு பக்கங்களை, பரிமாணங்களை கதையாக்கியதன் மூலம், இதற்கு முன்னர் வெளிவந்த புனைவு மற்றும் அபுனைவு எழுத்துக்களில் பார்த்தீனியம் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

மெத்தப் பெரிய உபகாரம்

ஷோபா சக்தியின் எழுத்திற்கு உள்ள மாபெரும் பலம் என்ன? நீங்கள் ஒரு மோசமான மனச்சோர்வில் இருப்பினும் கூட, ஒரு சில பக்கங்களை கடந்து அவரது கதைக்குள் பயணிக்க தொடங்கி விட்டால், பின்னர் அக்கதை தானாக முடியும் வரை, நீங்கள் உங்களை விடுவித்துக் கொள்ள முடியாது. அவரது கதையும், கதை சொல்லும் முறையும் ஒரு பிசாசைப் போல உங்களை ஆட்கொண்டு விடும். அவரது சொற்கள் கொண்டிருக்கும் கவர்ந்திழுக்கும் வாதைக்கு நீங்கள் தன்னையே ஒப்புக் கொடுத்து விடுவீர்கள். 'கொரில்லா'-வை எதிர்கொண்ட பொழுதும், … மெத்தப் பெரிய உபகாரம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கண்ணீரின் சொற்கள்!

உன் கண்களைப் பார்க்காமலிருக்க முயல்கிறேன். உனது பால் முகத்தை நினைக்காமலிருக்க முயல்கிறேன். மீண்டும் மீண்டும் நீ மனக்கண்ணில் மெல்ல எழும்பிய வண்ணமிருக்கிறாய். உன் முகத்தில் நிலவும் மெளனம்... உன் விழிகளில் தங்கி நிற்கும் அமைதி... உன்னுள்ளே படிந்து நிற்கும் கேள்விகள்... இயலாமை உண்டாக்கும் சினத்திலும், வேதனையிலும் உள்ளூர ஏதோ பிசைந்து கொல்கிறது. செய்வதறியாது இறுகிய முகத்துடன் கண்களில் பனிக்கும் கண்ணீரைத் தேக்கி சொற்களாக்க முயல்கிறேன். நீதி என ஒன்று இருக்குமானால், நீதிக்கான யுத்தம் என்பது உண்மையானால், நீதி … கண்ணீரின் சொற்கள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

மே-17: ஓயாது நினைவுகள்!

இனி ஒவ்வொரு ஆண்டும் பல கவிஞர்கள் தவறாமல் கவிதைகள் எழுதும் நாளாயிருக்கும். அவற்றில், எது உண்மையான உணர்ச்சியிலிருந்து எழும்பியது, எது வார்த்தைகளை மடித்துப் போட்டது என்பது, சித்தி பெற்ற நிறைபோதையில் விக்கிரமாதித்யன் கூட கண்டறிய இயலாத புதிராயிருக்கும். பதிவர்கள் காத்திருந்து பதிவிடும் நாளாயிருக்கும். கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்களைப் பற்றி... ஏன் தாக்குகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளாத குற்றத்தைச் செய்த குழந்தைகளைப் பற்றி... ஷெல் விழும் வேளைகளில் கர்ப்பமுறாத வயிறுகளே வெடிக்கையில், எனது சிசுவைக் காப்பாற்று என, வெடிகுண்டு … மே-17: ஓயாது நினைவுகள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

முள்கம்பி வேலிகள்!

ஒவ்வொரு நாளும் செய்தித்தாள் வரிகளில் இந்த இரண்டு சொற்களில் நின்று தயங்குகின்றன கண்கள். உறைந்து நிற்கும் புகைப்படத்திலிருந்து ஒரு மெளன ஓலம் மெல்ல எழும்பி காதுகளை அடைக்கின்றது. சட்டெனக் கடந்து தாள் திருப்புகையில், சடாரென அடங்குகிறது வலி. செய்தித்தாளை மூடி வைக்கையில் கண்களுக்குள் மெல்ல எழும்பும், ஒரு கப்பல்... ஆப்பிரிக்காவில் பிடிக்கப்பட்ட கறுப்பின அடிமைகள், சரக்குகளோடும், கால்நடைகளோடும் கொத்தாக மூட்டை கட்டப்பட்டு, அமெரிக்காவிற்கு பயணிக்கும் ஒரு கப்பல்... நான் வாழாத காலத்தின் வரலாற்றுக் காட்சி விரிதலின் தொடர்ச்சியில், … முள்கம்பி வேலிகள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

என்.ராமாயணம் – வீதி நாடகம்!

