நீ எங்கள் மூதாதை!

நீ எங்கள் மூதாதை!

நான் இணைந்திருந்த கம்யூனிஸ்டுக் கட்சியை விட்டு வெளியேறிய பின்னால், நிகழ்ந்த வாசிப்பு, பலருடனான உரையாடல்கள் ஆகியவை, கலைஞர் அல்லது திமுக குறித்த கறுப்பு வெள்ளைப் பார்வையை முற்றிலுமாக தகர்த்தது. இப்பொழுது யோசிக்கையில், ஒரு மாபெரும் சமூக மாற்றத்தை பெரும்பாலும் hindsight-ல்தான் புரிந்து கொள்ள முடியும் என்பதும், பல சமயங்களில் ‘சமரசவாதிகள்’ வரலாற்றில் குறிப்பிடத்தக்க நேர்மறைப் பங்காற்றுகிறார்கள் என்பதும் மெல்லப் புரிகிறது. Continue reading நீ எங்கள் மூதாதை!

Advertisements
காய சண்டிகை பசியாறும் போழ்தில்…

காய சண்டிகை பசியாறும் போழ்தில்…

எங்கிருந்தோ காய சண்டிகை
நாமனைவரும் அறிந்த காரணத்தால்
செவிப்பறைகள் அதிர்ந்து
இரத்தம் கசியும் வண்ணம் பெருங்குரலெடுத்து அழுதாள். Continue reading காய சண்டிகை பசியாறும் போழ்தில்…

லுமும்பா: இரத்தம் தோய்ந்த வரலாறு!

குறிப்பு: கடந்த ஜனவரி 17-ஆம் தேதியுடன், ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள காங்கோவின் தேச விடுதலை நாயகன் பத்ரீஸ் லுமும்பா படுகொலை செய்யப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து விட்டன. அவர் காங்கோவிலுள்ள கடாங்கா மாகாணத்தில், கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரைப் படுகொலை செய்த புனிதக் கூட்டணி, அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, பெல்ஜிய அரசு, காங்கோவை சூறையாடிய சுரங்க நிறுவனங்கள் மற்றும் மக்களை கட்டுப்பாட்டில் வைக்க முயன்ற கூலிப்படைகள் என நீள்கிறது. ஐம்பதாண்டுகள் கழிந்தும் மாறாத வடுக்களினால், ஆப்பிரிக்காவில் லுமூம்பாவை நினைவு கூறுவோரின் நம்பிக்கை தொலைத்த  விழிகளில், இழப்பின் துயரத்தையும், ஆத்திரத்தையும் நாம் இன்றும் காணலாம். பத்தாண்டுகளுக்கு முன்பு மைக் ஈலி என்பவர் எழுதியதும், தற்பொழுது கசாமா எனும் இணைய தளத்தில் அவரால் திருத்தி எழுதப்பட்டு வெளியிடப்பட்டதுமான கட்டுரை கீழே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

பதிவை PDF கோப்பாகத் தரவிறக்கம் செய்யவும், அச்சிடவும்: http://bit.ly/hJW1IZ

பத்ரீஸ் லுமும்பா: காங்கோ எழுச்சியும், படுகொலையும்!

மைக் ஈலி

1960, ஜூலை 30- ஆம் நாள், உலகம் முழுவதும் காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடி வந்த கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை தரும் நாளாகவிருந்தது. ‘பெல்ஜியன் காங்கோவின்’ மக்களை ஈவிரக்கமின்றி சுரண்டிக் கொழுத்த பெல்ஜிய காலனியாதிக்கவாதிகள், தாது வளம் நிறைந்த மண்ணை விட்டு வெளியேறவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திரத்தை வழங்கவுமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். காங்கோ எனும் குடியரசு மலர்நதது, அதன் தலைவர்களில் ஒருவர்தான்  பத்ரீஸ் லுமும்பா! காலனிய எதிர்ப்பு கனன்று கொண்டிருந்த, துடிப்பு மிக்க இளம் அரசியல்வாதி.
Continue reading “லுமும்பா: இரத்தம் தோய்ந்த வரலாறு!”