சாய்ரத்: குறிஞ்சி மலர்

சாதி ஆணவப் படுகொலைகள் குறித்து மைய நீரோட்ட சினிமாவில் பதிவு செய்வது, அதுவும் வணிக சினிமாவின் சட்டகத்திற்குள் நின்றவாறே (பிரமிப்பூட்டும் காட்சிகள், கோணங்கள், பாடல்கள்) இயன்ற மட்டும் ஒரு காத்திரமான திரைப்படத்தை உருவாக்குவது என்பது ஒரு சாதனை. அதனை நாகராஜ் சாதித்து காட்டியுள்ளார்.

ஒரு ‘கம்யூனிஸ்ட்’ கிராமத்தில் நிகழ்ந்த காதல் கதை!

கதவு தட்டப்படும் ஓசை தொலைதூரத்தில் கேட்டது. திடுக்கிட்டு விழித்து எழுந்தவன், கதவைத் திறந்தேன். ஹவுஸ் ஓனர் தனது வழக்கமான அரை டிரவுசர், டீசர்ட்டுடன் நின்று கொண்டிருந்தார். கடுப்பை மறைத்து கொண்டு, “என்ன சார்?” என்றேன். “ஒனக்கு ஃபோன்பா” “யாரு?” “அந்தப் பையன் பிரேம் இல்ல, அவந்தான்” அது மொபைல்கள் இல்லாத காலம். அதாவது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு. ஹவுஸ் ஓனரின் போர்ஷனிலிருந்த கிணுகிணுக்கும் தொலைபேசிதான் மற்றொரு போர்ஷனில் வாடகைக்கு தங்கியிருந்த எங்கள் நால்வரின் ஒரே தகவல் தொடர்பு... Continue Reading →

பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்…

அஞ்சலிகள் வீர வணக்கங்கள் முழக்கங்கள் கவிதைகள் கண்ணீர்த் துளிகள் மெழுகுவர்த்திகள் இறுதியில் எல்லாம் ஒன்றுதான். கும்பகோணம் குழந்தைகள் முத்துக்குமார் செங்கொடி முருகதாசன் வினோதினி அதே வரிசையில் அதே நபர்களிடமிருந்து அஞ்சலிகள் வீர வணக்கங்கள் முழக்கங்கள் கவிதைகள் கண்ணீர்த் துளிகள் மெழுகுவர்த்திகள் சிலர் விடுபடலாம். புதிதாக சிலர் வந்து விடலாம். பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். பார்த்துக் கொண்டேதான் இருப்போம் போலும்.

நாளி: வரலாற்றின் தெளிந்த நீரோடை!

பாலு மகேந்திராவின் திரைப்படங்களில் தவறாமல் இடம் பெறும் முக்கியமான கதாபாத்திரம் ஊட்டி. அவரது ஓளிப்பதிவின் வண்ணங்களில் ஊட்டியின் எழில்மிகு அழகு, அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. எண்பதுகள் வரை நமது தமிழ் சினிமாக் கதாநாயகர்களும், கதாநாயகிகளும் பாடல் காட்சிகளில் ஓடியாடி கட்டிப்பிடித்ததும், உருண்டு புரண்டதும் ஊட்டியின் புல்வெளிகளில் தான். ஊட்டி என்றதும் நினைவுக்கு வருவது அங்கு நிலவும் இதமான குளுமையும், புல்வெளிகளும், மேகங்கள் கவிந்த மலை முகடுகளும் தான். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு ஊட்டி என்று... Continue Reading →

கரை தொடும் அலைகள் #2

கடந்த ஞாயிறு காலையில் மகஇக பொருளாளர் தோழர் சீனிவாசனின் இறுதி நிகழ்விற்கு சென்றிருந்தேன். அவ்வமைப்பிலிருந்து விலகி விட்ட போதிலும், அவர் மீதான அன்பின், மரியாதையின் காரணமாக அவரது கடைசிப் பயணத்தில் உடனிருப்பது அவசியமெனப்பட்டது. அதிகாலையில் சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலை சென்றடைந்ததும், அவரது உடலை வணங்கச் சென்றேன். மெலிந்து கூடாகக் கிடந்தார். பலரது நினைவில் இன்னமும் நிழலாடும் உற்சாகமான சிரிப்பும், சற்றே பூசிய உடலும் கொண்ட சீனிவாசன் அவரல்ல எனத் தோன்றியது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சீனிவாசனை நான்... Continue Reading →

ஆரக்க்ஷன்: யாருக்கு எதிரானது?

