ஒண்டிப்புலி கவிதையும், புண்படும் உரிமையும்!

உனக்கும், எனக்கும், அவனுக்கும், எனக்கும், உனக்கும், அவனுக்கும், அவனுக்கும், இவனுக்குமான வாள்வீச்சுகளில் உருத்தெரியாமல் கிடக்கிறது கொலையுண்ட வரலாறு. உனதான வரலாற்றின் குருதியெடுத்து முகம் முழுக்கப் பூசி, சினமேறிச் சிரிக்கிறாய். தோபா தேக் சிங்கின் குரலில் உன்னிலிருந்து பாய்கின்றது குருதி. வெடிக்கிற வார்த்தைகள் சங்கீதமாக ஒலித்ததாக சரித்திரமில்லை. பிறகென்ன, அவனுடையதான வரலாறு ஆவேசம் கொண்டெழுகிறது. இவனுடையதான வரலாறு இடையில் ஏதோ கூச்சலிடுகிறது. தொலைதூரத்தில் கால நதிக்கரையில் காகிதக் கப்பல் விட்ட வண்ணம் மாயகோவ்ஸ்கி முணுமுணுத்தான். "கவிதையல்ல பிரச்சினை. கூடவே... Continue Reading →

குட் பை நேஷ்!

தொப்பியணிந்த உளவாளிகள் முழுமையாய்த் தொலையும் காலம் வரும். அந்நாள் வரைக்கும், நிழலோடு தொடரும் யுத்தம் நிகழும் வரைக்கும், உன்னை உலகம் நினைவில் கொள்ளும். மனதாரச் சொல்கிறேன், நீடித்த அமைதியில் நிரந்தர ஓய்வு கொள்! குட் பை நேஷ்.

ஒட்டகத்தின் நிழல்

சடுதியில் பரிமாணம் புதிராக மாறும் பாதையில் என்றோ ஒரு வெயில் நாளில் வின்சென்ட் தென்பட்டான். விரிந்து கிடக்கும் மணற்பரப்பு சதுரங்கக் கட்டங்களாக, ஏற்ற இறக்கம் புரியாத வண்ணம் மாய விளையாட்டாய் மாறிக் கொண்டேயிருந்தது. உடன் வந்த ஒட்டகத்தின் நிழலில் அவ்வப்பொழுது அவன் உறங்கிக் கொண்டான். அத்திபூத்தாற் போல தென்பட்ட சொற்களின் சுனைகளில் இருவரும் தாகம் தீர்க்க, நெடுந்தூரம் தொடர்ந்தது தீராப் பயணம். இடையில் ஒரு வானவில் இடைவேளையில் ஒட்டகத்தை அவன் காதலோடு முத்தமிட்டான். ஒட்டகத்தின் நிழல் அவனுடைய... Continue Reading →

இறந்ததா காலம்?

பிறகொரு நாள் நான் மரித்திருந்தேன். எனது மூச்சில் நீ புதிதாய் பிறப்பதாய் மெல்லப் பகிர்கிறாய். எது உண்மை? இறந்த காலம் இறக்காமல் போனால் இறப்பது எது? இறந்தது எது? இருப்பது எது?

மழைப் பாடல்கள் #1

"ஒரு துளிக்கே மரணமென்றால் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கோப்பை விஷம்?" எனும் வரிகளை நீ எடுத்து வைத்தாய் சாம்.

கரை தொடும் அலைகள் #3

'மாதொருபாகன்' நாவலை இதுவரை படிக்கவில்லை. இப்பொழுது வாங்கிய நூல்களில் முதல் நூலாக அதனைத் தான் படிக்கவிருக்கிறேன். இத்தகைய உந்துதலை ஏற்படுத்தும் சாதிய, கலாச்சாரப் பாதுகாவலர்களுக்கு நன்றி.

கண்ணீரின் சொற்கள்!

உன் கண்களைப் பார்க்காமலிருக்க முயல்கிறேன். உனது பால் முகத்தை நினைக்காமலிருக்க முயல்கிறேன். மீண்டும் மீண்டும் நீ மனக்கண்ணில் மெல்ல எழும்பிய வண்ணமிருக்கிறாய். உன் முகத்தில் நிலவும் மெளனம்... உன் விழிகளில் தங்கி நிற்கும் அமைதி... உன்னுள்ளே படிந்து நிற்கும் கேள்விகள்... இயலாமை உண்டாக்கும் சினத்திலும், வேதனையிலும் உள்ளூர ஏதோ பிசைந்து கொல்கிறது. செய்வதறியாது இறுகிய முகத்துடன் கண்களில் பனிக்கும் கண்ணீரைத் தேக்கி சொற்களாக்க முயல்கிறேன். நீதி என ஒன்று இருக்குமானால், நீதிக்கான யுத்தம் என்பது உண்மையானால், நீதி... Continue Reading →

பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்…

அஞ்சலிகள் வீர வணக்கங்கள் முழக்கங்கள் கவிதைகள் கண்ணீர்த் துளிகள் மெழுகுவர்த்திகள் இறுதியில் எல்லாம் ஒன்றுதான். கும்பகோணம் குழந்தைகள் முத்துக்குமார் செங்கொடி முருகதாசன் வினோதினி அதே வரிசையில் அதே நபர்களிடமிருந்து அஞ்சலிகள் வீர வணக்கங்கள் முழக்கங்கள் கவிதைகள் கண்ணீர்த் துளிகள் மெழுகுவர்த்திகள் சிலர் விடுபடலாம். புதிதாக சிலர் வந்து விடலாம். பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். பார்த்துக் கொண்டேதான் இருப்போம் போலும்.

