முள்கம்பி வேலிகள்!

ஒவ்வொரு நாளும் செய்தித்தாள் வரிகளில் இந்த இரண்டு சொற்களில் நின்று தயங்குகின்றன கண்கள். உறைந்து நிற்கும் புகைப்படத்திலிருந்து ஒரு மெளன ஓலம் மெல்ல எழும்பி காதுகளை அடைக்கின்றது. சட்டெனக் கடந்து தாள் திருப்புகையில், சடாரென அடங்குகிறது வலி. செய்தித்தாளை மூடி வைக்கையில் கண்களுக்குள் மெல்ல எழும்பும், ஒரு கப்பல்... ஆப்பிரிக்காவில் பிடிக்கப்பட்ட கறுப்பின அடிமைகள், சரக்குகளோடும், கால்நடைகளோடும் கொத்தாக மூட்டை கட்டப்பட்டு, அமெரிக்காவிற்கு பயணிக்கும் ஒரு கப்பல்... நான் வாழாத காலத்தின் வரலாற்றுக் காட்சி விரிதலின் தொடர்ச்சியில்,... Continue Reading →

என்.ராமாயணம் – வீதி நாடகம்!

புகைப்பட ஆக்கம்: தோழர் கலகம் சூத்திரதாரி: பெரியோர்களே,தாய்மார்களே! கூடி நிற்கும் பொதுமக்களே! வரலாற்றுச்சிறப்புமிக்க நாடகத்தை காண வந்திருக்கும் மகாஜனங்களே! இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற காவியம் இதோ ஆரம்பமாகவிருக்கிறது! என்.ராமாயணம்! என் ஃபார் நாரதர்! அதாவது நாரதர் ராமாயணம்! அதாகப்பட்டது என்னவெனில், பன்னெடுங்காலாமாய் பரந்து விரிந்த ஆரியப் பண்பாட்டை சீரும் சிறப்புமாய் விந்திய மலைக்கு அப்பால் வளர்த்தெடுத்த பெருமகனாரும், சாட்சாத் மகா விஷ்ணுவின் மவுண்ட்ரோடு கொ.ப.செ-வாக கொடி நாட்டிய கோமானும், நல்லதை தீயதாகவும், தீயதை நல்லதாகவும் மாற்றும் மகா... Continue Reading →

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்?

இவ்வியக்கத்தின் சமீபத்திய -லேட்டஸ்ட்- வரவு, 'போராளி' தமிழிசை செளந்தர் ராஜன். யார் இந்த தமிழிசை செளந்தர் ராஜன்? பா.ஜ.க வின் தமிழகப் பிரமுகர். எந்த பா.ஜ.க? விடுதலைப் புலிகள் இசுலாமியர் மீது நடத்திய தாக்குதல்களினால் ஆர்வமுற்று, அவ்வமைப்பு 'இந்துக்களுக்கான' அமைப்பு எனப் பாராட்டிய பால்தாக்கரேயின் உடன் பிறப்பு. பா.ஜ.கவும் ஈழத்தமிழர்களுக்காகப் போராடப் போகிறதாம். என்ன வரலாற்று வினோதம்? ஒருவர் கலைஞரைத் திட்டுகிறார். ஒருவர் மன்மோகன் சிங்கைத் திட்டுகிறார். மறந்து கூட யாரும் ஜெயலலிதாவைப் பற்றி, சோவைப் பற்றி... Continue Reading →

நெருப்பு!

கருகிக் கிடக்கிறதொரு உயிர். நேற்றுத்தான் புரிந்தது அதற்குள் கனன்று கொண்டிருந்திருக்கிறதொரு புயல். எத்தனை சொற் சிலம்பங்கள், மேடைச் சவடால்கள், கட்டுரைகள், கவிதைகள்? ஒற்றைக் கணத்தில் நெருப்பினால் பதிலளித்து கடந்து சென்று விட்டாய் முத்துக்குமார். உனக்கு இரங்கற்பா பாடுவது உன்னைச் சிறுமைப்படுத்தும். நீ விட்டுச் சென்ற நெருப்புத் துளிகள் எமக்குள் கனல்கின்றன. அவை பரவும். திசையெங்கும் எரியும். பின்குறிப்பு: முத்துக்குமாரின் வீரமரணத்தை நினைவில் கொள்ளும் வேளையில், நேற்று இலங்கை வங்கி தாக்கப்பட்டதே பின்பற்ற வேண்டிய உதாரணம். இது மேலும்... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