மை நேம் இஸ் கான்: உலகமய மசாலா!

இது “Feel Good Movie”-க்களின் யுகம்.  தமிழில் சொன்னால், ‘மனதுக்கு இனிமை தரும் படங்களின்’ காலம். உலகம் கிராமமாகச் சுருங்கும் உலகமய, தகவல் தொழில்நுட்ப யுகத்தின் பொற்காலத்தில் வாழும் உலகமயக் குடிமக்கள் Feel Good Movie-க்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறார்கள். பரவசமடைகிறார்கள். கண்ணீர் விடுகிறார்கள். யதார்த்த உண்மை மனதுக்கும், சிந்தனைக்கும் இனிமையாக இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்கு அங்கு இடமில்லை. உண்மை போல தோற்றமளித்தால் போதும். மனதுக்கு இனிமையளிப்பதுதான் முக்கியம். பிறகு, ஸ்லம்டாக் மில்லியனரைக் கொண்டாடியதைப் போல, அதனைத்  தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். மை நேம் இஸ் கான் இதே பட்டியலில் தான் வருகிறது.

சிறு வயது முதல் “Asperger syndrome” எனும் நோயினால் பாதிக்கப்பட்ட ரிஸ்வான் கான்(ஷாருக் கான்), தனது தாயின் மரணத்தையொட்டி, அமெரிக்காவில் வாழும் தம்பியுடன் வாழச் செல்கிறான். அங்கே, மந்திரா(காஜோல்) எனும் விவாகரத்தான பெண்ணை சந்தித்து திருமணம் செய்து கொள்கிறான். அவளது மகன் ஸமீரும்(யுவன்), ரிஸ்வானை நேசிக்கிறான். செப்-11-க்கு பிறகு அமெரிக்கா முழுதும் வெளிப்படும் இஸ்லாமியர் வெறுப்பின் விளைவாக, பள்ளிச் சிறுவர்களிடையேயான் தகராறில் ஸமீர் கொல்லப்படுகிறான்.

அதிர்ச்சியுற்று மனம் உடையும் மந்திரா, “கான் என்ற உனது பெயர்தான் என் மகனை கொன்றது!” எனக் கத்துகிறாள். “இங்கிருந்து போய் விடு” என விரட்டுகிறாள். “நான் எப்பொழுது திரும்பி வரட்டும்” எனக் கேட்கிறான் ரிஸ்வான். “அமெரிக்க அதிபரை சந்தித்து ‘என் பெயர் கான். நான் தீவிரவாதி இல்லை’ என்று சொல்! அதன் பிறகு வா” என அவள் கூறும் வார்த்தைகளைக் கொண்டு, அமெரிக்க அதிபரை சந்திக்கப் புறப்படுகிறான் ரிஸ்வான்.  கையில் காசின்றி, கார்களை ரிப்பேர் செய்து பயணத்தை தொடர்கிறான். தீவிரவாதி என சிறை வைக்கப்பட்டு, பின்னர் விடுதலையாகி… என நீண்ட அலைக்கழிப்புகளைத் தாண்டி, புதிய அமெரிக்க அதிபரை சந்திப்பதில் வெற்றி பெற்றுகிறான்.

இந்தக் கதையைப் படிக்கும் பொழுதே, போஸ்டரில் உள்ள அமெரிக்க கொடி தற்செயலாக இடம் பெறவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். மிகத் தெளிவாக படத்தின் உள்ளடக்கத்தை உணர்த்தும் குறியீடாக அமெரிக்க கொடி ஷாருக்கின் மீது படிந்திருக்கிறது. இதனை லக்கிலுக் நேரடியாகக் குறிப்பிட்டிருந்தார். “ஒவ்வொரு அமெரிக்கனும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் இது.” படத்தின் உன்னதத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், இந்த அடிப்படையான கேள்வியை பரிசீலிப்போம். முதலில், இது அமெரிக்கர்களுக்கான படமா, இந்தியர்களுக்கான படமா, அல்லது சொல்லப்படுவது போல உலகப் படமா?

Continue reading “மை நேம் இஸ் கான்: உலகமய மசாலா!”

Advertisements

உன்மத்த நிலையின் 360 டிகிரி!

“ஸீரோ டிகிரியை எழுதிய போது இருந்த அதே உன்மத்த நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். நேற்று காலையிலிருந்து மாலை வரை எழுதினேன். அதையெல்லாம் என் சுயநினைவிலிருந்து எழுதினேன் என்று … Continue reading உன்மத்த நிலையின் 360 டிகிரி!