ஒரு ‘கம்யூனிஸ்ட்’ கிராமத்தில் நிகழ்ந்த காதல் கதை!

கதவு தட்டப்படும் ஓசை தொலைதூரத்தில் கேட்டது. திடுக்கிட்டு விழித்து எழுந்தவன், கதவைத் திறந்தேன். ஹவுஸ் ஓனர் தனது வழக்கமான அரை டிரவுசர், டீசர்ட்டுடன் நின்று கொண்டிருந்தார். கடுப்பை மறைத்து கொண்டு, “என்ன சார்?” என்றேன். “ஒனக்கு ஃபோன்பா” “யாரு?” “அந்தப் பையன் பிரேம் இல்ல, அவந்தான்” அது மொபைல்கள் இல்லாத காலம். அதாவது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு. ஹவுஸ் ஓனரின் போர்ஷனிலிருந்த கிணுகிணுக்கும் தொலைபேசிதான் மற்றொரு போர்ஷனில் வாடகைக்கு தங்கியிருந்த எங்கள் நால்வரின் ஒரே தகவல் தொடர்பு … ஒரு ‘கம்யூனிஸ்ட்’ கிராமத்தில் நிகழ்ந்த காதல் கதை!-ஐ படிப்பதைத் தொடரவும்.

பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்…

அஞ்சலிகள் வீர வணக்கங்கள் முழக்கங்கள் கவிதைகள் கண்ணீர்த் துளிகள் மெழுகுவர்த்திகள் இறுதியில் எல்லாம் ஒன்றுதான். கும்பகோணம் குழந்தைகள் முத்துக்குமார் செங்கொடி முருகதாசன் வினோதினி அதே வரிசையில் அதே நபர்களிடமிருந்து அஞ்சலிகள் வீர வணக்கங்கள் முழக்கங்கள் கவிதைகள் கண்ணீர்த் துளிகள் மெழுகுவர்த்திகள் சிலர் விடுபடலாம். புதிதாக சிலர் வந்து விடலாம். பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். பார்த்துக் கொண்டேதான் இருப்போம் போலும்.

கரை தொடும் அலைகள் #2

கடந்த ஞாயிறு காலையில் மகஇக பொருளாளர் தோழர் சீனிவாசனின் இறுதி நிகழ்விற்கு சென்றிருந்தேன். அவ்வமைப்பிலிருந்து விலகி விட்ட போதிலும், அவர் மீதான அன்பின், மரியாதையின் காரணமாக அவரது கடைசிப் பயணத்தில் உடனிருப்பது அவசியமெனப்பட்டது. அதிகாலையில் சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலை சென்றடைந்ததும், அவரது உடலை வணங்கச் சென்றேன். மெலிந்து கூடாகக் கிடந்தார். பலரது நினைவில் இன்னமும் நிழலாடும் உற்சாகமான சிரிப்பும், சற்றே பூசிய உடலும் கொண்ட சீனிவாசன் அவரல்ல எனத் தோன்றியது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சீனிவாசனை நான் … கரை தொடும் அலைகள் #2-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆரக்க்ஷன்: யாருக்கு எதிரானது?

கடந்த வெள்ளியன்று வெளியான 'ஆரக்க்ஷன்' (இடஒதுக்கீடு) திரைப்படம், வெளியாகும் முன்பே பஞ்சாப், ஆந்திரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும் சிற்சில அமைப்பினர் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னையில் ஆரக்க்ஷன் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு எதிரே கடந்த இரு தினங்களில் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியுள்ளனர். பா.ம.க-வும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இத்திரைப்படம் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகவும் எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள் கூறி வருகின்றன. தடை … ஆரக்க்ஷன்: யாருக்கு எதிரானது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தோபி காட்: நுட்பமான திரைமொழி!

சில திரைப்படங்கள் திரையரங்கை விட்டு வெளியேறியவுடன் மனதை விட்டும் வெளியேறி விடுகின்றன. சில திரைப்படங்கள் கரை அலம்பும் அலைகளாய் மீண்டும் மீண்டும் நினைவில் எழும்பிக் கொண்டிருக்கும். சமீபத்தில் வெளியான இந்தித் திரைப்படம், 'தோபி காட்'(வண்ணான் படுகை) அத்தகைய திரைப்படங்களில் ஒன்று. இந்தித் திரைப்படவுலகை தொடர்ந்து கவனிப்பவர்கள், சமீப காலங்களில் இரு விதமான போக்குகள் அருகருகே தொடர்ந்து வளர்ந்து கொண்டிருப்பதை காணலாம். ஒரு புறம், கோடிக்கணக்கான பணத்தை வீணடித்து, அபத்தங்களின் புதிய புதிய உச்சங்களை தொடும் வண்ணம் எடுக்கப்படும் … தோபி காட்: நுட்பமான திரைமொழி!-ஐ படிப்பதைத் தொடரவும்.

