இரங்கல் – II

கடந்த மாதம், வங்காளத்தில் ஒரு முதுபெரும் 'கம்யூனிஸ்ட்' தலைவர் மறைந்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இடதுசாரிகள், கூட்டணி அரசில் பங்கேற்ற பொழுது, பங்குச் சந்தைகள் சரிந்தன.  உலகமயமத்தின் 'ஒளிமயமான' பாதைக்கு ஊறு நேர்ந்து விடுமே என ஆங்கிலத் தொலைக்காட்சிகள் பதைபதைத்தன.. ஆனால், ''வங்கத்துச் சிங்கத்தின்' வாழ்வு முடிவுக்கு வந்த போதோ, அதே தொலைக்காட்சிகள் ஒப்பாரி வைப்பதில் போட்டி போட்டன.  'இடதுசாரிகள்' எனப் பொதுவாக அழைக்கப்படும் போலிக் கம்யூனிஸ்டுகள் 'தேசிய நீரோட்டத்தில்' கலந்து யுகங்கள் கழிந்த பின்னால், அவை … இரங்கல் – II-ஐ படிப்பதைத் தொடரவும்.

இரங்கல்!

உனக்கு எதிரிகளே இல்லை என்கிறாயா..? உண்மையில், அது பரிதாபத்திற்குரியது நண்பனே... உனது தற்பெருமை பொருளற்றது. கடமையுணர்வோடு வீரர்கள் களம் புகும் பெரும் போரில் குதித்தவன், நிச்சயம் எதிரிகளைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல், உனது பணி மிகச் சிறியதே. ஏனெனில், நிச்சயம் நீ எந்த துரோகியையும் எட்டி உதைத்திருக்கவில்லை... பொய்மையின் முகத்திரையை கிழித்திருக்கவில்லை.. ஒருபோதும் தவறுகளைத் திருத்தியிருக்கவில்லை... என்ன சொல்ல, ஒரு கோழையாய்த் தான் வாழ்ந்திருக்கிறாய். - சார்லஸ் மக்கே (1814-1889) கட்சி வேறுபாடின்றி, வர்க்க வேறுபாடின்றி, … இரங்கல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொம்மைகள்!

பூம் பூம் மாடுகள், தஞ்சாவூர் பொம்மைகள் நாம்... மனிதர்கள்! மேற்கூறியது, தமுஎச கலை இரவு கட்அவுட் ஒன்றில் எழுதப்பட்டிருந்த கவிதை. கடைசி வரியில் மட்டும் மாற்றம் செய்து, கவிதையை மறுவாசிப்பு செய்து, வாய்விட்டுப் படிக்கிறார்கள் மக்கள். பூம் பூம் மாடுகள், தஞ்சாவூர் பொம்மைகள் நாம்... சி.பி.எம் அணிகள்! ... தொடர்வது சுயவிளம்பர இடைவேளை! கலை இரவு என்னும் புதிய வடிவம் தமுஎச தமிழ்கூறு நல்லுலகுக்கு அளித்த கொடை என்று தயக்கமின்றிக் கூறலாம். இவ்விளம்பரத்தை உங்களுக்கு வழங்கியது, தரமான … பொம்மைகள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.