கடந்த வெள்ளியன்று வெளியான 'ஆரக்க்ஷன்' (இடஒதுக்கீடு) திரைப்படம், வெளியாகும் முன்பே பஞ்சாப், ஆந்திரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும் சிற்சில அமைப்பினர் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னையில் ஆரக்க்ஷன் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு எதிரே கடந்த இரு தினங்களில் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியுள்ளனர். பா.ம.க-வும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இத்திரைப்படம் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகவும் எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள் கூறி வருகின்றன. தடை... Continue Reading →

தோபி காட்: நுட்பமான திரைமொழி!

சில திரைப்படங்கள் திரையரங்கை விட்டு வெளியேறியவுடன் மனதை விட்டும் வெளியேறி விடுகின்றன. சில திரைப்படங்கள் கரை அலம்பும் அலைகளாய் மீண்டும் மீண்டும் நினைவில் எழும்பிக் கொண்டிருக்கும். சமீபத்தில் வெளியான இந்தித் திரைப்படம், 'தோபி காட்'(வண்ணான் படுகை) அத்தகைய திரைப்படங்களில் ஒன்று. இந்தித் திரைப்படவுலகை தொடர்ந்து கவனிப்பவர்கள், சமீப காலங்களில் இரு விதமான போக்குகள் அருகருகே தொடர்ந்து வளர்ந்து கொண்டிருப்பதை காணலாம். ஒரு புறம், கோடிக்கணக்கான பணத்தை வீணடித்து, அபத்தங்களின் புதிய புதிய உச்சங்களை தொடும் வண்ணம் எடுக்கப்படும்... Continue Reading →

மே-17: ஓயாது நினைவுகள்!

இனி ஒவ்வொரு ஆண்டும் பல கவிஞர்கள் தவறாமல் கவிதைகள் எழுதும் நாளாயிருக்கும். அவற்றில், எது உண்மையான உணர்ச்சியிலிருந்து எழும்பியது, எது வார்த்தைகளை மடித்துப் போட்டது என்பது, சித்தி பெற்ற நிறைபோதையில் விக்கிரமாதித்யன் கூட கண்டறிய இயலாத புதிராயிருக்கும். பதிவர்கள் காத்திருந்து பதிவிடும் நாளாயிருக்கும். கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்களைப் பற்றி... ஏன் தாக்குகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளாத குற்றத்தைச் செய்த குழந்தைகளைப் பற்றி... ஷெல் விழும் வேளைகளில் கர்ப்பமுறாத வயிறுகளே வெடிக்கையில், எனது சிசுவைக் காப்பாற்று என, வெடிகுண்டு... Continue Reading →

சாவித் துவாரம்!

எல்லாத் திசைகளிலிருந்தும் கற்கள் பறக்கின்றன... சாவித் துவாரத்தின் பரவசத்தோடு திரும்பும் திசையெங்கும் கூச்சல்கள்... பெயரை உறுதி செய்து பெருமூச்செறிகிறது சமூக அக்கறை. நம்பியவர்கள் விசனப்படலாம். ஆனால், நாடே கொதிக்கிறது..! வேடிக்கையாக இருக்கிறது, வெறுப்பாகவுமிருக்கிறது!