மாயப் புதிர்

இதுவரை முடிவுறாத கருந்துளையின் நீண்ட பயணத்தில், தலை திருப்பிப் பார்க்கும் தருணம் பற்றி வந்த இழைகளின் வேர்கள் மங்கலாகக் காட்சியளிக்கின்றன. எங்கோ தொலைதூரத்தில் அடிவானத்தில் அவை கிடக்க வேண்டும். மருந்தின் கிளை பற்றி மெல்ல ஊர்ந்து செல்லும் பொழுதுகளில், மாயப் புதிரின் பிரக்ஞை மிச்சமிருக்கும் மொழியையும் கீறலின்றி கொன்று போடுகிறது. இருண்மையின்றி இனியேது சொற்கள்? ... கலைத்துப் போடு. கைதொடும் வண்ணம் கொண்டு வேண்டிய மட்டும் தீட்டு. ஆங்காங்கே காகிதத்தை கிழித்து விடு. மொத்தத்தில் மாயப் புதிராக்கு.... Continue Reading →

மிச்ச சொச்சம்…

பரஸ்பரம் விழுந்து விட்டன வார்த்தைகள். வார்த்தைகளின் வழியாகவும், வார்த்தைகளின் உள்ளாகவும், வார்த்தைகளை மீறியும், வெளிப்பட்டு விட்டன கருத்துக்களும், பார்வைகளும், பண்புகளும்... நீ நானாகிப் பார்க்க விரும்பவில்லை. நான் நீயாகிப் பார்க்க முயன்றேன். முடியவில்லை. என்னிலிருந்து கசிந்ததாய் நீ நம்பும் அமிலம் உன்னிலிருந்த கனிவை கொன்று விட்டது. உன்னிலிருந்து கசிந்ததாய் நான் நம்பும் அமிலம் மட்டும், எதனாலோ, என்னிலிருக்கும் உன்னோடு நான் சுற்றியலைந்த நாட்களின் நினைவுகளை, அந் நினைவுகள் உண்டாக்கும் கனிவை, கொல்ல இயலவில்லை. இனி என்ன? அந்நினைவுகள்... Continue Reading →

தப்பு?

தப்பி விடு... தப்பு, எப்படியேனும்... எப்பாடுபட்டேனும்... தப்பு... இல்லை இது தப்பு தப்புதல் தப்பு தப்பாதே தாங்கி நில் இல்லை தப்பி விடு... தப்பு, எப்படியேனும்... எப்பாடுபட்டேனும்... தப்பு...

பூனை

உனக்கு உன் பூனை தான் மிச்சமிருக்கும் அல்லது ஒரு தெருநாய்... உனக்கும், எனக்கும், ஒவ்வொருவருக்கும். who is in and who is out? குறிப்பு: அபர்ணா சென்னின் 36 செளரங்கி லேன் திரைப்படம் உருவாக்கிய உணர்வுகளினூடாக...

எதையேனும்…

ஏதேனும் எழுதேன் என்றாய். எதை எழுத என்றேன். எதையேனும் எனப் பதிலளித்தாய். எதையேனும் என்றால் எதனை என்று கேட்டேன். எதுவுமா இல்லை எழுத என்றாய். எதுவும் இல்லாமல் இல்லையென்றாலும் எதுவும் இல்லை என்றே தோன்றுவதால் எதையேனும் எழுதுவதற்குப் பதிலாய் நீ எழுதச் சொன்னதையே எழுதி விட்டேன்.

துளிகள் – 2

அதுவும் நான் இதுவும் நான் எதுவோ நான்? ... தான் போயிற் எல்லாம் போம் என்பதாம் சித்தர் வாக்கு. எல்லாம் போயினும் தான் போகாதிருத்தல் எதுவும் போகாததன் வெளிப்பாடா? இல்லை சித்தர் வாக்கு சொல்லில் மட்டுமா? ... சொற்களின் திருப்பங்கள் திகிலூட்டுகின்றன... வசமின்றிச் சுழலும் நாக்கு வலிமையோடு தாக்குகிறது, ஒரே வீச்சில் உன்னையும், என்னையும்... ஒன்று மற்றொன்றாய் மாறிக் கொண்டிருக்கிறதா?

Powered by WordPress.com.

Up ↑