மார்ச் 23!

ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் அறிவிக்கிறோம். எமது இயற்கை வளங்களையும், உழலும் உழைக்கும் மக்களையும் நீங்கள் சுரண்டும் வரையில் இந்தப் போர் நடந்தே தீரும். சுரண்டுவோர் பிரிட்டிஷ் முதலாளிகளாகவோ, இந்திய-பிரிட்டிஷ் கூட்டாளிகளாகவோ, முழுக்க இந்தியர்களாகவோ இருக்கலாம். அவர்கள் அன்னியக் கலப்புடனோ அல்லது முழுக்க இந்தியர்களாலான அதிகார வர்க்க உறுப்புகளைக் கொண்டோ, தமது வஞ்சக சுரண்டலை நடத்தலாம். இவையனைத்தும் எந்த வேறுபாட்டையும் கொண்டு வந்து விடாது. இந்தப் போர் தொடரும். இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் … மார்ச் 23!-ஐ படிப்பதைத் தொடரவும்.

விடுதலைப் போரின் கலங்கரை விளக்கம் பகத்சிங்!

18,19ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு, நிசாம், மருது, தொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் இந்த எல்லைக்கோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது. எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாக அவற்றை நிறுவனமயமாக்குவதன் மூலமாகவே நமத்துப்போகச் செய்துவிடமுடியும் என்ற உத்தியை 1857 எழுச்சிக்குப் பின் அமலாக்கினார்கள் வெள்ளையர்கள். அதாவது துரோகிகளையே தியாகிகளாக சித்தரித்துக் காட்டுவதன் மூலம் அடிமைத்தனத்துக்குள்ளேயே "விடுதலையைக்' காணும்படி மக்களைப் … விடுதலைப் போரின் கலங்கரை விளக்கம் பகத்சிங்!-ஐ படிப்பதைத் தொடரவும்.