மே-17: ஓயாது நினைவுகள்!

இனி ஒவ்வொரு ஆண்டும் பல கவிஞர்கள் தவறாமல் கவிதைகள் எழுதும் நாளாயிருக்கும். அவற்றில், எது உண்மையான உணர்ச்சியிலிருந்து எழும்பியது, எது வார்த்தைகளை மடித்துப் போட்டது என்பது, சித்தி பெற்ற நிறைபோதையில் விக்கிரமாதித்யன் கூட கண்டறிய இயலாத புதிராயிருக்கும். பதிவர்கள் காத்திருந்து பதிவிடும் நாளாயிருக்கும். கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்களைப் பற்றி... ஏன் தாக்குகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளாத குற்றத்தைச் செய்த குழந்தைகளைப் பற்றி... ஷெல் விழும் வேளைகளில் கர்ப்பமுறாத வயிறுகளே வெடிக்கையில், எனது சிசுவைக் காப்பாற்று என, வெடிகுண்டு … மே-17: ஓயாது நினைவுகள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

திசை-II

காலம் முயங்கிய இருண்ட இரவில், வறண்ட கடலின் வழியே கட்டுமரத்தில் கால் ஊன்றி, வான்கா வார்த்தைகளற்று துடுப்பு வலித்துக் கொண்டிருந்தான். சுழன்றடித்த சூறாவளியில் திசைகள் தடுமாறின. துவங்கிய இடத்திற்கே பின்வாங்கிச் செல்வதா? கவர்ந்திழுக்கும் அபின் படர்ந்த தீவில் ஒதுங்கி விடுவதா? உயிரான உணர்வை புதைத்து விடுவதா? நேசித்த இதயங்களை மறந்து விடுவதா? சுவாசித்த தோழமையை விழுங்கி விடுவதா? வழி தொலைத்த வலியில் இறந்து வாழ்வதா? இரக்கமற்ற அலைகளில் உலைந்து உலைந்து, உலைந்து உலைந்து, சத்தமின்றி விகசித்தவாறு... தொப்பியணிந்த … திசை-II-ஐ படிப்பதைத் தொடரவும்.

உன்மத்த நிலையின் 360 டிகிரி!

"ஸீரோ டிகிரியை எழுதிய போது இருந்த அதே உன்மத்த நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். நேற்று காலையிலிருந்து மாலை வரை எழுதினேன். அதையெல்லாம் என் சுயநினைவிலிருந்து எழுதினேன் என்று சொல்ல முடியாது. ஏதோ ஒரு பேய் அல்லது மோகினி என் உடலில் புகுந்து கொண்டு எழுதுவது போல் தோன்றுகிறது. சாமியாடி சாமி ஆடுவானே அது போல என்று வைத்துக் கொள்ளலாம்." உத்தமத் தமிழ் எழுத்தாளரின் ஜென்ம விரோதியும், ஸாரா பப்பில் மட்டுமே குடித்து வாழ வேண்டிய அவல நிலையில் … உன்மத்த நிலையின் 360 டிகிரி!-ஐ படிப்பதைத் தொடரவும்.

சாவித் துவாரம்!

எல்லாத் திசைகளிலிருந்தும் கற்கள் பறக்கின்றன... சாவித் துவாரத்தின் பரவசத்தோடு திரும்பும் திசையெங்கும் கூச்சல்கள்... பெயரை உறுதி செய்து பெருமூச்செறிகிறது சமூக அக்கறை. நம்பியவர்கள் விசனப்படலாம். ஆனால், நாடே கொதிக்கிறது..! வேடிக்கையாக இருக்கிறது, வெறுப்பாகவுமிருக்கிறது!

இரங்கல் – II

கடந்த மாதம், வங்காளத்தில் ஒரு முதுபெரும் 'கம்யூனிஸ்ட்' தலைவர் மறைந்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இடதுசாரிகள், கூட்டணி அரசில் பங்கேற்ற பொழுது, பங்குச் சந்தைகள் சரிந்தன.  உலகமயமத்தின் 'ஒளிமயமான' பாதைக்கு ஊறு நேர்ந்து விடுமே என ஆங்கிலத் தொலைக்காட்சிகள் பதைபதைத்தன.. ஆனால், ''வங்கத்துச் சிங்கத்தின்' வாழ்வு முடிவுக்கு வந்த போதோ, அதே தொலைக்காட்சிகள் ஒப்பாரி வைப்பதில் போட்டி போட்டன.  'இடதுசாரிகள்' எனப் பொதுவாக அழைக்கப்படும் போலிக் கம்யூனிஸ்டுகள் 'தேசிய நீரோட்டத்தில்' கலந்து யுகங்கள் கழிந்த பின்னால், அவை … இரங்கல் – II-ஐ படிப்பதைத் தொடரவும்.