மாயப் புதிர்

இதுவரை முடிவுறாத கருந்துளையின் நீண்ட பயணத்தில், தலை திருப்பிப் பார்க்கும் தருணம் பற்றி வந்த இழைகளின் வேர்கள் மங்கலாகக் காட்சியளிக்கின்றன. எங்கோ தொலைதூரத்தில் அடிவானத்தில் அவை கிடக்க வேண்டும். மருந்தின் கிளை பற்றி மெல்ல ஊர்ந்து செல்லும் பொழுதுகளில், மாயப் புதிரின் பிரக்ஞை மிச்சமிருக்கும் மொழியையும் கீறலின்றி கொன்று போடுகிறது. இருண்மையின்றி இனியேது சொற்கள்? ... கலைத்துப் போடு. கைதொடும் வண்ணம் கொண்டு வேண்டிய மட்டும் தீட்டு. ஆங்காங்கே காகிதத்தை கிழித்து விடு. மொத்தத்தில் மாயப் புதிராக்கு. … மாயப் புதிர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கூடங்குளம் போராட்டம்: மகஇகவின் அருள்வாக்கு!

மகஇக, தனது அரசியல் ஏடான புதிய ஜனநாயகத்தில், கடந்த மே 2012 இதழில் 'அனுபவங்களும், படிப்பினைகளும்' என கூடங்குளம் போராட்டம் குறித்ததொரு அருள்வாக்கை வெளியிட்டிருக்கிறது. நம் காலத்தில் நடைபெற்ற ஒரு உணர்வுபூர்வமான மக்கள் போராட்டத்தை, தன்னெழுச்சியாக உதித்ததும், சலியாததுமான ஒரு போராட்டத்தை, விமர்சனம் என்ற பெயரில் மகஇக-வினர் எவ்வாறு கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதை, அரசியல் செயற்பாட்டாளர்கள் அனைவரது கவனத்திற்கும் கொண்டு வருவது அவசியமானதாகப் படுகிறது. புதிய ஜனநாயகம் முன்வைக்கும் 'படிப்பினைகளில்' முதன்மையாதைப் பரிசீலிப்போம். "போராட்டங்களுக்கு அணிதிரண்ட மக்கள் மீது, … கூடங்குளம் போராட்டம்: மகஇகவின் அருள்வாக்கு!-ஐ படிப்பதைத் தொடரவும்.

மே-17: ஓயாது நினைவுகள்!

இனி ஒவ்வொரு ஆண்டும் பல கவிஞர்கள் தவறாமல் கவிதைகள் எழுதும் நாளாயிருக்கும். அவற்றில், எது உண்மையான உணர்ச்சியிலிருந்து எழும்பியது, எது வார்த்தைகளை மடித்துப் போட்டது என்பது, சித்தி பெற்ற நிறைபோதையில் விக்கிரமாதித்யன் கூட கண்டறிய இயலாத புதிராயிருக்கும். பதிவர்கள் காத்திருந்து பதிவிடும் நாளாயிருக்கும். கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்களைப் பற்றி... ஏன் தாக்குகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளாத குற்றத்தைச் செய்த குழந்தைகளைப் பற்றி... ஷெல் விழும் வேளைகளில் கர்ப்பமுறாத வயிறுகளே வெடிக்கையில், எனது சிசுவைக் காப்பாற்று என, வெடிகுண்டு … மே-17: ஓயாது நினைவுகள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

திசை-II

காலம் முயங்கிய இருண்ட இரவில், வறண்ட கடலின் வழியே கட்டுமரத்தில் கால் ஊன்றி, வான்கா வார்த்தைகளற்று துடுப்பு வலித்துக் கொண்டிருந்தான். சுழன்றடித்த சூறாவளியில் திசைகள் தடுமாறின. துவங்கிய இடத்திற்கே பின்வாங்கிச் செல்வதா? கவர்ந்திழுக்கும் அபின் படர்ந்த தீவில் ஒதுங்கி விடுவதா? உயிரான உணர்வை புதைத்து விடுவதா? நேசித்த இதயங்களை மறந்து விடுவதா? சுவாசித்த தோழமையை விழுங்கி விடுவதா? வழி தொலைத்த வலியில் இறந்து வாழ்வதா? இரக்கமற்ற அலைகளில் உலைந்து உலைந்து, உலைந்து உலைந்து, சத்தமின்றி விகசித்தவாறு... தொப்பியணிந்த … திசை-II-ஐ படிப்பதைத் தொடரவும்.