கரை தொடும் அலைகள் #2

கடந்த ஞாயிறு காலையில் மகஇக பொருளாளர் தோழர் சீனிவாசனின் இறுதி நிகழ்விற்கு சென்றிருந்தேன். அவ்வமைப்பிலிருந்து விலகி விட்ட போதிலும், அவர் மீதான அன்பின், மரியாதையின் காரணமாக அவரது கடைசிப் பயணத்தில் உடனிருப்பது அவசியமெனப்பட்டது. அதிகாலையில் சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலை சென்றடைந்ததும், அவரது உடலை வணங்கச் சென்றேன். மெலிந்து கூடாகக் கிடந்தார். பலரது நினைவில் இன்னமும் நிழலாடும் உற்சாகமான சிரிப்பும், சற்றே பூசிய உடலும் கொண்ட சீனிவாசன் அவரல்ல எனத் தோன்றியது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சீனிவாசனை நான்... Continue Reading →

மிதப்பன…!

ஸ்தம்பித்து கிடக்கிற இயந்திரத்தின் அடியாழத்தில் மிதந்து கொண்டிருக்கிற சொற்களில், உன் குரல் இசைக்கும் பறவை நீந்திக் கொண்டிருக்கிறது.

உருவமில்லாத சொற்கள்!

வெளி நிறைக்கும் மழையின் இசையில், மெல்ல விரியும் மனதின் இதழ்களில் பட்டுத் தெறிக்கின்றன நினைவின் துளிகள். மின்னுகின்ற நியான் விளக்குகளின் பிரதிபலிப்பில் எழும்பும் நீர்க்கோலங்களாய் தோன்றி மறைகின்றன சொற்கள். நிழலாடும் சர்ப்பம் எழுப்பும் இனம் புரியாத உணர்வில் நினைவுகள் குமிழிகளாய் எழும்பி மறைகின்றன. குமிழிகளில் மோதி மிதந்து, கரைந்து வழிகின்றன பரஸ்பரம் வெளிப்படுத்தாத உருவமில்லாத சொற்கள்.

Powered by WordPress.com.

Up ↑