புகைப்பட ஆக்கம்: தோழர் கலகம் சூத்திரதாரி: பெரியோர்களே,தாய்மார்களே! கூடி நிற்கும் பொதுமக்களே! வரலாற்றுச்சிறப்புமிக்க நாடகத்தை காண வந்திருக்கும் மகாஜனங்களே! இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற காவியம் இதோ ஆரம்பமாகவிருக்கிறது! என்.ராமாயணம்! என் ஃபார் நாரதர்! அதாவது நாரதர் ராமாயணம்! அதாகப்பட்டது என்னவெனில், பன்னெடுங்காலாமாய் பரந்து விரிந்த ஆரியப் பண்பாட்டை சீரும் சிறப்புமாய் விந்திய மலைக்கு அப்பால் வளர்த்தெடுத்த பெருமகனாரும், சாட்சாத் மகா விஷ்ணுவின் மவுண்ட்ரோடு கொ.ப.செ-வாக கொடி நாட்டிய கோமானும், நல்லதை தீயதாகவும், தீயதை நல்லதாகவும் மாற்றும் மகா … என்.ராமாயணம் – வீதி நாடகம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

அதிகாரபூர்வமாக…

"Please try to look for my son. He was wearing a red T-shirt," says Dara. Rupa adds, "maroonish-red T-shirt." Seven years after the post-Godhra riots, Gujarat has redrawn its list of the dead — the missing are now presumed dead.The official toll, hence, stands corrected — 1,180 dead instead of 952.The official toll in Naroda … அதிகாரபூர்வமாக…-ஐ படிப்பதைத் தொடரவும்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்?

இவ்வியக்கத்தின் சமீபத்திய -லேட்டஸ்ட்- வரவு, 'போராளி' தமிழிசை செளந்தர் ராஜன். யார் இந்த தமிழிசை செளந்தர் ராஜன்? பா.ஜ.க வின் தமிழகப் பிரமுகர். எந்த பா.ஜ.க? விடுதலைப் புலிகள் இசுலாமியர் மீது நடத்திய தாக்குதல்களினால் ஆர்வமுற்று, அவ்வமைப்பு 'இந்துக்களுக்கான' அமைப்பு எனப் பாராட்டிய பால்தாக்கரேயின் உடன் பிறப்பு. பா.ஜ.கவும் ஈழத்தமிழர்களுக்காகப் போராடப் போகிறதாம். என்ன வரலாற்று வினோதம்? ஒருவர் கலைஞரைத் திட்டுகிறார். ஒருவர் மன்மோகன் சிங்கைத் திட்டுகிறார். மறந்து கூட யாரும் ஜெயலலிதாவைப் பற்றி, சோவைப் பற்றி … இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நெருப்பு!

கருகிக் கிடக்கிறதொரு உயிர். நேற்றுத்தான் புரிந்தது அதற்குள் கனன்று கொண்டிருந்திருக்கிறதொரு புயல். எத்தனை சொற் சிலம்பங்கள், மேடைச் சவடால்கள், கட்டுரைகள், கவிதைகள்? ஒற்றைக் கணத்தில் நெருப்பினால் பதிலளித்து கடந்து சென்று விட்டாய் முத்துக்குமார். உனக்கு இரங்கற்பா பாடுவது உன்னைச் சிறுமைப்படுத்தும். நீ விட்டுச் சென்ற நெருப்புத் துளிகள் எமக்குள் கனல்கின்றன. அவை பரவும். திசையெங்கும் எரியும். பின்குறிப்பு: முத்துக்குமாரின் வீரமரணத்தை நினைவில் கொள்ளும் வேளையில், நேற்று இலங்கை வங்கி தாக்கப்பட்டதே பின்பற்ற வேண்டிய உதாரணம். இது மேலும் … நெருப்பு!-ஐ படிப்பதைத் தொடரவும்.