கண்ணீரின் சொற்கள்!

உன் கண்களைப் பார்க்காமலிருக்க முயல்கிறேன். உனது பால் முகத்தை நினைக்காமலிருக்க முயல்கிறேன். மீண்டும் மீண்டும் நீ மனக்கண்ணில் மெல்ல எழும்பிய வண்ணமிருக்கிறாய். உன் முகத்தில் நிலவும் மெளனம்... உன் விழிகளில் தங்கி நிற்கும் அமைதி... உன்னுள்ளே படிந்து நிற்கும் கேள்விகள்... இயலாமை உண்டாக்கும் சினத்திலும், வேதனையிலும் உள்ளூர ஏதோ பிசைந்து கொல்கிறது. செய்வதறியாது இறுகிய முகத்துடன் கண்களில் பனிக்கும் கண்ணீரைத் தேக்கி சொற்களாக்க முயல்கிறேன். நீதி என ஒன்று இருக்குமானால், நீதிக்கான யுத்தம் என்பது உண்மையானால், நீதி … கண்ணீரின் சொற்கள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

நக்சலைட் பூச்சாண்டி!

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையின் புறநகர்ப் பகுதியான குன்றத்தூரில், மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சியின் 13 உறுப்பினர்கள் தமிழகக் கியூ பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டதை நீங்கள் அறிந்திருக்கலாம். குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தாளாளர் அனுமதியுடன் கூடிய அவ்வமைப்பின் தோழர்களை போலிசு கைது செய்ததும், அதற்காக முன்வைக்கும் காரணங்களும் அபத்தமானவை என்பதை ஒரு மேலோட்டமான அரசியல், சட்ட அறிவுடையவர் கூட கூற முடியும். எனவே, ஊடகங்களில் நக்சலைட் பீதியூட்டுவதன் மூலம் தனது செயலை … நக்சலைட் பூச்சாண்டி!-ஐ படிப்பதைத் தொடரவும்.

சத்தீஸ்கரில் நிகழ்ந்த பழங்குடிகள் படுகொலை: வெறுமனே போர் விபத்தல்ல!

கடந்த ஜூன் 28, 2012 அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசுப் படைகள் நிகழ்த்திய படுகொலையை கண்டித்து, புது தில்லியைச் சேர்ந்த ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் நடுவம் (PUDR) வெளியிட்ட அறிக்கையின் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சர்கேல்குடா கிராமத்தில் பாதுகாப்புப் படைகள் நிகழ்த்திய, கோழைத்தனமான 19 கிராமவாசிகளின் பச்சைப் படுகொலையை ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் நடுவம் (PUDR) வன்மையாக கண்டிக்கிறது. கொல்லப்பட்டவர்களில் 12-15 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளும் அடங்குவர். மேலும், கத்தி, அரிவாள் மற்றும் … சத்தீஸ்கரில் நிகழ்ந்த பழங்குடிகள் படுகொலை: வெறுமனே போர் விபத்தல்ல!-ஐ படிப்பதைத் தொடரவும்.

கரை தொடும் அலைகள் #2

கடந்த ஞாயிறு காலையில் மகஇக பொருளாளர் தோழர் சீனிவாசனின் இறுதி நிகழ்விற்கு சென்றிருந்தேன். அவ்வமைப்பிலிருந்து விலகி விட்ட போதிலும், அவர் மீதான அன்பின், மரியாதையின் காரணமாக அவரது கடைசிப் பயணத்தில் உடனிருப்பது அவசியமெனப்பட்டது. அதிகாலையில் சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலை சென்றடைந்ததும், அவரது உடலை வணங்கச் சென்றேன். மெலிந்து கூடாகக் கிடந்தார். பலரது நினைவில் இன்னமும் நிழலாடும் உற்சாகமான சிரிப்பும், சற்றே பூசிய உடலும் கொண்ட சீனிவாசன் அவரல்ல எனத் தோன்றியது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சீனிவாசனை நான் … கரை தொடும் அலைகள் #2-ஐ படிப்பதைத் தொடரவும்.

நெருப்பு – II

என்ன சொல்வது? என்ன வெளிப்படுத்துவது? என்ன செய்வது? உன்னை கண்டிப்பதா? அதற்கான தகுதி எனக்கு உண்டா? உனக்காகக் கதறி அழுவதா? தன்னை நொந்து கொள்வதா? நம்மை நொந்து கொள்வதா? ஆவேசம் கொள்வதா? அடங்கி விடுவதா? என்ன செய்வது? சொற்கள்... சொற்கள் மட்டுமே போதுமா? மூலக்கொத்தளத்தில் உறங்குபவன் அன்று எரிய விட்ட தீயின் ரணமே இன்றளவும் அவ்வப்பொழுது நினைவில் எழும்பி இதயம் கிழித்துக் கடக்கும் பொழுதில்... நீ... நீ ஏன் இப்படிச் செய்தாய்...? மொத்தமாய் மரத்து விட்ட சமூகம் … நெருப்பு – II-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரிசா: கொந்தளிக்கும் மறுகாலனியாக்கப் போர்க்களம்!

