சாய்ரத்: குறிஞ்சி மலர்

சாதி ஆணவப் படுகொலைகள் குறித்து மைய நீரோட்ட சினிமாவில் பதிவு செய்வது, அதுவும் வணிக சினிமாவின் சட்டகத்திற்குள் நின்றவாறே (பிரமிப்பூட்டும் காட்சிகள், கோணங்கள், பாடல்கள்) இயன்ற மட்டும் ஒரு காத்திரமான திரைப்படத்தை உருவாக்குவது என்பது ஒரு சாதனை. அதனை நாகராஜ் சாதித்து காட்டியுள்ளார்.

ஒரு ‘கம்யூனிஸ்ட்’ கிராமத்தில் நிகழ்ந்த காதல் கதை!

கதவு தட்டப்படும் ஓசை தொலைதூரத்தில் கேட்டது. திடுக்கிட்டு விழித்து எழுந்தவன், கதவைத் திறந்தேன். ஹவுஸ் ஓனர் தனது வழக்கமான அரை டிரவுசர், டீசர்ட்டுடன் நின்று கொண்டிருந்தார். கடுப்பை மறைத்து கொண்டு, “என்ன சார்?” என்றேன். “ஒனக்கு ஃபோன்பா” “யாரு?” “அந்தப் பையன் பிரேம் இல்ல, அவந்தான்” அது மொபைல்கள் இல்லாத காலம். அதாவது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு. ஹவுஸ் ஓனரின் போர்ஷனிலிருந்த கிணுகிணுக்கும் தொலைபேசிதான் மற்றொரு போர்ஷனில் வாடகைக்கு தங்கியிருந்த எங்கள் நால்வரின் ஒரே தகவல் தொடர்பு… Continue reading ஒரு ‘கம்யூனிஸ்ட்’ கிராமத்தில் நிகழ்ந்த காதல் கதை!

பார்ப்பன வெறுப்புக் குற்றமும், மேல்சாதி சலிப்பும்!

(ஃபேஸ்புக்கில் பகிர்ந்தவற்றிலிருந்து…) "பார்ப்பன வெறுப்புக் குற்றம்" என்பது எவ்வாறு எல்லையற்று மிகைப்படுத்தப்பட்ட சொல்லாடல் என்பதையும், அதனைக் கட்டியமைக்கும் கருத்துருவாக்கத்தில் முனைந்துள்ள அறிந்தே நடிக்கும் அறிவாளிகளை, கருத்துத்தளத்தில் முறியடிப்பதும் காலத்தின் தேவை. அத்தகைய எதிர்வினைகளை ஆங்கிலத்தில் கொண்டு செல்வதன் அவசியத்தையும் வினையின் மொழி சேர்த்தே உண்டாக்கியுள்ளது. தமிழகத்தில் பார்ப்பன வெறுப்புக் குற்றம் நிச்சயமாக இல்லாத போதிலும், பார்ப்பன வெறுப்பு இல்லையா? ஆம். நிச்சயம் இருக்கிறது. அது ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான ஒடுக்கப்படுபவர்களின் நியாயமான வெறுப்பு. ஒடுக்குமுறையாளன் தன்னை மாற்றிக் கொள்ளும்… Continue reading பார்ப்பன வெறுப்புக் குற்றமும், மேல்சாதி சலிப்பும்!