இரங்கல் – II

கடந்த மாதம், வங்காளத்தில் ஒரு முதுபெரும் 'கம்யூனிஸ்ட்' தலைவர் மறைந்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இடதுசாரிகள், கூட்டணி அரசில் பங்கேற்ற பொழுது, பங்குச் சந்தைகள் சரிந்தன.  உலகமயமத்தின் 'ஒளிமயமான' பாதைக்கு ஊறு நேர்ந்து விடுமே என ஆங்கிலத் தொலைக்காட்சிகள் பதைபதைத்தன.. ஆனால், ''வங்கத்துச் சிங்கத்தின்' வாழ்வு முடிவுக்கு வந்த போதோ, அதே தொலைக்காட்சிகள் ஒப்பாரி வைப்பதில் போட்டி போட்டன.  'இடதுசாரிகள்' எனப் பொதுவாக அழைக்கப்படும் போலிக் கம்யூனிஸ்டுகள் 'தேசிய நீரோட்டத்தில்' கலந்து யுகங்கள் கழிந்த பின்னால், அவை... Continue Reading →

இரங்கல்!

உனக்கு எதிரிகளே இல்லை என்கிறாயா..? உண்மையில், அது பரிதாபத்திற்குரியது நண்பனே... உனது தற்பெருமை பொருளற்றது. கடமையுணர்வோடு வீரர்கள் களம் புகும் பெரும் போரில் குதித்தவன், நிச்சயம் எதிரிகளைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல், உனது பணி மிகச் சிறியதே. ஏனெனில், நிச்சயம் நீ எந்த துரோகியையும் எட்டி உதைத்திருக்கவில்லை... பொய்மையின் முகத்திரையை கிழித்திருக்கவில்லை.. ஒருபோதும் தவறுகளைத் திருத்தியிருக்கவில்லை... என்ன சொல்ல, ஒரு கோழையாய்த் தான் வாழ்ந்திருக்கிறாய். - சார்லஸ் மக்கே (1814-1889) கட்சி வேறுபாடின்றி, வர்க்க வேறுபாடின்றி,... Continue Reading →

தார்மீகத் திசைகாட்டி!

குறிப்பு: மனித உரிமைப் போராளி முனைவர் கே.பாலகோபாலின் நினைவாக இப்பதிவு எழுதப்பட்டுள்ளது. திரு.கோ.சுகுமாரன் எழுதிய இரங்கலிலிருந்து சில மேற்கோள்களும், எழுத்தாளர் வ.கீதா எழுதிய இரங்கலின் மொழியாக்கமும் தரப்பட்டுள்ளது. கீழ்க்காணும் கட்டுரைகளின் சில கருத்துக்களிலும், பாலகோபால் அவர்களின் சில கருத்துக்களிலும், எனக்கு கருத்து மாறுபாடு உண்டென்றாலும், மனித உரிமைச் செயல்பாடுகளில் முன்னுதாரணமாக விளங்கிய பாலகோபால் அவர்களைக் குறித்து தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடனேயே இப்பதிவு வெளியிடப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மனித உரிமைப்... Continue Reading →

இட ஒதுக்கீடு எதிர்ப்பு: ஆகாவென்றெழுந்தன பார், தவளைகள்!

"நான் டெல்லியின் பிரபலமானதொரு பள்ளியில் படித்தேன். 12ஆம் வகுப்பு முடியும் வரை எனக்கு, நாம் நம்முடைய சாதியினால் அடையாளம் காணப்படுகிறோம் எனத் தெரியாது. மருத்துவக் கல்லூரியில்தான் சாதி எனும் நச்சுப் பாதையில் நான் நுழைக்கப்பட்டேன். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அதன்பிறகு திறமை அனைத்தையும் தீர்மானிக்கும். நலிந்த பிரிவினருக்குத் தேவைப்படுவது நல்ல பள்ளிகள்தானேயன்றி, இடஒதுக்கீடு போன்ற சலுகைகளல்ல. சமீபத்திய பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் மூலம் மாணவர் சமூகத்தைப் பிரிக்க முயன்ற அரசின் முயற்சிகள் எங்களிடம் ஒரு... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