கடந்த சில மாதங்களாக, ம.க.இ.க முதலான புரட்சிகர அமைப்புகளும், நாடு முழுவதுமுள்ள அறிவுஜீவிகளும், மறுகாலனியாக்கத்தின் கீழ், வரை முறையற்ற நிலப்பறிப்பு நாடு முழுவதும் நடந்து வருவதை தீவிரமாக அம்பலப்படுத்தி இயக்கங்களை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக, மத்திய, மாநில அரசுகள் இணைந்து கொண்டு, இந்தியாவின் மத்தியப் பகுதியில் வாழும், நமது நாட்டின் பூர்வகுடிகளான பழங்குடி மக்களை, கூண்டோடு நிலங்களிலிருந்து அடித்து விரட்டியும், திமிறுபவர்களை இரக்கமின்றி கொலை செய்தும், பெண்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியும் வருகின்றன. மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தி … ஒரிசா: கொந்தளிக்கும் மறுகாலனியாக்கப் போர்க்களம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடவுளே, கருணை காட்டு!

நேற்று தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலினால் விளைந்த மரணங்கள் குறித்த செய்தியை எல்லோரும் படித்து கொண்டிருக்கிறோம். பார்த்து கொண்டிருக்கிறோம். க​டைசி நிமி​டத்தில்,​​ 2 ரயில்​கள் புறப்​ப​டும் பிளாட்​பார்ம்​கள் மாற்​றப்​பட்​ட​தால்,​​ ரயி​லைப் பிடிப்​ப​தற்​காக பய​ணி​கள் முண்​டி​ய​டித்​துக் கொண்டு ஓடியதில் இந்த துய​ரச் சம்​ப​வம் நிகழ்ந்​துள்​ளது. பொறுப்பற்ற அதிகாரிகளின் கடைசி நிமிட நிர்வாகக் கோளாறின் விலை, இரு அப்பாவி உயிர்கள்! ப​லி​யான பெண் பகல்​பூ​ரைச் சேர்ந்த சோனி ​(35) என்று கண்​ட​றி​யப்​பட்​டுள்​ளது.​ இறந்​து​போன சிறு​வ​னுக்கு சுமார் 10 … கடவுளே, கருணை காட்டு!-ஐ படிப்பதைத் தொடரவும்.

இரங்கல் – II

கடந்த மாதம், வங்காளத்தில் ஒரு முதுபெரும் 'கம்யூனிஸ்ட்' தலைவர் மறைந்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இடதுசாரிகள், கூட்டணி அரசில் பங்கேற்ற பொழுது, பங்குச் சந்தைகள் சரிந்தன.  உலகமயமத்தின் 'ஒளிமயமான' பாதைக்கு ஊறு நேர்ந்து விடுமே என ஆங்கிலத் தொலைக்காட்சிகள் பதைபதைத்தன.. ஆனால், ''வங்கத்துச் சிங்கத்தின்' வாழ்வு முடிவுக்கு வந்த போதோ, அதே தொலைக்காட்சிகள் ஒப்பாரி வைப்பதில் போட்டி போட்டன.  'இடதுசாரிகள்' எனப் பொதுவாக அழைக்கப்படும் போலிக் கம்யூனிஸ்டுகள் 'தேசிய நீரோட்டத்தில்' கலந்து யுகங்கள் கழிந்த பின்னால், அவை … இரங்கல் – II-ஐ படிப்பதைத் தொடரவும்.

பத்து வருடங்களாகப் போராடும் ஐரோம் சர்மிளா!

வரும் நவம்பர் 2, 2009 அன்று, மணிப்பூரைச் சேர்ந்த கவிஞரும், செயல் வீரருமான ஐரோம் சர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டத்தின் பத்தாவது ஆண்டு துவங்குகிறது. இந்திய அரசின் ஆயுத படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் (AFSPA) திரும்பப் பெறக் கோரி, அவர் கடந்த பத்தாண்டுகளாக போராடி வருகிறார். 1958-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சட்டத்தின்படி, வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும், எவரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், அவர்களது வீடுகளில் புகவும், சந்தேகத்தின் பேரிலேயே கூட சுட்டுக் கொலை செய்யவும் இந்திய இராணுவத்திற்கு … பத்து வருடங்களாகப் போராடும் ஐரோம் சர்மிளா!-ஐ படிப்பதைத் தொடரவும்.