சாய்ரத்: குறிஞ்சி மலர்

சாதி ஆணவப் படுகொலைகள் குறித்து மைய நீரோட்ட சினிமாவில் பதிவு செய்வது, அதுவும் வணிக சினிமாவின் சட்டகத்திற்குள் நின்றவாறே (பிரமிப்பூட்டும் காட்சிகள், கோணங்கள், பாடல்கள்) இயன்ற மட்டும் ஒரு காத்திரமான திரைப்படத்தை உருவாக்குவது என்பது ஒரு சாதனை. அதனை நாகராஜ் சாதித்து காட்டியுள்ளார்.

ஆரக்க்ஷன்: யாருக்கு எதிரானது?

கடந்த வெள்ளியன்று வெளியான 'ஆரக்க்ஷன்' (இடஒதுக்கீடு) திரைப்படம், வெளியாகும் முன்பே பஞ்சாப், ஆந்திரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும் சிற்சில அமைப்பினர் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னையில் ஆரக்க்ஷன் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு எதிரே கடந்த இரு தினங்களில் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியுள்ளனர். பா.ம.க-வும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இத்திரைப்படம் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகவும் எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள் கூறி வருகின்றன. தடை … ஆரக்க்ஷன்: யாருக்கு எதிரானது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

திரைவிமரிசனம்: பீப்லிலைவ் – சிரிப்புவரவில்லை!

"திரைப்படம் எனும் கலை வடிவம் முகர்தலை உள்ளடக்கியதாக இருக்குமானால் அதாவது மணம் வீசக் கூடிய ஒரு பொருளாக சினிமா இருக்குமானால் 'ஸ்லம்டாக் மில்லியனர்' போன்ற திரைப்படங்கள் ஆஸ்கார்களை வெல்ல முடியாது. ஏனெனில், அத்தகைய வறுமையின் முடைநாற்றம் சூடான பாப்கார்னின் நறுமணத்தோடு இணைய முடியாது." — அருந்ததி ராய் 1997லிருந்து ஏறத்தாழ இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நமது நாட்டில் தற்கொலை செய்து கொண்டு மடிந்துள்ளனர். சில புள்ளி விவரங்களின்படி, 2002லிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு … திரைவிமரிசனம்: பீப்லிலைவ் – சிரிப்புவரவில்லை!-ஐ படிப்பதைத் தொடரவும்.

மை நேம் இஸ் கான்: உலகமய மசாலா!

இது "Feel Good Movie"-க்களின் யுகம்.  தமிழில் சொன்னால், 'மனதுக்கு இனிமை தரும் படங்களின்' காலம். உலகம் கிராமமாகச் சுருங்கும் உலகமய, தகவல் தொழில்நுட்ப யுகத்தின் பொற்காலத்தில் வாழும் உலகமயக் குடிமக்கள் Feel Good Movie-க்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறார்கள். பரவசமடைகிறார்கள். கண்ணீர் விடுகிறார்கள். யதார்த்த உண்மை மனதுக்கும், சிந்தனைக்கும் இனிமையாக இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்கு அங்கு இடமில்லை. உண்மை போல தோற்றமளித்தால் போதும். மனதுக்கு இனிமையளிப்பதுதான் முக்கியம். பிறகு, ஸ்லம்டாக் மில்லியனரைக் கொண்டாடியதைப் போல, … மை நேம் இஸ் கான்: உலகமய மசாலா!-ஐ படிப்பதைத் தொடரவும்.

உன்மத்த நிலையின் 360 டிகிரி!

"ஸீரோ டிகிரியை எழுதிய போது இருந்த அதே உன்மத்த நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். நேற்று காலையிலிருந்து மாலை வரை எழுதினேன். அதையெல்லாம் என் சுயநினைவிலிருந்து எழுதினேன் என்று சொல்ல முடியாது. ஏதோ ஒரு பேய் அல்லது மோகினி என் உடலில் புகுந்து கொண்டு எழுதுவது போல் தோன்றுகிறது. சாமியாடி சாமி ஆடுவானே அது போல என்று வைத்துக் கொள்ளலாம்." உத்தமத் தமிழ் எழுத்தாளரின் ஜென்ம விரோதியும், ஸாரா பப்பில் மட்டுமே குடித்து வாழ வேண்டிய அவல நிலையில் … உன்மத்த நிலையின் 360 டிகிரி!-ஐ படிப்பதைத் தொடரவும்.

ரகுமானுக்கு ஆஸ்கர்: எல்லாப் புகழும் அமெரிக்காவுக்கே!

கடந்த பிப்ரவரி 22ஆம் தேதியன்று சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை ஸ்லம்டாக் மில்லியனர் (கோடீ சுவரனான சேரி நாய்) திரைப்படத்திற் காக ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். அமெரிக்கா வின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கோடாக் அரங்கத்தின் மேடையில் விருதைக் கையில் ஏந்தியபடி, "எல்லாப் புகழும் இறைவனுக்கே!" எனத் தமிழில் உற்சாகமாக மொழிந்தார். அடுத்த கணம் இந்தியா முழுவதும் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கிலச் செய்தி ஊடகங்கள், ஒரே குரலில் "ஜெய் ஹோ!" (வெற்றி உண்டாகட்டும்!) என ஆரவாரிக்க … ரகுமானுக்கு ஆஸ்கர்: எல்லாப் புகழும் அமெரிக்காவுக்கே!-ஐ படிப்பதைத் தொடரவும்.

திரைப்பட விமரிசனம் : தோகீ என் பாடல் துயரமிக்கது!

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கையாளர் சாய்நாத் இந்திய விவசாய வர்க்கம் நொறுங்கிச் சிதறுவதை உயிருள்ள சாட்சிகளாக தமது ஆங்கிலக் கட்டுரைகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். பன்னாட்டு உரக் கம்பெனிகள், விதைக் கம்பெனிகளின் படையெடுப்பின் விளைவாகவும், அவர்களது காலை நக்கி விவசாயிகளின் கழுத்தறுக்க துணை நின்ற அதிகார வர்க்கம், அரசியல்வாதிகளின் துரோகத்தின் விளைவாகவும், மென்னி முறிக்கும் கந்துவட்டிக் கொடுமையின் விளைவாகவும் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட அவ்விவசாயிகளின் வாழ்க்கையை ஆதாரபூர்வமாக அக்கட்டுரைகளில் நாம் காண முடியும். கடன் வாங்கிய பணத்தில் மகளின் … திரைப்பட விமரிசனம் : தோகீ என் பாடல் துயரமிக்கது!-ஐ படிப்பதைத் தொடரவும்.