சத்தீஸ்கரில் நிகழ்ந்த பழங்குடிகள் படுகொலை: வெறுமனே போர் விபத்தல்ல!

கடந்த ஜூன் 28, 2012 அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசுப் படைகள் நிகழ்த்திய படுகொலையை கண்டித்து, புது தில்லியைச் சேர்ந்த ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் நடுவம் (PUDR) வெளியிட்ட அறிக்கையின் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சர்கேல்குடா கிராமத்தில் பாதுகாப்புப் படைகள் நிகழ்த்திய, கோழைத்தனமான 19 கிராமவாசிகளின் பச்சைப் படுகொலையை ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் நடுவம் (PUDR) வன்மையாக கண்டிக்கிறது. கொல்லப்பட்டவர்களில் 12-15 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளும் அடங்குவர். மேலும், கத்தி, அரிவாள் மற்றும்... Continue Reading →

சத்தீஸ்கரில் ஒரு சத்திய சோதனை!

சத்தீஸ்கர் போலிசின் 'புத்திசாலித்தனமான' சில நடைமுறைகளை கேட்கும் பொழுது, நீங்கள் வியப்படையாமலிருக்க முடியாது. உதாரணமாக, சத்தீஸ்கர் போலிசார் மற்றும் சல்வா ஜூடும் எனும் அரசு ஆதரவு கூலிப்படையினர் பயன்படுத்தும் எந்தக் கார்களிலும் நம்பர் பிளேட் கிடையாது. இது ஏன் என விசாரித்தால், அவர்கள் கூறும் காரணம், "நம்பர் பிளேட்டை வைத்து மாவோயிஸ்டுகள் போலிஸ் வாகனங்களை அடையாளம் கண்டு கொள்வார்கள்." சரி, நம்பர் பிளேட் இல்லாமலிருப்பதே ஒரு அடையாளமாகி விடாதா என நீங்கள் கேட்கலாம். சிரிக்கவும் கூட செய்யலாம்.... Continue Reading →

இரங்கல் – II

கடந்த மாதம், வங்காளத்தில் ஒரு முதுபெரும் 'கம்யூனிஸ்ட்' தலைவர் மறைந்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இடதுசாரிகள், கூட்டணி அரசில் பங்கேற்ற பொழுது, பங்குச் சந்தைகள் சரிந்தன.  உலகமயமத்தின் 'ஒளிமயமான' பாதைக்கு ஊறு நேர்ந்து விடுமே என ஆங்கிலத் தொலைக்காட்சிகள் பதைபதைத்தன.. ஆனால், ''வங்கத்துச் சிங்கத்தின்' வாழ்வு முடிவுக்கு வந்த போதோ, அதே தொலைக்காட்சிகள் ஒப்பாரி வைப்பதில் போட்டி போட்டன.  'இடதுசாரிகள்' எனப் பொதுவாக அழைக்கப்படும் போலிக் கம்யூனிஸ்டுகள் 'தேசிய நீரோட்டத்தில்' கலந்து யுகங்கள் கழிந்த பின்னால், அவை... Continue Reading →

நீ எங்களோடு இல்லையென்றால் நீ தீவிரவாதியோடு இருக்கிறாய்!

“நக்சல்பாரிகள், மாவோயிஸ்டுகள்… இந்தியா ஒரு போலீசு அரசாக மாறப் போகிறது. நிலவுவதை யார் ஏற்க மறுக்கிறார்களோ, அவர்கள் தீவிரவாதிகளாக அழைக்கப்படுவார்கள். இசுலாமிய தீவிரவாதிகள் இசுலாமியராக இருந்தாக வேண்டும். எனவே, நம் அனைவரையும் குறிக்க அது போதாது. அவர்களுக்கு பெரிய வலை தேவைப்படுகிறது. எனவே, தெளிவின்றி வரையறுப்பதும், வரையறுக்காமலே விடுவதும் ஒரு சரியான உத்திதான். ஏனெனில், நாம் அனைவரும் மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என அழைக்கப்படவும், மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் என்றால் யாரென்று தெரியாத... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