கரை தொடும் அலைகள் #3

'மாதொருபாகன்' நாவலை இதுவரை படிக்கவில்லை. இப்பொழுது வாங்கிய நூல்களில் முதல் நூலாக அதனைத் தான் படிக்கவிருக்கிறேன். இத்தகைய உந்துதலை ஏற்படுத்தும் சாதிய, கலாச்சாரப் பாதுகாவலர்களுக்கு நன்றி.

கரை தொடும் அலைகள் #2

கடந்த ஞாயிறு காலையில் மகஇக பொருளாளர் தோழர் சீனிவாசனின் இறுதி நிகழ்விற்கு சென்றிருந்தேன். அவ்வமைப்பிலிருந்து விலகி விட்ட போதிலும், அவர் மீதான அன்பின், மரியாதையின் காரணமாக அவரது கடைசிப் பயணத்தில் உடனிருப்பது அவசியமெனப்பட்டது. அதிகாலையில் சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலை சென்றடைந்ததும், அவரது உடலை வணங்கச் சென்றேன். மெலிந்து கூடாகக் கிடந்தார். பலரது நினைவில் இன்னமும் நிழலாடும் உற்சாகமான சிரிப்பும், சற்றே பூசிய உடலும் கொண்ட சீனிவாசன் அவரல்ல எனத் தோன்றியது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சீனிவாசனை நான்... Continue Reading →

கரை தொடும் அலைகள் #1

சமீபத்தில் இலண்டனில் தாய்ப்பால் கொண்டு தயாரிக்கப்பட்ட ஐஸ்க்ரீம்களை ஒரு நிறுவனம் மிகுந்த விளம்பரங்களுக்கிடையில் விற்றுள்ளது. முதல் நாளே எக்கச்சக்கமாக ஐஸ்க்ரீம்கள் விற்றுத் தீர்ந்து விட்டனவாம். எனினும், பின்னர் அரசு தலையிட்டு தற்காலிகமாக விற்பனையை தடுத்து நிறுத்தியுள்ளது. சோதனைகளின் பின்னரே விற்பனையை அனுமதிப்போம் என்றும் கூறியுள்ளது. தாய்ப்பாலில் உள்ள கொழுப்புச் சத்துக்காகவே ஐஸ்க்ரீம்களில் தாய்ப்பால்  கலக்கப்பட்டுள்ளதாகவும், பெண்களுடைய முழு உடன்பாட்டுடனேயே 'தயாரிப்பு' நடைபெறுவதாகவும் சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. மார்க்ஸ் குறிப்பிட்ட  'சரக்குமயமாதல்' (commodification) என்பதன் தீர்க்கமான உதாரணம் இதுதான்.... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